போதையை எந்த மதமும் அங்கீகரிக்கவில்லை, இஸ்லாம் மதம் இறுக்கமான கட்டுப்பாடுகளின் ஊடாக போதைப் பொருள் பாவனையை முற்றாகவே தடை செய்துள்ளது, ஆனால் வேலியே பயிரை மேய்வது போல் இஸ்லாமிய மதப் போதகரான சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.சி.எம்.புஹாரி மௌலவி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட போது சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகமட் புஹாரி அப்துல் காதர் எனும் இயற்பெயரைக் கொண்ட 70 வயதுடைய புஹாரி மௌலவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோலாலம்பூருக்கு எபிடரின் எனும் போதைப் பொருளை கடத்த முற்பட்ட போது விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புஹாரி மௌலவி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சம்மாந்துறையில் உள்ள இல்லத்தை, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி தஹநாயக்க மற்றும் பொலிஸ் நிலைய பெருங்குற்ற பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.இப்றாகிம் தலைமையிலான குழுவினர் தேடுதல் நடாத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.