தந்தை செல்வாவின் நினைவு தினக் கூட்டம் நேற்று 2012.04.26 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது அங்கு உரையாற்ற வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சருமான சொல்லின் செல்வர் செல்லையா ராஜதுரைக்கு கோடரிக்காம்பாகச் செயற்பட்டு வரும் சிவாஜிலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடிப் போராட்டம் நடாத்தினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழீழ விடுதலை இயக்கம் எனும் ரெலோ அமைப்பு தடை செய்யப்பட்டு யாழ்ப்பாணம் அடங்கலாக தமிழர் பிரதேசங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட போது இலங்கை இந்திய ஒப்பத்தத்தின் ஊடாக இந்திய இராணுவத்தின் உதவியுடன் அரசியல் வேலைத்திட்டம் எனும் போர்வையில் தமிழ் மக்களுக்கு எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தது.
ஜனாதிபதி பிரேமதாசவுடன் கைகோர்த்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் ரெலோ மீதான களையெடுப்பை ஆரம்பித்ததும் ஓடி ஒழித்த சிவாஜிலிங்கம் சார்ந்த ரெலோ அமைப்பு, தமிழர் பிரதேசங்களில் கால் வைக்க முடியாத நிலை ஏற்பட்டது, ஜனாதிபதியாக சந்திரிக்கா குமாரணதுங்க பதவி ஏற்றதும் பம்பலப்பிட்டியில் தலைமையத்தை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுக்கும் வேலையை செவ்வனே செய்து வந்தது ரெலோ அமைப்பு.
சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தேசியப் பாதுகாப்பு நிதியினைப் பெற்று சுகபோக வாழ்க்கையை நடாத்தி புலி அழிப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்தனர், இந்தக் காலத்தில் பாராளுமன்ற ஆசனம் முயற்கொம்பாக இருந்ததனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் இணைந்து புலிகளின் மன்னிப்பைப் பெற்று பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொண்டனர்.
யாழ் மண்ணில் இருந்தே துரோகியாக துரத்தப்பட்டு, அரசாங்கத்தின் பாதுகாப்பு நிதியினைப் பெற்று புலி அழிப்பு நிழல் யுத்தத்தை ஆதரித்து வந்த கோடரிக்காம்பான சிவாஜிலிங்கம் மட்டக்களப்பில் கால் நூற்றாண்டுக்கு மேலாக 33 வருடங்கள் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த செல்லையா ராஜதுரையை விமர்சிப்பதற்கு அருகதை அற்றவர்.
பதவி மோகம் கொண்டலையும் கோடரிக்காம்பான சிவாஜிலிங்கம் செல்லாக் காசி என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்ததே!, சுய விளம்பரத்துக்காக இதைப்போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளிலும் சிவாஜிலிங்கம் ஈடுபடுவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.