தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாக இருந்து சுய வாழ்க்கைக்குத் திரும்பிய நிரஞ்சன் சங்கீதா காதல் தம்பதிகள் கடந்த 2012.01.16 ஆம் திகதி கொடிய வறுமைக்கு முகம் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். நிரஞ்சன் விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் காலை இழந்ததுடன், காதலி சங்கீதாவைத் திருமணம் செய்து பால்ப்பண்ணை, முறிப்பு, முள்ளியவளை எனும் விலாசத்தில் வசித்து வந்தார்.
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் பெரும் பணச் செலவில் விழாக்களை நடாத்தி போராளிகளின் பேரால் சொத்துக்களைச் சேர்த்து முதலாளிகளாகிக் கொண்டு வருகின்றனர், ஆனால் இந்த போராட்டத்திற்காக அங்கத்தினை இழந்து வாழ முடியாமல் பலர் வறுமையில் தாயகத்தில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது புலம்பெயர்ந்த பல விடுதலைப் புலிகளுக்குத் தெரிவதில்லை.
தற்கொலை செய்து கொண்ட நிரஞ்சன், சங்கீதா தம்பதிகள் உறவினர்களுக்கு உருக்கமான இறுதிக் கடிதத்தினை எழுதி வைத்து விட்டு மரணத்திலும் இணைந்து பிரியாவிடை பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.