யாழ் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று 2012.01.16 ஆம் திகதி யாழ்ப்பாணம் அரசாங்க செயலகத்தில் நடைப்பெற்றது, உண்மையற்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவருவது தொடர்பாகவும், அறிக்கைகளை பொறுப்பற்று வழங்கக் கூடாதெனவும் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் கருத்துத் தெரிவித்தார்.
பா.உ. சந்திரகுமாரின் உரையாற்றும் போது குறுக்கிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் அநாகரீமாக தனது எதிர்க் கருத்தினைப் பதிவு செய்துள்ளார், இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், ஒரு கௌரவ உறுப்பினர் சபை ஒன்றில் நாகரீமாக நடந்துகொள்ள வேண்டும், அநாகரீகமாக நடந்து கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்ட போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் பா.உ. ஶ்ரீதரன் உணர்ச்சி வசப்பட்டு அநாகரீகமாக கருத்தினை வெளிப்படுத்தினார்.
இந் நிகழ்வுக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலர்கள், மற்றும் திணைக்கள உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலதிக தேடலுக்கு:

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.