சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து வெளிவரும் "தினக்கதிர்" எனும் புலிச்சார்பு இணைய பத்திரிகையின் ஆசிரியர் இரா துரைரெத்தினம் அவர்கள், தனது வரலாற்றில் நினைவு கொள்ளத்தக்க விடயங்களை தொடராக பதிவேற்றம் செய்து வருகின்றார், இராமசாமி துரைரெத்தினம் நேர்மையான ஊடகவியலாளரென சிலரால் கூறப்படுகின்ற போதிலும் விடுதலைப் புலிகளுக்கான வகுப்புவாத சிந்தனை கொண்ட இவர், பல தமிழர்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுச் சரிக்கப்பட்ட போதிலும் மற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போதும் விடுதலைப் புலிகள் செய்தவை சரியானதென வியாக்கியானம் செய்ய முனைந்தவர் என்பது பல புத்திஜீவிகளின் கருத்தாகும், இதனால் துரைரெத்தினம் பற்றிய மாற்றுக் கருத்துக்களும் பரவலாக உள்ளன.
2012 ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து தனது இணைய ஊடகமான தினக்கதிரில் தொடர் கட்டுரையை எழுதி வருகின்றார், இதில் இரண்டு பாகங்கள் இன்று வரை ஞாயிறு பிரசுரமாக வெளியாகியுள்ளன, ஊடகவியலாளர் இரா துரைரெத்தினத்தின் தொடர் கட்டுரை இடையூறுகளின்றி தொடர்ச்சியாக வெளிவர வேண்டும்.
- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள் -- பாகம் - 1
- பத்திரிகையாளர் என்ற நிலையிலிருந்து நான் செய்த தவறு! – பாகம் - 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.