உலகிலே கெரில்லா தாக்குதலுக்கு தனித்துவம் வாய்ந்ததென கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பூண்டோடு சரிய காரணமாக இருந்தவருள் முதன்மையானவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் என்றால் அதில் மிகையில்லை.
சிங்கள மக்களின் விவசாயப் பாவனைக்குத் தேவையான நீரை செல்லவிடாமல் மாவிலாறு அணைக்கட்டை பூட்டி நீரைத் தடுத்து நிறுத்தி சிங்களப் பெரும்பான்மை மக்களிடம், அத்தியாவசியத் தேவையான தண்ணீரைத் தடுத்து நிறுத்திய தமிழர்கள் மனிதாபிமானமற்றவர்கள் எனும் அவப் பெயரை அண்மைக் காலத்தில் ஏற்படுத்தியவர் எழிலன்.
இவரின் முறைகேடான நடவடிக்கையைத் தொடர்ந்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மூதூர், சம்பூர், புலிபாய்ந்தகல், கஞ்சிகுடியாறு, குடும்பிமலை.... போன்றன தொடராக சிங்களப் படையினர் வசமாகி இறுதியாக மன்னாரின் சகல பகுதிகளையும் இழந்து பூநகரி அடங்கலாக விடுதலைப் புலிகளின் இதயப் பகுதியான வன்னியும் பறிபோனது.
எதிர்காலத்தைச் சரியாக எடை போடாது குறுகிய நோக்கத்துடன் செயற்பட்டதாலே மாவிலாறில் தொடங்கிய அழிவு முள்ளிவாய்க்காலில் சென்று முடிந்தது, இந்த அழிவு யுத்தத்தில் சொல்லொணா துன்பங்களை, அவலங்களை எமது இனம் அனுபவித்து விட்டது.
ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சரணடைந்த எழிலனை மறைமுகமான இடத்தில் படையினர் தடுத்து வைத்துள்ளதாக எழிலனின் மனைவி ஆனந்தி சசிகரன் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இந்த அழிவு யுத்தம் பல அறிவுஜீவிகளை கொன்றொழித்து விட்டது, தமிழர்களின் எதிர்காலத்தை திட்டமிட்டு நகர்த்தக் கூடிய எத்தனையோ புத்திமான்கள் இல்லாமல் போய் விட்டார்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினுள்ளும் அழிவு யுத்தத்தை விரும்பாத பல உறுப்பினர்கள் மௌனியாக இருந்துள்ளார்கள், இவ்வாறு மக்களின் நலன் கருதி வாழ்ந்த மக்கள் பலர் இருக்க அழிவுக்காக செயற்பட்ட எழிலனை இப்போது ஊடகங்கள் தூக்கிப் பிடிப்பதன் மர்மம் என்ன!
இந்த குழு முன்பு ஆஜாரான விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தன்னுடைய கணவர் எழிலன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதை தான் கண்டதாகவும், அதன் பின்னர் அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என கூறியுள்ளார். அதே போன்று இன்னும் பல நூறு போராளிகளும் சரண் அடைந்ததாகவும் அவர்களையும் தனது கணவரையும் இந்த குழு கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார் அந்த சகோதரியின் வேதனையும் தேவையும் நியாம் அவருக்கு நியாம் கிடைக்க வேண்டும் வேதனையும் வலியும் பசியும் எல்லோருக்கும் பொதுவானதுதான் என்பதையும் புலிகளால் கடத்தி செல்லப்பட்டு இன்றுவரை காணாமல் அந்த உறவுகளும் தேடுகின்றன இதை எந்த நல்லிணக்கக் குழு முன் சொல்வது வேதனையும் வழியும் பசியும் எல்லோருக்கும் பொதுவானதுதான் என்பதை புலிகள்தான் புரிந்து கொள்ளவில்லை என்பதை புலிகளின் உறவுகள் புரிந்துகொண்டால் சரி
பதிலளிநீக்குhttp://mullaimukaam.blogspot.com/