2001.09.11 ஆம் நாள் உலகத்தையே உசுப்பியெடுத்த பயங்கரவாதத்தின் உக்கிர நாள், பயங்கரவாதம் தலை விரித்தாடிய கோர நாள், பகிரங்கமாக ஏகாதிபத்தியத்துக்கு சம்மட்டி கொண்டு உச்சந்தலையில் அடித்த வரலாறு மறக்காத நாள், ஒசாமாவை உலகமே உற்று நோக்க ஆரம்பித்த நாள்.
இத் தினத்தினைத் தொடர்ந்தே பயங்கரவாதத்தைப் பூண்டோடு ஒழிக்க வேண்டுமென உலகம் சபதம் எடுத்த நாள்.
அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் விமானத் தாக்குதலுக்குள்ளாகி 2996 பேருக்கும் அதிகமானோரை ஒரே நொடியில் பலியெடுத்த அகோர நாளை ஒன்பது வருடங்களாக அமெரிக்கா நினைவு கூர்ந்து வருகின்றது.
இந்த நாளை சர்வதேச குர் ஆன் எரிப்பு தினமாக அனுட்டிக்குமாறு அமெரிக்காவின் புளோரிடா மாநில கிருஸ்தவ தேவாலய பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அறிவித்திருந்தார், இவரின் அறிவிப்பை உச்சக்கட்ட பயங்கரவாதமாக கருதிய "த நஷனல் அசோசியேசன் ஆப் எவான்ஜெலிக்கல்ஸ் (NAE)" என்ற கிறிஸ்தவ அமைப்பும், பாப்பரசரும் குர் ஆன் எரிப்பு தின நிகழ்வைக் கைவிட வேண்டுமெனவும் அப்படிச் செய்து மதவாதத்தை வளர்க்க வேண்டாமென பொது மக்களைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை இடம்பெறவிருந்த குர் ஆன் எதிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.
அமெரிக்க டொலர் நாணயக் குறியீட்டின் இலச்சனை $ இதுவாகும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள S உம் நீளவாக்கில் உள்ள இரட்டைக் கோடுகளும் செப்டம்பர் 11 ஐக் குறித்துள்ளதெனவும் சில சோதிடர்கள் கூறுவதாக தகவல்கள் கூறுகின்றன, தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
பதிலளிநீக்கு46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
ஏற்பாட்டில் இருக்கக் கூடிய விடயங்களைக் குறிப்பிட்டு பின்னூட்டமிட்டமைக்கு நன்றி பிளாகர் மெளனம் !
பதிலளிநீக்கு