வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கிராம மற்றும் சிறு நகர அபிவிருத்தி மேம்பாட்டுக்காக கம நெகும எனும் கிராம எழுச்சித் திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதெனவும் இத் திட்டம் அடுத்த மூன்று வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படுமென தகவல்கள் கூறுகின்றன.
இதற்காக 86 மில்லியன் அமெரிக்க டொலர் (9,668 மில்லியன் இலங்கை ரூபா) செலவாகுமென அறிய முடிகின்றது.
சிங்களப் பகுதிகளில் இவ்வளவு காலமும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் தமிழரின் பாரம்பரிய பூமியில் நடக்கவிருப்பது பாராட்டத்தக்கதே!
சிங்களமும், தமிழும் இந்த நாட்டின் உத்தியோக மொழிகளென சட்டம் கூறிய போதிலும் நடைமுறையில் தேடல் அவசியமாகின்றது, தற்போதைய ஜனாதிபதியும் சிறுபான்மையென ஒரு இனம் இல்லையென குறிப்பிடும் இக் கால கட்டத்தில் எதற்காக "கம நெகும" எனும் சிங்களத்தில் அமைந்த கிராம எழுச்சி எனும் வாசகம்.
தமிழில் "கிராம எழுச்சி" எனும் சொல்லாட்சி இருக்கும் போது, கம நெகும எனும் வாசகம் தேவையானதல்ல, கிராம எழுச்சி எனும் சொல்லாட்சிக்கு முன்னுரிமை கொடுப்பது சிறந்தது.
சிங்களப் பகுதிகளில் செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு சிங்களத்தில் கம நெகும எனும் வாசகத்துக்கு முன்னுரிமை கொடுத்து தமிழில் கிராம எழுச்சி என்பதை இணை வாசகமாகக் கொடுக்கலாம், இதேபோல் தமிழ்ப் பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களுக்கும் தமிழில் கிராம எழுச்சியெனவும், இணை வாசகமாக சிங்களத்தில் கமநெகும எனவும் வடிவமைத்தால் பிரச்சனைகளை சுலபமாகத் தீர்த்துக் கொள்ள வழிகோலும்.
தங்களது சமூக ஆய்வு சிந்திக்க வைக்கிறது....
பதிலளிநீக்குநன்றி ம.தி.சுதா.
பதிலளிநீக்குஇது எப்போதோ நடக்க வேண்டியது விட்டார்களா சண்டாளர்கள் mullaimukaam.blogspot.com
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி, முல்லை முகாம் JKR.
பதிலளிநீக்கு