விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமாகச் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து வருகின்றார்கள் இந்து சமயத்தவர்கள். இந்தியாவில் இவ்வளவு காலமும் இருந்து வந்த பிள்ளையாரைக் கரைக்கும் பாரம்பரியம் இப்போது ஐரோப்பாவுக்கும் தாவி விட்டது, இந்த வருடம் முதன் முதலாக பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தினால் 2010.09.19 ஆம் திகதியன்று பெரிய விநாயகர் சிலை செய்யப்பட்டு நீர் நிலைக்குக் கொண்டு வரப்பட்டு நீரில் கரைக்கப்பட்டது, இதில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர்.
விநாயகர் சிலையைக் கடலில் கரைப்பதற்குரிய காரணத்தை இந்து சமயம் எடுத்துக் கூறுகின்றது, ஆனால் வோல்த்தம்ஸ்ரோ விநாயகர் சிலை கரைக்கக் கொண்டு செல்லப்பட்ட போது, அச் சிலையைக் கரைப்பதற்கான முழுப் பொறுப்பையும் கொண்ட அர்ச்சகர், களிமண்ணும், நீரும் கலந்து செய்யப்பட்ட இந்த விநாயகர் சிலையைக் கரைப்பதற்கான தத்துவமானது நீரும், மண்ணும் இந்த உலகத்தில் அழிக்க முடியாதது என்பதால் விநாயகர் சிலையைக் கரைக்கின்றோம் என கருத்துரைத்தார்.
விநாயகர் கரைப்புக்கான தத்துவ விளக்கத்தினை மக்களுடன் சரியாகப் பகிர்ந்து கொள்ளத் தெரியாமல் அர்ச்சகர் இருந்திருக்கலாம், அவரின் கருத்தில் அனேகமானோருக்கு உடன்பாடில்லை என்பதால் இது பற்றிய விடயங்கள் தெரிந்தவர்கள் விநாயகர் சிலை கரைப்புக்கான காரணத்தினை அறியத் தாருங்கள்.
ஏனோ தெரியல இலங்கையில் இது இன்னும் பரவவில்லை.. எந்த ஐயர் சம்பாதிக்க வழி தெரியலியிண்ணா இதை கொண்டவரப் போகிறாரோ தெரியல...
பதிலளிநீக்குஉங்களின் ஊகம் சரியானதே, ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் வாழ்ந்து கொண்டே இருப்பர்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுதா.