ஸ்ரீலங்காவில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டம் 2008.12.01 ஆம் திகதி நேற்று மாலை ஆரம்பமாகியது, இதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இரு தினங்களுக்குக் கலந்து கொள்ள மாட்டார்களென அக் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் நேற்று ஆரம்பமான குழுக் கூட்டத்துக்கு ரிஎம்விபி யின் கருணா அணியினர் இருவர் கலந்து கொள்ள வந்த போது சர்ச்சை ஏற்பட்டது. இக் கட்சியின் பெயரில் கருணா, பிள்ளையான் என இரு அணிகள் உருவாகியுள்ளதால் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் எவ் அணியை அனுமதிப்பது என்பதைத் தீர்மானிப்பதற்காக தேர்தற் திணைக்களத்தின் உதவியை நாடிய போது அக்கட்சியின் தலைவர் திரு.ரகு சுப்ரமணியம் நந்தகோபன், பொதுச் செயலர் திரு.ஏ.கைலேஸ்வரராஜா எனத் தெரிய வந்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சு.நந்தகோபன் கொல்லப்பட்டுள்ளதால் புதிய தலைவர் மற்றும் பொதுச்செயலர் யார் என்பதை எவ் அணியினர் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கின்றார்களோ அவர்கள் சார் பிரதிநிதிகளே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்திலும் கலந்து கொள்ள அனுமதிப்படுவர், இல்லையேல் இக் கட்சி சார்பில் முன்னர் கலந்து கொண்ட பிரதிநிதிகளான சிவகீதா பிரபாகரன் மற்றும் அஸாத் மௌலானா இருவரும் கலந்து கொள்ளலாமென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் நேற்றைய கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஏக தலைவர் தானே என்றும், தான் நியமித்துள்ள இரு பிரதிநிதிகளையும் எமது கட்சி சார்பாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்குமாறு பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுக்கு திரு.கருணா வினாயகமூர்த்தி முரளிதரன் கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கேற்ப நேற்றைய சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்திற் கலந்து கொள்வதற்கென வருகை தந்த கருணா அணியைச் சேர்ந்த திரு.எஸ்.கமலநாதன் மற்றும் திரு.கே.சின்னையா இருவரும் அனுமதி கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.
கருணா, பிள்ளையான் விரிசலினால் ரகு நந்தகோபன் கொல்லப்பட்டுள்ளதாக அறியப்பட்ட போதிலும், இவர்களிடையே இன்னும் தொடரும் விரும்பத்தகாத பதவி வெறியினால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்படவுள்ளனவோ தெரியவில்லை.
ஈழவன் சுகமா?ஏதோ மனம் குழப்பமாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.சோர்ந்துவிட வேண்டாம்.
பதிலளிநீக்குஇப்படிப் பட்டவர்களால்தானே நின்மதியை இழந்து பரதேசிகளாகத் திரிகிறோம்.அவர்கள் இன்னும் பதவி புகழுக்காகவே பிச்சை எடுத்தபடி.
நன்றி ஹேமா,
பதிலளிநீக்குநீங்கள் சொல்வதிலும் உண்மை உள்ளது.