சனத்தொகைப் பெருக்கத்தால் உலகம் திண்டாடிக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் உலக சனத்தொகை இன்னும் சொற்ப நேரத்தில் (2011.10.31 ஆம் திகதி)7 பில்லியனை(700 கோடி) எட்டுகின்றது. இந்த 7 பில்லியன் சனத்தொகையில் நீங்கள் எத்தனையாவது உறுப்பினர் என்பதை பிபிசி உலக சேவை இணைய இணைப்பின் ஊடாக தெரிவிக்கின்றது.
ஞாயிறு, 30 அக்டோபர், 2011
சனி, 29 அக்டோபர், 2011
விடுதலைப் புலிகளின் தமிழ் இளையோர் அமைப்பின் கட்டமைப்பு - நவரெத்தினம் பிரபாகரன்
செவ்வாய், 25 அக்டோபர், 2011
விடுதலைப் புலிகள் 367 பேருக்கு தீபாவளியை முன்னிட்டு விடுதலை!
தற்காலிகமாக மூடப்படும் விக்கிலீக்ஸ் இணையத் தளம்!
ஞாயிறு, 23 அக்டோபர், 2011
இலங்கையின் போர்க் குற்றம்!, ஆஸ்திரேலிய ஏபிசி தொலைக்காட்சியில் ஈழநதி எனும் மீனா – "தி நேசன்"
இலங்கையில் தமிழ்
மக்கள் மீது 2009ஆம் ஆண்டு
மே
மாதம் இடம்பெற்ற போர்க் குற்றத்தின் நீட்சியாக இலங்கைத் தமிழ்ப் பெண் மீனா என்பவரை ஆதாரம் காட்டி
ஆஸ்திரேலிய ஏ.பி.சி. தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய காட்சிப் பதிவு தொடர்பாக "தி நேசன்" இன்று 2011.10.23 ஆம் திகதி தமிழ்ப் பெண் மீனா பற்றிய மேலதிக தகவல்களை வழங்கியுள்ளது.
திங்கள், 17 அக்டோபர், 2011
தமிழர்கள் நடாத்திய மிருசுவில் கொள்ளைக்கு இன சாயமூட்டிய ஊடகங்கள். - பட இணைப்பு
2011.10.15 ஆம் திகதி சனிக்கிழமை இரவு மிருசுவில், உசன் வடக்கில் உள்ள துரைசிங்கம் தர்சினி என்பவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் பல தரப்பட்ட எழுந்தமான செய்திகள் வெளிவந்துள்ளன, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் தென் பகுதியைச் சேர்ந்த சிங்கள மாணவர்களினால் தமிழர் வீடுகளில் கொள்ளை நடைபெறுவதாக சித்தரிக்கும் பொய்ச் செய்திகளை பதிவேற்றம் செய்து தமிழ் மக்களைக் குழப்பி விட்டு அதில் இன்பம் காண பகீரதப் பிரயத்தனங்களை சில ஊடகங்களும், இணையங்களும் செய்து வருகின்றன.
ஞாயிறு, 16 அக்டோபர், 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடையே ஒற்றுமையில்லை - வினோ பா.உ.
தேர்தல் காலத்தில் மாத்திரம் ஒற்றுமை பற்றிப் பேசி மக்களிடம் வாக்கு வேட்டைக்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தேர்தல் முடிந்ததும் ஒற்றுமையை மறந்து விடுகின்றனர், இவ் ஒற்றுமையின்மை நீடிக்குமானால் எம்மால் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதரலிங்கம் 2011.10.15 ஆம் திகதி (நேற்று) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி தொடக்க நிகழ்வில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
புதன், 12 அக்டோபர், 2011
விடுதலைப் புலிகளால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட கவிஞை செல்விக்கு நினைவேந்தல்.
சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் மற்றும் நாவலாசிரியர்களின் கூட்டமைப்பான PEN அமைப்பினரால் (Poets Essayists and Novelists) உலகப் புகழ்பெற்ற கவிதைக்கான சர்வதேச விருது (Poetry International Award) பெற்ற செல்வி எனப்படும் சேமமடுவைச் சேர்ந்த செல்வநிதி தியாகராசா 1991.08.30 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதையின் பின்னர் கொல்லப்பட்டார்.
குறியீடு :
கவிஞை செல்வி,
நினைவேந்தல்,
படுகொலை,
விடுதலைப் புலிகள்
செவ்வாய், 11 அக்டோபர், 2011
திருட்டுப் பதிவில் ஊடகம் நடாத்தும் "எழு தமிழா" இணையம்.
"கோத்தாவின் பிரதமர் கனவு தவிடு பொடியானது! மனோவின் கட்சி ஆட்சியைத் தீர்மானிக்கும்!" எனும் தலைப்பில் நேற்று களத்துமேடு பதிவு செய்த கட்டுரையை அனுமதியின்றி "எழு தமிழா" எனும் இணையத் தளம் பதிவேற்றம் செய்துள்ளமை கண்டனத்துக்கு உரியது. வலைப் பதிவர்களின் ஆக்கங்களை அனுமதியின்றி மீள் பதிவேற்றம் செய்வதானது ஊடக விபச்சாரத்துக்கு ஒப்பானதாகும், இல்லையேல் குறைந்தபட்சம் ஆக்கத்தின் இறுதியில் பெறப்பட்ட தளத்தினை நன்றியுடன் அடிக் குறிப்பில் காட்ட வேண்டியது ஊடக தர்மமாகும்.
திங்கள், 10 அக்டோபர், 2011
கோத்தாவின் பிரதமர் கனவு தவிடு பொடியானது! மனோவின் கட்சி ஆட்சியைத் தீர்மானிக்கும்!
குறியீடு :
உள்ளூராட்சி மன்றம்,
கொழும்பு,
தேர்தல்
சனி, 8 அக்டோபர், 2011
வெள்ளி, 7 அக்டோபர், 2011
மீண்டும் யாழில் தலைதூக்கியுள்ள சாதி வெறி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்துக்கு உட்பட்ட வலிகாமம் தெற்கு பிரதேசசபை (சுன்னாகம்) வெற்றிடமாகவுள்ள வாகன சாரதி பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப் பதவிக்காக அங்கு நீண்ட காலமாக சிற்றூழியராகக் கடமை புரியும் ஊழியர் ஒருவர் விண்ணப்பித்திருந்தார், அவரின் சாதியினைக் காரணம் காட்டிய வலிகாமம் தெற்கு பிரதேசசபைத் தலைவர் தியாகராசா பிரகாஷ், அவ் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளதாக அறிய முடிகின்றது.
வியாழன், 6 அக்டோபர், 2011
நவராத்திரி விழாவும் தமிழ்வின் இணையத்தின் அந்தகப் பார்வையும்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)