" இலங்கை பாராளுமன்றத்தில் இன்று நவராத்திரி விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியைத் தவிர வேறெந்த தமிழ் அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ கலந்துகொள்ளவில்லை. இன்று வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாயின.
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் சிங்கள, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும் அரசாங்க தரப்பின் சார்பாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தமிழ் அமைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ எவரும் கலந்துகொள்ளாமை குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு வருகை தந்திருந்த உயர் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது."
மேலே காணப்படும் தமிழ்வின் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள படத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு அருகில் அர்ச்சகருக்குப் பின் புறத்தில் காணப்படுபவர் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும், ஆனால் தமிழ்வின் முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் புதைக்க முனைவது வேடிக்கையாக உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கும்பிட்டவாறு காட்சி தருவதனை பார்வைத் திறனுள்ள அனைவரும் சாதாரண கண்ணினால் காணக் கூடியவாறு உள்ளது.
செய்திகளை இனம் காணத் தெரியாமல் மனம் போகும் பாதையில் திரிபுபட்ட விடயங்களை, புலம்பெயர்ந்த மக்களின் மனதில் விச விதைகளாக விதைத்து வேடிக்கை பார்க்கும் தமிழ்வின் போன்ற இணையத் தளங்கள் விமர்சனத்துக்கு உட்பட்டவை.
கடந்த காலங்களிலும் தமிழ்வின் தரவேற்றிய பிழையான செய்திகள் களத்துமேட்டினால் தோலுரித்துக் காட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்வின் தனது கண்ணைப் பரிசோதிக்குமா!
தொடர்பான செய்தி: தமிழ்வின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.