தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்துக்கு உட்பட்ட வலிகாமம் தெற்கு பிரதேசசபை (சுன்னாகம்) வெற்றிடமாகவுள்ள வாகன சாரதி பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப் பதவிக்காக அங்கு நீண்ட காலமாக சிற்றூழியராகக் கடமை புரியும் ஊழியர் ஒருவர் விண்ணப்பித்திருந்தார், அவரின் சாதியினைக் காரணம் காட்டிய வலிகாமம் தெற்கு பிரதேசசபைத் தலைவர் தியாகராசா பிரகாஷ், அவ் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளதாக அறிய முடிகின்றது.
சாதியினைக் காரணம் காட்டி விண்ணப்பத்தினை பிரதேசசபைத் தலைவர் நிராகரித்ததனைத் தொடர்ந்து அங்கு கடமை புரியும் சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்துடன் கூடிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
கடந்த சனிக்கிழமை உழவு எந்திர சாரதியினால் வேலை மேற்பார்வையாளர் தாக்கப்பட்டதைக் காரணம் காட்டி ஊழியர்கள் பிரதேச செயலாளருக்கு கொடுத்த மனுவைத் தொடர்ந்து ஒழுக்காற்று விசாரணைக்காக இடைநிறுத்தப்பட்ட சாரதிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்காக விண்ணப்பம் கோரப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.