சனி, 30 ஜூலை, 2011

ஊடகவியலாளர் குகநாதனை தாக்கியவர்கள் யார்!

2011.07.29 ஆம் திகதி (நேற்று) மாலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் "உதயன்" பத்திரிகையின் செய்தி ஆசிரியரான 59 வயதுடைய ஞானசுந்தரம் குகநாதன் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெள்ளி, 29 ஜூலை, 2011

மௌனித்த இதயவீணை வானொலி மீண்டும் குரல் கொடுக்குமா!


ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் நடாத்தி வரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தங்களின் பிரசார நடவடிக்கைக்காக "இதயவீணை" எனும் பகுதி நேர வானொலியினை "இலங்கை வானொலி"க்கூடாக ஒலிபரப்பி வந்தனர், இதனால் அறிய முடியாத பல மறைக்கப்பட்ட செய்திகள் அம்பலத்துக்கு வந்தன.

வியாழன், 28 ஜூலை, 2011

கிழக்கில் தொடரும் நாசகார செயல்களும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வேறு அரசியற் கட்சியை உருவாக்கிக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகத் தெரியவில்லை.

செவ்வாய், 19 ஜூலை, 2011

கைப்பற்றிய பிரதேசசபைகளில் ததேகூ செய்த அபிவிருத்திகள் என்ன?


ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குக் கோரும் அறிக்கையினை பாட்டனின் பேரால் தந்தை வழியாக அரசியல்வாதியாக உள்நுழைந்த சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ளார்.

சனி, 16 ஜூலை, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் போலி முகத்திரையை அம்பலமாக்கவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்


ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி இருப்பதனால், அந்தந்த பிரதேசங்களில் போட்டியிடும் அரசியற்கட்சிகள் மிகவும் சுறுசுறுப்பாக அரசியல் வேட்டையில் இறங்கி மக்களிடம் வாக்குகளை பெற முயன்று வருகின்றார்கள்.

செவ்வாய், 12 ஜூலை, 2011

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2011 ஜூலை 23

எதிர்வரும் 2011. 07.23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஒத்திவைக்கப்பட்ட 65 சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.  அபேட்சகர்கள் வாக்கு வேட்டைக்கு வீடு வீடாகச் சென்று கட்சி சார்ந்த கொள்கைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கதிர்காம கந்தனின் பக்தையின் பரிதாப மரணத்தைத் திசை திருப்பி அரசியல் இலாபமீட்ட பிரசாரம் மேற்கொள்ளும் ஊடகங்கள்!


கதிர்காமம் முருகன் ஆலயத்தைத் தரிசிக்கும் நோக்கத்தில் ஆடி மாத கொடியேற்றத்தினைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களிலும், கால் நடையாகவும் சென்று வழிபாடு நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

திங்கள், 11 ஜூலை, 2011

168 ஆண்டுகளாக பிரித்தானியாவில் பவனி வந்த "நியூஸ் ஒஃப் தி வேல்ட்" பத்திரிகைக்கு மூடு விழா!

பிரித்தானியாவில் 1843 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரை, கடந்த 168 ஆண்டுகளாக பிரசுரமாகி வந்த “நியூஸ் ஒஃப் தி வேல்ட்” (NEWS OF THE WORLD) எனும் பத்திரிகை நேற்று தனது இறுதிப் பதிப்பை வெளியிட்டு வாசகரிடமிருந்து பிரியாவிடை பெற்றது. தனது இறுதிப் பதிப்பின் முதல் பக்கத்தில் தனது பழைய பதிப்புக்களின் படங்களுடன், பெரிய எழுத்தில் “நன்றி, சென்று வருகிறேன்” எனப் பதிவு செய்திருந்தது.

ஞாயிறு, 10 ஜூலை, 2011

பாராளுமன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முகத்திரையைக் கிழிக்க முனைந்த பிரதியமைச்சர் கருணா! - வீடியோ இணைப்பு

கடந்த 2011 ஜூன் 07 ஆம் திகதி பிற்பகல் 2.05 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தனால் பாராளுமன்றத்தில் பிரேரிக்கப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணையின் உரையைத் தொடர்ந்து மாலை 7.25 மணியளவில் உரையாற்றிய பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சந்தர்ப்பவாதப் போக்கினைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

புதன், 6 ஜூலை, 2011

சனல் 4 வீடியோ போர்க் குற்ற ஆதாரத்தை பொய்ப்பிக்க எத்தனிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம்!

பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 அண்மையில் ஒளிபரப்பிய இலங்கையின் போர்க் குற்ற ஆவணமான வீடியோ பதிவு இலங்கை அரசாங்கத்தை சர்வதேசம் திரும்பிப் பார்த்து கேள்வி கேட்கும் நிலையை உருவாக்கியது, இதனால் இலங்கை அரசாங்கம் வெட்கித் தலை குனியும் நிலை ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 5 ஜூலை, 2011

புனர்வாழ்வு பெற்று விடுதலையான 552 முன்னாள் புலிகள் - வீடியோ இணைப்பு

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களின் கடந்த இரு வருடங்களாக தொழிற்பயிற்சிகளைப் பெற்ற பெண்கள் எண்மர் அடங்கலாக 552 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 2011.07.04 ஆம் திகதி (நேற்று) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தினைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----