தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வேறு அரசியற் கட்சியை உருவாக்கிக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகத் தெரியவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்தே துப்பாக்கி ஏந்தி அராஜக அதிகாரத்தை கடைப்பிடித்திருந்த இவர்கள், அரசாங்கத்தின் துணையுடன் அரசியற்கட்சியாக மாற்றமடைந்த பின்பு, வேண்டத்தகாத துர்ப்பாக்கிய சம்பவங்கள் இவர்களால் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டன,
அரசியல் நடவடிக்கைகளை கிழக்கில் வசப்படுத்துவதற்காக தேர்தலுக்கு முகம் கொடுத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசாங்க ஆதரவுடன் நடாத்திய தொல்லைகள் ஏராளம், கிழக்கு மாகாண சபையையும் அத்துடன் சில பிரதேச சபைகளையும் கைப்பற்றிக் கொண்டதுடன் அதிகார மமதை வீரியமடைந்ததுள்ளது.
திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் தரம் ஒன்றில் கல்வி பயின்ற யூட் றெஜி வர்சா என்ற பாலகி 11 மார்ச் 2009 கடத்திக் கப்பம் கோரப்பட்டு கொல்லப்பட்டதுடன் வெளிக்கொணரப்பட்ட இந்த ஆயுததாரிகளின் அராஜகம் தொடர்ந்து கொண்டே இருப்பது வெளிப்படை.
அரசாங்கத்தின் துணை இருப்பதால் எவையும் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு வந்துள்ளன, இறுதியாக வெளியே பேசப்பட்டு வரும் மட்டக்களப்பு புதூர் மக்கள் வங்கி கொள்ளையின் சூத்திரதாரிகள், பிள்ளையானின் சகாக்களான பிரதீப், கண்ணன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளென ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளமையினால், இவர்களின் நாசகார நடவடிக்கைகள் தெரியவந்துள்ளன.
விடுதலைப் போராட்டம் ஈறாக அரசியற்கட்சியென மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளவர்களின், இவ்வாறான நடவடிக்கைகளினால் மக்களின் ஆதரவினை இழப்பதற்கான வாய்ப்பு அதிகம். இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமை என்பதே ஜதார்தம்.
தொடர்புபட்ட செய்திகள்:
http://tamilcnn.com/moreartical.php?newsid=3401&cat=srilanka&sel=current&subcat=4
http://www.tamilwin.com/view.php?2bbcC9VR20aeFJpWc00eccsYjX32ccd15Lsoc4d22OWvT44b34PTQc8bd42wCG55dd0eeJf2ci0e
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.