வவுனியா புனர்வாழ்வு நிலையங்களின் கடந்த இரு வருடங்களாக தொழிற்பயிற்சிகளைப் பெற்ற பெண்கள் எண்மர் அடங்கலாக 552 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 2011.07.04 ஆம் திகதி (நேற்று) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தினைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
புனர்வாழ்வுகள் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீர உட்பட அரச உத்தியோகத்தர்கள் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டர். இலங்கையில் 24 புனர்வாழ்வு நிலையங்கள் இயங்கி வந்ததாகவும், தற்போது உள்ள 8 நிலையங்களின் 2864 பேர் மட்டுமே புனர்வாழ்வு பெற்று வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சுனந்த ரணசிங்க குறிப்பிட்டார்.
நேற்று விடுதலையான 552 பேருக்கும் சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்க ஏதுவாக புனர்வாழ்வு அதிகார சபையினூடாக கடன் பெறுவதர்கான விண்ணப்பப் படிவங்களும் படித்த இளையோருக்கு ஜொப்நெற் ஊடாகத் தொழில்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கான விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.