
ஸ்ரீலங்காவின் அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குச் செல்லும் வவுனியா ஏ-9 ஓமந்தைச் சோதனைச் சாவடியை பொது மக்களின் பாவனைக்காக வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்து விடுவதென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.ஏற்கனவே வாரத்தில் மூன்று நாட்கள் எனும் தற்போதைய நடைமுறையிலிருந்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கோரிக்கைக்கிணங்கி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓமந்தை சோதனைச் சாவடியில் தமது பணிகளை வாரத்தில் ஐந்து நாட்களாக அதிகரிக்கவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஸ்ரீலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி திரு. டூன் வண்டன்ஹோவ் அறிவித்துள்ளார்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.