யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவனும், யாழ்.பல்கலைக்கழக இதழியல் ஊடகவள பயிற்சி நிலைய (எம்.ஆர்.ரி.சி.) மாணவனும் பயிற்சிப் பத்திரிகையாளருமான வயது 22 கொண்ட சகாதேவன் நிலக்ஷன் 01.07.2007 புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் ஊரடங்கு உத்தரவு அமுலிலிருந்த வேளையில் கொக்குவில் கிழக்கிலுள்ள புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள இவரது வீட்டினுள் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களுட்பட அப்பாவிப் பொதுமக்கள் ஆயுததாரிகளினால் கொல்லப்பட்டு வருவது நிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச ரீதியில் குரலெழுப்பட்டு வந்த போதிலும் எவரும் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை, இறப்புக்களும் இழப்புக்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.
அப்பாவி மனித ஜீவன்களைக் கொல்வதற்கான உரிமைகளை கைவசம் கொண்டுள்ள துப்பாக்கிதாரிகள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், இவ் அராஜக நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.