ஞாயிறு, 13 டிசம்பர், 2009

இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு - 2, சில ஆரம்பக் காட்சிகள்!






இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு - 2 ஆரம்பமாகி விட்டது, மதுவதனனின் அறிமுகத்துடன் பதிவர்களின் ஸ்நேகம் தொடர்கின்றது.

இதில் சிறப்பம்சமாக இணைய வழி சந்திப்பில் கலந்து கொள்ளும் பதிவர்களையும் இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஒலியமைப்பில் சீர் செய்துள்ளமை வரவேற்கத்தக்கது.

சில ஆரம்பக் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

Watch live streaming video from srilankatamilbloggers at livestream.com

வெள்ளி, 4 டிசம்பர், 2009

வலது குறைந்தோருக்கான சர்வதேச தினமும் அரச பேரினவாதமும்!

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் வலது குறைந்தோருக்கான சர்வதேச தினம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதம அதிதியாகக் கொண்டு அலரி மாளிகையில் நடைபெற்றது, டக்ளஸ் தேவானந்தா, போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமாவும் மற்றும் இன்னோரன்ன அதிதிகளும் கலந்து கொண்டு வலது குறைந்தோருக்கான இந் நிகழ்வைச் சிறப்பித்திருந்ததாக ஊடகச் செய்திகள் படங்களுடன் செய்திகளைப் பதிவேற்றி இருந்தன.

முப்பது ஆண்டு கால போய் ஓய்ந்து விட்டதென முரசம் கொட்டிக் கொண்டிருக்கும் அரச பேரினவாதமும் அதன் ஏவலாளர்களும், இந்தப் போரின் எச்சங்களாக வலது குறைந்து எஞ்சியிருக்கும் மக்களை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவூட்டியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும், இன்னும் இதற்கு அப்பால் சென்று முகாம்களில் சித்தசுவாதீனமுற்று, வலது குறைந்து நிர்க்கதியாக முடங்கிப் போயுள்ள தமிழ் உள்ளங்களைப் பார்த்து நேசக்கரத்தினை நீட்டினால் குதூகலமாக இருந்திருக்கும் அல்லவா?

இந்த நிகழ்வை நடத்திய அமைச்சரே தமிழராக இருப்பதால், எமது மக்களின் ஊனமான நிலையை உலகுக்கு உரத்துக் கூற அருமையான சந்தற்பமாக இது அமைந்திருக்கும், அமைச்சு சார் நிகழ்வுகள் தமிழருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல இலங்கை வாழ் சகலருக்கும் தேவையானதென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை, ஆனால் இன்றைய சூழலில் வலது குறைந்து நிர்க்கதியாக அழுது கொண்டிருக்கும் மக்களென்றால் நிவாரணக் கிராமங்களில் வாழும் எமது மக்கள் மாத்திரமே!

"ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம்"

படம்- 1
படம்- 2

திங்கள், 16 நவம்பர், 2009

நோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தலும் கூடவே குடிகொண்டுள்ள பிரதேசவாதமும்!

நோர்வே நாட்டில் வாழும் சில தமிழர்கள் இணைந்து "நோர்வே ஈழத் தமிழர் அவை" எனும் நாமத்தில் நேற்று 2009.12.15 ஆம் திகதி தேர்தலை நாடாத்தினர்.

"# வன்னி வதை முகாம்களில், நாளும் இன்னலுறும் எம்முறவுகளின் இன்னல்களைப் போக்கிடச் சர்வதேச சமூகத்திடம் உரிமையுடன் குரல் கொடுக்கவும்,
# நோர்வே வாழ் தமிழர்களை ஒன்றிணைத்து, அவர்தம் வளர்ச்சிக்காய் வழிவகுக்கவும்,
# வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் தாயக உறவுகளின் நிரந்தரத் தீர்வுக்காய் பணியாற்றிடவும்" எனும் குறிக்கோளுடன் இத் தேர்தலை நடாத்தினர்.

நோர்வேயில் வாழும் வாக்களிக்கத் தகுதியான இலங்கைத் தமிழ் மக்களின் தொகை கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர், நேற்றைய தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 2767 பேராகும், ஆகவே கிட்டத்தட்ட 90 சதவிகிதமான 27,233 பேர் வாக்களிக்கவில்லை எனத் தெரிய வருகின்றது.

10 வீதமான தமிழ் வாக்காளர்கள் அளித்த வாக்குகளின் மூலமே நோர்வே ஈழத் தமிழர் அவை தெரிவாகியுள்ளது தெரியவந்துள்ளது, 90 வீதமான வாக்காளர்கள் இத் தேர்தலை நிராகரித்தமைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, அவற்றில் முதலாவதாக இவ்வமைப்பு விடுதலைப் புலிகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அமைப்பாகவும், மற்றைய காரணியாக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தினை மாத்திரம் பிறப்பிடமாகக் கொண்ட பிரதிநிதிகளை வேட்பாளர்களாக உள்வாங்கிக் கொண்டதும் ஆகும்.

இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அலகுகளாகும், இந்த எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் நோர்வே நாட்டில் வாழும் போது யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இத் தேர்தலுக்கான அபேட்சர்களாக நியமிக்கப்பட்டு தேர்தலும் நடந்து முடிந்துள்ளது, இங்கு உருவாக்கப்பட்டுள்ள பிராந்தியவாதத்தினால் 10 சத விகித வாக்குகளை மட்டுமே இந்த அபேட்சகர்கள் பெறக் கூடிய துர்ப்பாக்கியம் நிகழ்ந்துள்ளது, இதனை வைத்துக் கொண்டு நோர்வே வாழ் தமிழர்களின் பிரதிநிதிகள் தாமென தம்பட்டம் அடிக்கும் நிலை இவர்களுக்கு இல்லையென்பது தெட்டத்தெளிவாகின்றது.

அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது அபேட்சகர்களின் குடும்ப அங்கத்தவர்கள் செலுத்திய வாக்குகளாகவே கணிக்க முடிகின்றது, அவ்வாறே அபேட்சகர்களும் வாக்குகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேசியப் பட்டியலில் உள்ள ஜெயஸ்ரீ பாலசுப்பிரமணியம், ஆ.குமாரசாமி (ஆதி), சனுகாந்த் பரம்சோதி (சனு), ஸ்ரிவன் புஸ்பராஜா கருணசாமி, தயாபரன் பரமானந்தன், திலகவதி சண்முகநாதன், பஞ்சகுலசிங்கம் கந்தையா (Dr. ரமணன்), பியோனார் முக்ஸ்னெஸ் மற்றும் தர்மசீலன் தர்மலிங்கம் போன்றவர்களில் எவரும் யாழ்ப்பாணம் தவிர்ந்த வேறு எந்த இலங்கையின் தமிழ் மக்கள் வாழும் மாவட்ட பிரதிநிதிகளிடமிருந்து தெரிவு செய்யப்படவில்லை.

இந்தத் தெரிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதனை எவராலும் அறிய முடியவில்லை, இதற்கான காரணத்தையும் இந்த அவையினர் அறியத் தரவும் இல்லை.

"இனியாகிலும் நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம்" எனும் தலைப்பில் தேர்தற்குழு 2009.11.14 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கைக்கும் மேற்சொல்லப்பட்ட அபேட்சகர்கள் தெரிவுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கின்றது, யாழ்ப்பாணத்தை மாத்திரம் சொந்தமாகக் கொண்டவர்களை பட்டியலிட்டு பிரதேசவாதத்தை உருவாக்கிவிட்டு இனியாகிலும் நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம் எனக் கூறுவது வேடிக்கையாக இல்லையா?



திங்கள், 2 நவம்பர், 2009

இலங்கை வலைப்பதிவர் மற்றும் அச்சு ஊடகச் சந்திப்பும் இணையவழி ஒலிஒளிச் சீர்கேடும்!


வலைப்பதிவர்கள் மற்றும் அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது, இதனை இணையவழியூடாக கேட்க வசதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தனர், ஆனால் சீராக அதனைக் கேட்கவோ அல்லது பார்க்கவோ முடியாமல் இருக்கின்றது.

இணையவழியூடாக பத்துக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் இந்த நிகழ்வைப் பார்க்க ஆவலோடு காத்து இருப்பதுடன், ஒலி ஒளி அமைப்புக்களைச் சீர்செய்யுங்களென பல தடவைகள் கூறியும் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை.

முதற் தடவை நடைபெற்ற இலங்கை தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வின் நேரடி இணையவழிச் சந்திப்பு சீராக ஒலி ஒளி தடங்கலின்றி இருந்தது, இந் நிகழ்வை தோழர் கௌபாய்மது எனப்படும் மதுவதனன் மௌ.ஏற்பாடு செய்திருந்தார், இவரைப் போன்ற தொழிநுட்ப அறிவுகொண்டவர்கள் யாராவது இந்த ஒலி ஒளித் தடங்கலை நிவர்த்தி செய்யலாமே!

ஞாயிறு, 1 நவம்பர், 2009

வலைப்பதிவர்கள் மற்றும் அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்குமிடையிலான சந்திப்பு!

இலங்கையின் கொழும்பு - 7, ரொறிங்டன் அவனியூ, இலக்கம் - 3 இல் அமைந்துள்ள "இருக்கிறம்" சஞ்சிகை அலுவலகத்தில் நவம்பர் இரண்டாம் நாளாகிய நாளை மாலை 3 மணியளவில் வலைப்பதிவர்கள் மற்றும் அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெற இருக்கின்றது.

இச் சந்திப்பு வலைப்பதிவருக்கான உத்தியோகபூர்வ இரண்டாவது சந்திப்பாக மதிப்பிடப்படுகின்றது, இச்சந்திப்பு சிறப்படைய "களத்துமேடு" வாழ்த்துகின்றது.

இந்தச் சந்திப்பினை இணைய வழியூடாகச் சென்று கலந்து கொள்வதற்கான வாய்ப்பினை தோழர் கௌபாய்மது எனப்படும் மதுவதனன் மௌ.ஏற்பாடு செய்துள்ளார், முதலாவது வலைப்பதிவர் சந்திப்பினை இணைய வழியூடாகவும் பங்குபற்ற வழி வகுத்தவர் மதுவதனன் என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த தடவை ஏற்பட்ட தவறுகள் இனிமேலும் ஏற்படாது என எதிப்பார்க்கப்படுகின்றது.

இந்தச் சந்திப்பானது இலங்கைப் பதிவர்களுக்கு மட்டுமானதா அல்லது சர்வதேச பதிவர்களுக்குமானதா என அறிய முடியவில்லை, தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள்.

வெள்ளி, 30 அக்டோபர், 2009

ஸ்ரீலங்கா கடலில் வைத்து இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்படும் கொடூர வீடியோ பதிவு!

புத்திசுவாதீனமற்ற இளைஞர் ஒருவர் பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தின் மீது கல்வீச்சு நடத்திவிட்டு கடலில் குதித்துத் தப்பி ஓடிய போது துரத்திச் சென்ற ஸ்ரீலங்கா பொலிஸார் அவ்விளைஞனை கடலில் வைத்து அடித்து மூழ்கடித்துக் கொலை செய்துள்ள கொடூர சம்பவத்தினை பம்பலப்பிட்டியில் உள்ள Z Building இல் இருந்து TNL தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் மிகவும் துல்லியமாக வீடியோ காட்சியாகப் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்தினையும் பாதுகாப்பினையும் பேணிக் காக்க வேண்டிய காவற்துறையினர் ஸ்தலத்திலேயே தண்டனையைக் கொடுக்க முனைவது கண்டிக்கப்பட வேண்டியதே, நீதி தேவதை கண் திறப்பாளா?

வியாழன், 22 அக்டோபர், 2009

41,685 பேர் இன்று பரவலாக மீள்குடியேற்றம்!

வன்னி யுத்தத்தில் தப்பித்து வவுனியா நலன்புரி கிராமங்களில் தங்கியிருந்த மக்களின் ஒரு தொகுதியினரான 12,000 குடும்பங்களைச் சேர்ந்த 41,685 பேர் இன்று 22 ஆம் திகதி மீள்குடியேற்றம் செய்யப்படவிருக்கும் செய்தி ஊடகங்களில் முன்னுரிமை பெற்றுள்ளது.

2583 குடும்பங்களைச் சேர்ந்த 8643 பேர் வவுனியாவிலும், 2644 குடும்பங்களைச் சேர்ந்த 6631 பேர் மன்னாரிலும், 4415 குடும்பங்களைச் சேர்ந்த 16,391 பேர் முல்லைத்தீவிலும், 2453 குடும்பங்களைச் சேர்ந்த 10,017 பேர் கிளிநொச்சியிலும் மீள்குடியேற்றம் பெறுகின்றனர்.

180 நாட்களில் துரித மீள்குடியேற்றம் நடக்குமென மே மாதத்தில் உறுதியளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலம் கடந்த நிலையில் நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களை கட்டங்கட்டமாக மீள்குடியேற்றம் செய்ய அதிகாரிகளைப் பணித்த விடயமானது ஆரோக்கியமானதாகவே கருதப்படுகின்றது, இந்நிலையில் அக்டோபர் மாதத்திலும் அதனைத் தொடர்ந்து வரும் காலங்களான இவ் வருட இறுதிக்குள் சகல மக்களையும் மீள்குடியேற்றம் செய்வாரென அரசியல்வாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் கந்தளாய் நெடும் பாலத்தினைத் ஜனாதிபதி ராஜபக்ஷ திறந்து வைத்த போது கூறிய "சொல்வதைச் செய்வேன், செய்வதைச் சொல்வேன்" எனும் வாக்கியங்கள் நிஜமாக வேண்டுமெனில் நிர்க்கதியாக நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்கள் அனைவரும் அவரவர் சொந்த நிலத்தில் மீளக் குடியேற்றம் பெற வேண்டும்.

செய்வாரா மஹிந்த!, பொறுத்திருந்து பார்ப்போம்!

சனி, 29 ஆகஸ்ட், 2009

ஜீ ரீ வி க்கு மூடு விழா ?

புலம் பெயர்ந்த மக்களிடம் தொலைக்காட்சி எனும் பேரில் பல தமிழ் தொலைக்காட்சிகள் கடை விரித்துள்ளன, புலிகளின் பாசிஷ நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் உத்தியை வகுத்து தரிசனம், தென்றல் எனும் வரிசையில் இரண்டு வருட காலமாக ஜீரிவி தொலைக்காட்சி தனது வியாபாரத்தை நடத்தி வந்தது, இதற்கான செலவினங்களை விடுதலைப் புலிகளே பொறுப்பேற்று இருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்திருந்தன, இதனால் இலவசமாக புலிகளின் செயற்பாடுகளை அரங்கேற்ற ஜீரீவி நிர்வாகத்தால் முடிந்தது.

இருப்பினும் இதனை வியாபாரமாக மேற்கொண்டால் பல டொலர்களைச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதில் முனைப்புக் கொண்ட நிர்வாகம் "தரணியெங்கும் தமிழொழி பரவிட" எனும் கோஷத்துடன் சந்தாதாரர்களைத் தேடத் தொடங்கியது, இத் தொலைக்காட்சியில் சந்தாவினைப் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஆட்டம் காணத் தொடங்கியது, இக்காலத்தில் ஸ்ரீலங்கா படையினர் விடுதலைப் புலிகளுக்கான சண்டையைத் தீவிரப்படுத்தி இருந்தனர், இதனால் சந்தா தேடும் படலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததுடன் வன்னி யுத்தத்தில் சிக்குண்ட மக்களை விளம்பரக் காட்சியாக்கி புலம் பெயர் நாடுகளில் வாழும் மக்களின் ஆதரவை கண்ணீர்த் துளிகள் எனும் தொலைக்காட்சி நிகழ்வு மூலம் திரட்டத் தொடங்கினர், இதனால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஜீ ரீவியைப் பார்க்க உந்தப்பட்டனர், இதனை சாதகமாகப் பயன்படுத்த நினைத்த ஜீ ரீவி நிர்வாகம் மீண்டும் சந்தாதாரர்களையும், விளம்பரதாரர்களையும் தேட முற்பட்டனர், எதிர்பார்த்த வருமானம் கிடைக்கத் தவறியதால் மீண்டும் இலவச சேவையை நடாத்த முனைந்தனர்.

கேபி பத்மநாதனின் கைதுக்குப் பின்னர் ஜீ ரீவி தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளினால் கிடைத்து வந்த நிதி முடக்கப்பட்டது, இதனால் தொலைக்காட்சியைத் தொடர்ந்து நடாத்த முடியாத நிலையில் இருக்கும் ஜீ ரீவி நிர்வாகம் இன்று தனது வழமையான நிகழ்ச்சிகளை தற்காலிகமாக நிறுத்தி விட்டு "வடம் பிடிப்போம்" எனும் முழு நாள் நிகழ்ச்சியின் மூலம் இனிமேல் இலவசமாக தொலைக்காட்சியை நடத்த இருப்பதாகவும் அதற்கான தொடர் ஆதரவைத் தருமாறு நேயர்களிடம் மூவர் சேர்ந்து இரத்தல் செய்கின்றார்கள், இதனால் கிடைக்கும் நிதியைக் பெற்றுக் கொண்டு தொலைக்காட்சிக்கு மூடு விழா நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

புலிகளின் அரசியல் வங்குரோத்தும் ஸ்ரீலங்கா அரசின் தமிழின அழிப்பும்!

ஸ்ரீலங்கா பேரினவாதத்தினால் சிற்பான்மை இனமான தமிழர்கள் காலம் காலமாக இன்னல்களை அனுபவித்துக் கொண்டே வருகின்றனர், இதில் இருந்து விடுதலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இளைஞர்கள் திரண்டு விடுதலை இயக்கங்களை நோக்கி வீறுநடை போட்டனர், பல இயக்கங்கள் உருவாகி ஸ்ரீலங்கா படை பலத்துக்கு நிர்க்கதி நிலையை உருவாக்கினர், இதனால் வடக்கின் யாழ் குடா மற்றும் வன்னி நிலப்பரப்பு, கிழக்கில் மூதூர் மற்றும் மட்டக்களப்பின் படுவான்கரை போன்ற பகுதிகள் பூரணமாக விடுதலை இயக்கங்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாகின.

இந்த இளைஞர் இயக்கங்களின் ஒற்றுமையைக் கண்ட பேரினவாதமும், வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளும் சீரழிக்க முனைப்புக் காட்டியது, இதற்கு தூபம் இடுவது போல் ஒத்துழைத்தது விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர மற்றய இயக்கங்கள் எதனையும் இயங்க விடக் கூடாது என திட்டமிட்டு சகோதர இயக்கத்தவர்களை விடுதலைப் புலிகள் அழிக்கத் தொடங்கியன் விளைவால், அன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் வெற்றிடம் ஏற்படத் தொடங்கியது.

அரசியல் மயப்படுத்தாத எந்த மக்கள் போராட்டமும் விடுதலை பெற்றதாக வரலாறு இல்லை, துப்பாக்கிக்குப் பயந்தே பல மக்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி வகுத்தனர், ஆனால் அதற்கு எதிர்மாறாக புலம்பெயர் நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள், புலம்பெயர் நாடுகளில் வாழ வேண்டுமெனில் ஸ்ரீலங்காவில் தொடர் பிரச்சனை இடம்பெற்றுக் கொண்டிருக்க வேண்டும், இதனைக் காட்டியே அகதி அந்தஸ்துடன் கூடிய வதிவிட உரிமையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதுவே அதற்கான காரணம் ஆகும். இந்த குறுகிய நோக்கத்துக்காகவே அதிக பணத்தினை விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்து போரை ஊக்கப்படுத்தியும், ஆதரவு செலுத்தியும் வந்தனர் புலம்பெயர் தமிழர்கள் என்றால் அதில் மிகையில்லை.

மக்களை அரசியல் மயப்படுத்தாது இராணுவ மயப்படுத்தலில் தீவிரம் காட்டிய விடுதலைப் புலிகள் வன்னி இறுதி யுத்த காலத்தில் மக்களை யுத்த அரணாக பாவிக்கத் தொடங்கியதனாலேயே மக்களின் அனுதாபத்தைப் பெற முடியாமல் போய் விட்டது, ஆனால் வன்னியில் உள்ள மக்கள் எம் பின்னால் இருப்பதாக உலகத்துக்கு காண்பிக்கத் தவறவும் இல்லை, இதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஸ்ரீலங்கா பேரினவாதம் தமிழின அழிப்பை சுலபமாக மேற்கொண்டது, சர்வதேசத்தினால் பயங்கரவாத அமைப்பாக இனங்காணப்பட்ட விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி வகுத்துள்ள மக்களை சர்வதேசம் கண் திறந்து பார்க்க மறுத்தது, அவர்களையும் விடுதலைப் புலிகளாகப் பார்த்ததோ என்னவோ!, ஆனால் அந்த மக்களை விடுவியுங்கள் என விடுதலைப் புலிகளுக்கு பல வழி முறைகளில் செய்திகளை அனுப்பின, அதனையே ஸ்ரீலங்கா அரசும் செய்து பிரசாரத்துக்கு வழி தேடியது.

போரின் இறுதிக் காலங்களில் இருபதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன, இதன் போது ஸ்ரீலங்கா படையினரால் பலர் கைதாகி விசாரணை செய்யப்பட்டு வருவதாக பல தரப்பட்ட செய்திகள் கூறின, விசாரணையின் போது சித்திரவதைக்கு உள்ளாகி பலர் கொல்லப்பட்ட செய்திகளும் கூடவே வந்து கொண்டு தான் இருந்தன, இந்தச் செய்திகளின் வரிசையில் இறுதியாக நேற்று வந்த செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டது.

ஜனவரி மாதப் பகுதியில் ஸ்ரீலங்கா படையினரால் தமிழ் இளைஞர்கள் சித்திரவதைக்குள்ளான நிலையில் அவயங்கள் கட்டப்பட்டு, நிர்வாணமாக அழைத்து வரப்பட்டு தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோப் பதிவினை
ஜெர்மனி நாட்டிலுள்ள ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர் அமைப்பு வெளியிட அதனை பிரித்தானியாவிலுள்ள Channel 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது, இதன் மூலம் ஸ்ரீலங்காவின் பேரினவாதப் போக்கின் குரூரத் தன்மை வெளிப்படையாகத் தெரிகின்றது, ஆனால் இந்த பதிவின் மூலாதாரத்தினைத் தேட முடியாமல் இருப்பதாகவும் கூடவே செய்தி பகிர்கின்றது சனல் 4 தொலைக்காட்சி.

தமிழின அழிப்பான மனிதவுரிமை மீறல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகளை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்து வந்தாலும் கூட அழுத்தம் எதனையும் தெரிவிப்பதாகத் தெரியவில்லை, இதனை சாதகமாகப் பயன்படுத்தும் ஸ்ரீலங்கா தனது வழமையான பாணியில் ஜனவரி காலப் பகுதியில் போர் முடிவுக்கு வரவில்லை, இந்த வீடியோ பதிவு விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது படையினர் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இல்லையெனவும் புனிதம் கற்பிக்கின்றார் ஸ்ரீலங்கா வெளியுறவுச் செயலர் பாலித கோகன.

ஸ்ரீலங்கா பேரினவாதம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பு இவ்வாறு மூடி மறைக்கப்பட்டு வருவதற்கு தமிழர்களின் ஒற்றுமையின்மை முக்கியம் ஆகும். விடுதலைப் புலிகளால் மக்களை அரசியல் மயப்படுத்த முடியாமல் போனமையும்,தமிழ் மக்களிடம் புலிகள் ஏற்படுத்திக் கொண்ட அராஜகப் போக்குமே எமது ஒற்றுமையின்மைக்கான மற்றைய காரணமாகும்.

தொடரும் ஒற்றுமையின்மையால் அழியப் போவது இலங்கையில் வாழும் தமிழினமே என்பதைச் சிந்தித்து எதிர்காலத்தைத் திட்டமிட புத்திஜீவிகள் முன்வர வேண்டும். இரக்கமற்ற முறையில் ஸ்ரீலங்கா பேரினவாதம் நடத்தும் கொடுமைகளை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்.


ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

நிறைவெய்திய இலங்கைப் பதிவர் சந்திப்பு! - இணையவழி ஒளிபரப்பினூடான தேடல்.

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியது, வந்திருந்த ஆர்வலர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர், இந் நிகழ்வை சர்வதேசமே இணைய வழியாகப் பார்த்தும் கருத்துத் தெரிவிக்கக் கூடிய வகையிலும் ஒழுங்கு செய்யப்பட்டமை ஓர் வரப்பிரசாதமாகும்.

தொழிநுட்ப வளர்ச்சியினால் சர்வதேசமெங்கும் பரந்து வாழும் தமிழ் வலைப் பதிவர்கள் இந்த நேரடி நிகழ்வை முறையாகப் பயன் படுத்தியிருப்பார்கள், ஆனால் இதில் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டிய பதிவர்கள் தேவையில்லாமல் அரட்டையில் இறங்கியதே வேதனையாக இருந்தது.

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலங்கை வலைப் பதிவர் சந்திப்பை பலத்த வேலைப்பளுவுக்கும் மத்தியில் நிகழ்த்திக் கொண்டிருந்த தோழர்கள் நேரடி இணையத்தின் வழியான கருத்துத் தெரிவிக்கும் பகுதிக்கும் ஓடோடி வந்து வலைப் பதிவர்களின் அரட்டைக்கும் பொறுமையாகப் பதிலளித்துக் கொண்டிருந்தது சிறப்பாக அமைந்திருந்தது.

நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட வலைப் பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்ட போதிலும் அதனை இணைய வழி நேரடி நிகழ்வில் கேட்க முடியாமல் இருந்தது, காரணம் சத்தம் குறைவாகவும், தெளிவின்மையாகவும் இருந்தமையே, அது தொழிநுட்பக் கோளாறாக கொள்ளத் தக்கதே!

இளைய பதிவர் ஒருவரின் அறிமுகம் எல்லோரையும் திகைப்புக்கு உள்ளாக்கியது, அதிகம் கருத்துத் தெரிவிக்கா விட்டாலும் தந்தையினாலேயே இந்த பாதைக்குள் நுழைந்தாக குறிப்பிட்டது அருமை.

கலந்துரையாடலில் "யாழ்தேவி திரட்டி" பற்றிய விமர்சனம் சூடு பிடித்தது, பலரும் பல கருத்தினைத் தெரிவித்தனர், யாழ்தேவி எனும் நாமம் பொருத்தமற்றது என்பதுவே பலரது ஆதங்கமாக இருந்தது, இதில் பிரதேசவாதம் தொக்கி நிற்பதாக சிலரும், சின்னமாக பொருத்தமற்ற விதத்தில் புகையிரதம் இதில் இணைக்கப்பட்டிருப்பதாக சிலரும் விமர்சனம் செய்தனர். அதன் நிர்வாகத்தினரும் அதனை ஏற்றுக் கொண்டமை சந்திப்புக்குக் கிடைத்த சிறப்பம்சத்தில் ஒன்றாகும்.

அடுத்த சந்திப்பு பற்றியதாகவும், ஏற்பாட்டுக் குழுவினரின் நிர்வாகப் பொறுப்புக்கள் பற்றி பேசப்பட்ட போதிலும் முடிவெதுவும் எட்டப்படவில்லை. இறுதியில் சஞ்சிகையொன்றும் வினியோகிக்கப்பட்டு இனிதே நிறைவெய்தியது.

படங்களை நேரடியாக பங்கெடுத்த வலைப் பதிவர்களில் பதிவுகளில் காணாலாம்.
1. ஆதிரை
2. வந்தியத்தேவன்

பிந்திய இணைப்பு
3. மதுவதனன் மௌ

சனி, 22 ஆகஸ்ட், 2009

இலங்கை வலைப் பதிவர் சந்திப்பும் நிகழ்ச்சி நிரலும்!

நாளை காலை கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் "இலங்கைப் பதிவர் சந்திப்பு" கோலாகலமாக நிகழவிருக்கின்றது.

நிகழ்ச்சி நிரல்:
* அறிமுகவுரை
* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
* திரட்டிகள்
* சிறப்பு அதிதி உரை
* இடைவேளை
* வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
* வலைப்பதிவும் சட்டமும்
* பதிவுலக அனுபவங்கள்
* எதிர்காலத் திட்டங்கள்
* கலந்துரையாடல்
* நன்றியுரை

தயாராகியுள்ள நிகழ்ச்சி நிரலுக்கேற்ப உரிய நேரத்திலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிடுமென நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர். நிகழ்ச்சியின் பெறுபேறுகளைக் கொண்ட படங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் உடனுக்குடன் தரவேற்றம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - 2009

இலங்கை வலைப் பதிவாளர்களை இணைக்கும் நோக்கில் எதிர்வரும் 2009.08.23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9 க்கு கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இலங்கைப் பதிவர் ஏற்பாட்டுக் குழுவினர் சார்பாக முதலாவது சந்திப்பினை நடாத்துவதற்கு பதிவுலகத் தோழர்கள் லோஷன், புல்லட், வந்தி மற்றும் ஆதிரை போன்றோர் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

* இலங்கைத் தமிழ் வலைப் பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

* புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

* இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செய்தல்.

* பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

* பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்.

இதுபோன்ற நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இலங்கையர் வலைப் பதிவை சர்வதேச தரத்துக்கு நிகராகக் கொணர இலங்கைப் வலைப் பதிவர் அனைவரும் இந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆதரவினைக் கொடுக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

நடைபெறவிருக்கும் இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேற "களத்துமேடு" வாழ்த்துகின்றது.


ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்பட்ட தமிழ்க் கட்சிகள் !

யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன, இதில் ஈபிடிபி சார்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று மேயரை தன்னகத்தே வசப்படுத்திக் கொண்டது.

வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று நகரசபைத் தலைமைத்துவத்தைக் கைப்பற்றியுள்ளது, ஐனநாயக மக்கள் முன்னணி இன்னும் மேலதிகமாக 144 வாக்குகளைப் பெற்றிருப்பின் நகரசபைத் தலைமைத்துவம் புளொட் வசமாகியிருக்கும்.

எது எப்படி இருப்பினும் இதுவரை 22 பாராளுமன்ற ஆசனங்களை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு நன்மை பயக்கும் எவ்வித சேவைகளும் இன்று வரை செய்யவில்லை, மாறாக சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாஸிச நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஈழப் போராளிகளெனும் அங்கீகாரம் தேடும் முயற்சியிலேயே ஈடுபட்டு வந்தது.

விடுதலைப்புலிகளினால் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டு யுத்தக் கவசங்களாகப் பாவிக்கப்பட்ட பல இலட்ச அப்பாவி மக்களை விடுதலைப் புலிகளெனவும், புலிகளை நேசிப்பவர்களெனவும் சர்வதேசரீதியில் பொய்ப் பிரசாரம் செய்து சமுதாயத்தில் ஊனமுற்றவர்களாகவும், வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களை அகதி முகாமில் முடக்குவதற்கும் காரணமாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு மீண்டும் வவுனியா நகர மட்டத்தில் ஆட்சியதிகாரம் வழங்க மக்கள் முனைந்திருப்பது தீக்குள் விரலை வைப்பதற்கு ஒப்பானது.

இன்னும் எத்தனை ஆயிரம் மக்களைப் பலி எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காத்திருக்கின்றார்களோ தெரியாது, அதற்கான அங்கீகாரத்தினை வவுனியா மக்கள் கொடுத்துள்ளார்கள், இனி வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சந்தற்பவாதக் கொள்கையினால் தமிழினம் பூண்டோடு அழிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.

மக்களின் பிரதிநிதிகளென தொடர் பிரசாரம் செய்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணத்தில் தூக்கியெறியப்பட்டு இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர், விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடனும், அவர்களின் கள்ள வாக்குகளாலும் பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிராமங்களுக்கே உரித்தான உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி கொள்ள முடியாமல் தள்ளாடி நிற்பது வெளிச்சமாகின்றது.

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எனும் நாமத்துடன் செயற்பட்டு வரும் "கடிதம் புகழ்"
வீரசிங்கம் ஆனந்தசங்கரி நடந்து முடிந்த தேர்தலில் அவமானத்தைச் சந்தித்துள்ளார், வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை நழுவவிட்டதுடன், யாழ்ப்பாண மாநகர சபையில் தன்னைச் சார்ந்தவர்களுக்கே ஆட்சியதிகாரம் கிடைக்குமெனக் கனவு கண்டிருந்தார், பிற்போக்குத்தனமும், சுயநலமும் இவருடனே குடிகொண்டிருப்பதனால் உள்ளூராட்சித் தேர்தலிலேயே இவரது கூட்டுக் கட்சி தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது, இதில் வீ.ஆனந்தசங்கரிக்குக் கிடைத்த விருப்பு வாக்குக்கள் 424 மாத்திரமே, இந்த இலட்சணத்தில் அரசியல்வாதியெனும் நாமத்துடன் இன்னும் தமிழர்களை ஏமாற்றத் தான் வேண்டுமா!

சனி, 8 ஆகஸ்ட், 2009

யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தல் முடிவு - 2009


மொத்த வாக்குகள் - 100417
அளிக்கப்பட்ட வாக்குகள் - 20922
நிராகரிக்கப்பட்டவை - 1358

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் - 10602, ஆசனங்கள் 11+2 = 13 (போனஸ் அடங்கலாக)
இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குகள் - 8008, ஆசனங்கள் - 8
சுயேச்சைக் குழு - 1 வாக்குகள் - 1175, ஆசனம் - 1
தமிழர் விடுதலைக் கூட்டணி வாக்குகள் - 1007, ஆசனம் - 1

வவுனியா நகர சபைத் தேர்தல் முடிவு - 2009



வவுனியா நகர சபைத் தேர்தல் முடிவுகள் 2009

மொத்த வாக்குகள் 12292
அளிக்கப்பட்ட வாக்குகள் 120850
நிராகரிக்கப்பட்டவை 558

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குகள் - 4279, ஆசனங்கள் - 3 + 2 = 5 (போனஸ் அடங்கலாக)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வாக்குகள் - 4136, ஆசனங்கள் - 3
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் - 3045, ஆசனங்கள் - 2
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் - 587, ஆசனம் - 1

தேர்தல் முடிவுகள் - 2009

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது, மாலை 6 மணிக்குப் பின்னராக வாக்குகள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுக் கொண்டிருகின்றன, சில இடங்களுக்கான தபால் மூல வாக்குகளின் பெறுபேறுகள் ஸ்ரீலங்கா ஊடகங்களின் மூலமாக உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

தேர்தலின் பெறுபேறுகளை ஸ்ரீலங்கா தேர்தல் திணைக்கள இணையத் தளத்தில் அறியக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியா நகரசபைத் தேர்தல் முடிவு

மொத்த வாக்குகள் 12292
அளிக்கப்பட்ட வாக்குகள் 120850
நிராகரிக்கப்பட்டவை 558

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குகள் - 4279, ஆசனங்கள் - 3 + 2 (போனஸ் அடங்கலாக)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வாக்குகள் - 4136, ஆசனங்கள் - 3
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் - 3045, ஆசனங்கள் - 2
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் - 587, ஆசனம் - 1




வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

கே.பி. விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்!

மலேசியா கோலாலம்பூரின் ஜலான் ரொங்கு அப்துல் ரகுமானில் உள்ள மஜீத் இந்தியா எனும் இடத்திலுள்ள ரியூன் ஹொட்டலின் அருகில் வைத்து ஆசிய பிராந்திய இன்ரபோலினால் கடந்த ஐந்தாம் திகதி கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே।பி குமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராஜா பத்மநாதன் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவரின் சில புனை பெயர்கள்:

கே.பி
செல்வராசா பத்மநாதன்
சண்முகம் குமரன் தர்மலிங்கம்
கே பத்மநாதன்
குட்டி மாஸ்ரர்
குட்டி சிறீ
தர்மலிங்கம் சண்முகம் குமரன்
தம்பையா செல்வராசா
கழுதை (பிரபாகரனால் வைக்கப்பட்ட செல்லப் பெயர்)
பெரியதுரை
கண்ணாடி பத்தன்
சதாசிவம் தர்மலிங்கம் ....

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

கே.பி. தாய்லாந்தில் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஸ்ரீலங்கா படையினரால் கொல்லப்பட்ட பின் அவ் அமைப்புக்கு பொறுப்பாளர் தானே என உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தவரும், சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த கே.பி (குமரன் பத்மநாதன்) எனப்படும் செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தின் பாங்கொக் நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா அரச தகவல்கள் கூறுகின்றன.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் ஜலான் ரொங்கு அப்துல் ரகுமான் Jalan Tuanku Abdul Rahman(வீதியில்), மஜீத் இந்தியா பகுதியில் உள்ள "ரியூன் ஹொட்டேல் Tune Hotels" எனும் இடத்தில் விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மகன் மற்றும் பா.நடேசனின் சகோதரருடன் உரையாடிக் கொண்டிருந்த கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதன் 2009.08.05 பிற்பகல் 2 மணியளவில் வெளியே சென்ற போது இன்ரபோலின் ஆசியப் பிரிவினரால் கடத்தப்பட்டு பாங்கொக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இணையத் தள செய்தியொன்று கூறுகின்றது.

கடந்த 2007 செப்டம்பர் காலப் பகுதியில் குமரன் பத்மநாதன் பாங்கொக் பொலிஸாரினால் கைதானதாக "பாங்கொக் போஸ்ட்" செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



2007 செப்டம்பரில் "பாங்கொக் போஸ்ட்" தளத்தில் வெளியான செய்தி:
Top Tamil Tiger arrested in Bangkok

(BangkokPost.com, Agencies)
Thailand has arrested the finance chief of the Tamil Tigers of Sri Lanka, allegedly the group's chief procurer of arms.

Kumaran Pathmanadan is reported to have been arrested by police in Bangkok on Monday evening. He is one of the top officials in the Liberation Tigers of Tamil Eelam, the formal name of the group.

Pathmanadan apparently had obtained Thai citizenship. He continued to run the global network of LTTE offices and its weapons procurement, logistics and money laundering operations.

He has been on Interpol's Most Wanted list for a number of years. He has also been implicated in several assassinations of political leaders.

The online newspaper Asian Tribune called him "the king pin of Tiger arms smuggling".

"He is a noted smuggler of arms and narcotics. Operating with bank accounts opened in London, Frankfurt, Denmark, Athens and Australia... he has had a free run so far," the newspaper alleged

His arrest followed the detention in Ranong province last month of three Tamil Tiger operatives trying to buy guns and 45,000 rounds of ammuntion.

All four were suspected of running a Tamil Tiger gun-running ring centered in Thailand.

Pathmanadan, who also had a number of aliases, has recently been the subject of a manhunt that stretched to Johannesburg, Rangoon, Singapore and Bangkok. Police said they believed he had bank accounts in London, Frankfurt Denmark, Athens and Australia and has over 200 passports for his use.

He and his group are suspected of running weapons purchased Thailand and neighbouring countries to the Tamil Tigers in Sri Lanka. The Tigers have been desinated as a terrorist group by most western countries, but not Thailand.

A Jane's Intelligence report on the group stated that despite the cease-fire agreement in Sri Lanka, the LTTE continued to re-supply cadres. It said:

"While Cambodia is the hub of the LTTE East Asia Network, Thailand continues to serve as the most important country for trans-shipment of munitions and coordination of logistics... its excellent communications infrastructure, proximity to former war zones in both Cambodia and [Burma] and its western coastline facing the Bay of Bengal and Sri Lanka beyond have made Thailand the ancient interface between the LTTE's war zone."

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----