திங்கள், 2 நவம்பர், 2009

இலங்கை வலைப்பதிவர் மற்றும் அச்சு ஊடகச் சந்திப்பும் இணையவழி ஒலிஒளிச் சீர்கேடும்!


வலைப்பதிவர்கள் மற்றும் அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது, இதனை இணையவழியூடாக கேட்க வசதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தனர், ஆனால் சீராக அதனைக் கேட்கவோ அல்லது பார்க்கவோ முடியாமல் இருக்கின்றது.

இணையவழியூடாக பத்துக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் இந்த நிகழ்வைப் பார்க்க ஆவலோடு காத்து இருப்பதுடன், ஒலி ஒளி அமைப்புக்களைச் சீர்செய்யுங்களென பல தடவைகள் கூறியும் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை.

முதற் தடவை நடைபெற்ற இலங்கை தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வின் நேரடி இணையவழிச் சந்திப்பு சீராக ஒலி ஒளி தடங்கலின்றி இருந்தது, இந் நிகழ்வை தோழர் கௌபாய்மது எனப்படும் மதுவதனன் மௌ.ஏற்பாடு செய்திருந்தார், இவரைப் போன்ற தொழிநுட்ப அறிவுகொண்டவர்கள் யாராவது இந்த ஒலி ஒளித் தடங்கலை நிவர்த்தி செய்யலாமே!

34 கருத்துகள்:

  1. 16பேர் நாம் தொடர்பிலிருந்தும் எந்த விடயத்தையும் தெளிவாகக் கேட்க முடியவில்லை. இதை நாம் குறைசொல்ல முடியாது ஈழவரே! இருக்கிறம் ஏற்பாட்டாளர்கள் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. சில பதிவர்கள் தான் நேரடி தொடர்பு செய்ய முனைந்தார்கள். காலநிலையும் ஏமாற்றிவிட்டது! அவர்களையும் குறைசொல்லிப் பிரயோசனமில்லை. ஓரிரு நாட்களின் பின்னர் செய்தியும் ஒலி - ஒளிப் பதிவுகளும் வரும்தானே! அதுவரை பொறுத்திருப்போமே!

    பதிலளிநீக்கு
  2. இப்போது இணையவழிச் சந்திப்பு சீர்செய்யப்பட்டு நிகழ்வுகள் நடக்கின்றன, தயானந்தாவுக்குப் பின் லோஷன் இன்னோரன்னோர் உரையாற்றுகின்றனர், இது களத்துமேட்டுக்குக் கிடைத்த வெற்றி தானே முகுந்தன்.

    பதிலளிநீக்கு
  3. கெளபாய் முயற்சியை நாம் குறை கூறமுடியாது. எனினும் இதை நாம் ஒரு முயற்சியாக எடுத்து வாழ்த்துவோம். தயாந்தாவிற்கு பின் லோசன் உரையாற்றுவது என்றால் நல்ல நிகழ்வுதான். லோசன் என்பது சூரியனில் காலையில் தமிழ் கொலை செய்பவர் தானே?

    பதிலளிநீக்கு
  4. நன்றி வெண்காட்டான்.

    தயானந்தாவுக்குப் பின்னர் லோஷனும் இன்னும் ஒருவரும் பேசியதற்குப் பின்னர் நிரந்தரமாக செயலிழந்து போனது இருக்கிறம் சஞ்சிகையின் இணையவழி அச்சவழிச் சந்திப்பு.

    பதிலளிநீக்கு
  5. ஏமாற்றம் தான் இருந்தாலும் என்ன செய்வது ... நானும் லோசனுக்கும் போன் பண்ணி சொன்னான் chat பிரச்சனை என்று பிறகு பார்க்க எல்லாமே கட் ஆகிட்டு. பயந்தே போய்விட்டன் என்னாலே தான் இப்படி எண்டு.
    ஆனாலும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள், இருக்கிறோம் சஞ்சிகைக்கும் 'கவ் போய்க்கும் '

    பதிலளிநீக்கு
  6. கடந்த வலைப்பதிவர் சந்திப்பின் அனுபவத்தின் மூலம் இந்தச் சந்திப்பும் பிரமாதமாக இருக்கமென நினைத்து பதிவு இட்டது தான் மிச்சம், இதில் கௌபாயை நொந்து கொள்வதற்கு எதுவும் இல்லை, அவரினால் முடிந்தது அவ்வளவு தான்.

    இவர்களின் முயற்சியை நம்பி 20 பேருக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் உலகின் பல மூலைகளிலும் இருந்து இணையவழி சந்திப்புக்காக காத்திருந்தது தான் மிச்சம்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி ரமேஸ், மேலே சொல்லப்பட்ட கருத்து உங்களுக்காகவே தான் பெயரிட மறந்து விட்டேன்.

    உங்கள் தளத்தின் பக்க வடிவமைப்பு மிகவும் நேர்த்தியாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  8. நானும் பலத்த எதிர் பார்ப்புடன் இருந்தேன்.
    இருந்தாலும் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. நன்றி வேந்தன், இந்தச் சந்திப்பு இருக்கிறம் சஞ்சிகைக்கான இலவச விளம்பரமாகவே கருதப்படுகின்றது, இதனை ஆரம்ப உரையில் தயானந்தா குறிப்பிட்டு இருந்தாரே!

    எதிப்பார்ப்பை உருவாக்குவது தான் பத்திரிகைத்துறை, அதனை மிகவும் சாதுரியமாக இருக்கிறம் சஞ்சிகையினர் பயன்படுத்தி விட்டனர்.

    பதிலளிநீக்கு
  10. ஈழவன் உங்கள் தலையங்கத்தில் தவறிருக்கின்றது. இந்தச் சந்திப்பு இலங்கை வலைப்பதிவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டது அல்ல,இது இருக்கின்றம் என்ற தனியார் நிறுவனம் அச்சு சக இலத்திரனியல் ஊடகங்களையும் வலைப்பதிவர்களையும் சந்தித்த நிகழ்வு. மற்றும் படி இது வலைப்பதிவர் சந்திப்பல்ல.

    காலநிலையும் வேறு சில காரணிகளும் நேரடி ஒளிபரப்பைக் குழப்பின.

    பதிலளிநீக்கு
  11. ///இந்தச் சந்திப்பும் பிரமாதமாக இருக்கமென நினைத்து பதிவு இட்டது தான் மிச்சம்////

    அதுதான் நான் மிக அவலாய் இருந்தேன். பதிவுகள் பற்றி மென் மேலும் தெரிஞ்சுக்கலாம் என்று. ஆனாலும் இரண்டு மூன்று நண்பர்களை பிடிச்சுட்டன் அதுக்கு நன்றி நாங்களும் இருக்கிரோம்ல..

    நன்றி ஈழவன் எனது தளத்தினை பார்வை இட்டதுக்கு

    பதிலளிநீக்கு
  12. இருக்கிறம் சஞ்சிகை நடாத்திய ஒரு சிறப்பான 'தண்ணி பார்ட்டிக்கு' எதுக்கு நேரடி ஒளிபரப்பு.

    யார் யார் தண்ணி அடிக்கினம், யார் யார் அடிக்கேல்ல எண்டு நேரடி ஒளிபரப்பு போட்டு வேற பாக்கோணுமா.

    ஒரு நிகழ்ச்சிநிரல் கூட இல்லாத நிகழ்வுக்கு நேரடி ஒளிபரப்பு ஒரு கேடு...!!!

    பதிலளிநீக்கு
  13. சரி சரி வந்தி நன்றி உங்கட சட்டுக்கு
    அவசரத்தில லோஷனிடம் வாந்தி எண்டு சொல்லிட்டன் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  14. எந்தப் பிரச்சனையும் இல்லை ரமேஸ் ஏற்கனவே நான் என்னுடைய பதிவில் சொல்லியிருந்தேன் இது பதிவர் சந்திப்பு அல்ல என ஆனாலும் எவரும் அதனைப் புரிந்துகொள்ளவில்லை. லோஷன் கூட இந்த சந்திப்பில் உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார் இதனைப் பதிவர் சந்திப்பாக எடுக்கவேண்டாம்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்
    இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த சந்திப்பு. பிற்பகுதியில் சிறப்பாகவே நடந்தேறியது. ஆனாலும் இயற்கை எம்மைவிட மிக மோசமாக தனது ஆதிக்கத்தை நடத்திவிட்டது. நிகழ்ச்சி நிரல்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தும். முழை காரணமாக திடீரென புல்வெளியில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு அலுவலக மண்டபத்துக்குள் சிறிது நேரம் இடம்பெற்றமையால் நாங்களும் எங்களுடைய நிகழ்ச்சி நிரலும் உண்மையிலேயே குழம்பிவிட்டன. ஆனாலும் விரைவாக செயற்பட்டதன் காரணமாக மீண்டும் புல்வெளியில் கூடாரங்களுக்குக் கீழே நிகழ்ச்சிகளை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. உண்மையிலே இந்த நிலையில் நாங்கள் போட்டிருந்த நிகழ்ச்சி நிரல்களும் திட்டங்களும் சற்றுக் குழம்பித்தான் போயின. என்ன செய்வது. இருந்தும் சந்திப்பு ஓரளவுக்காவது வலைப்பதிவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நம்புகின்றோம்.
    இருக்கிறம் சார்பில் இணையாசிரியர்
    சஞ்ஜீத்

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்
    இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த சந்திப்பு. பிற்பகுதியில் சிறப்பாகவே நடந்தேறியது. ஆனாலும் இயற்கை எம்மைவிட மிக மோசமாக தனது ஆதிக்கத்தை நடத்திவிட்டது. நிகழ்ச்சி நிரல்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தும். மழை காரணமாக திடீரென புல்வெளியில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு அலுவலக மண்டபத்துக்குள் சிறிது நேரம் இடம்பெற்றமையால் நாங்களும் எங்களுடைய நிகழ்ச்சி நிரலும் உண்மையிலேயே குழம்பிவிட்டன. ஆனாலும் விரைவாக செயற்பட்டதன் காரணமாக மீண்டும் புல்வெளியில் கூடாரங்களுக்குக் கீழே நிகழ்ச்சிகளை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. உண்மையிலே இந்த நிலையில் நாங்கள் போட்டிருந்த நிகழ்ச்சி நிரல்களும் திட்டங்களும் சற்றுக் குழம்பித்தான் போயின. என்ன செய்வது. இருந்தும் சந்திப்பு ஓரளவுக்காவது வலைப்பதிவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நம்புகின்றோம்.
    இருக்கிறம் சார்பில் இணையாசிரியர்
    சஞ்ஜீத்

    பதிலளிநீக்கு
  17. நன்றி வந்தியத்தேவன், நீங்கள் அரட்டைப் பத்தியில் குறிப்பிட்ட போது கவனத்தில் எடுத்தேன், ஆனால் அங்கு குறிப்பிடுவது பொருத்தமல்ல என்பதால் பதிலிடாமல் தவிர்த்திருந்தேன்.

    தலைப்பு கவர்ச்சிக்காக இடப்பட்டதுவே, ஆனால் உள்ளே வலைப்பதிவர்கள் மற்றும் அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது எனக் குறிப்பிட்டு இருந்தேன், எச் சந்தற்பத்திலும் இலங்கை தமிழ் வலைப்பதிவர்களின் சந்திப்பு அல்லது வலைப்பதிவர்கள் நடாத்தும் சந்திப்பு எனப் பதிவு செய்யவில்லை, அதனையும் மீள்வாசிப்புக்கு உட்படுத்துங்கள்.

    மற்றும் உங்களின் நல்ல எண்ணத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கம் களத்துமேட்டுக்குக் கிடையாது, இரு(ற)க்கிறம் சஞ்சிகையின் இலவச விளம்பரத்துக்கு இலங்கை வலைப்பதிவர்கள் அடிபட்டுப் போய் விட்டார்களே என்பதுவே விமர்சனத்துக்குக் காரணம்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி நிமல்,
    நிகழ்ச்சி நிரல் குழம்பிப் போய் விட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் சார்பாக இருக்கிறம் சஞ்சிகை இணையாசிரியர் தோழர் சஞ்ஜீத் பின்னூட்டம் இட்டுள்ளார்கள், மற்றும் நீங்கள் குறிப்பிட்ட //சிறப்பான 'தண்ணி பார்ட்டிக்கு' எதுக்கு நேரடி ஒளிபரப்பு// தேவையில்லை தான்.

    பதிலளிநீக்கு
  19. நன்றி இருக்கிறம் நிர்வாகத்தினருக்கு,
    தங்கள் சஞ்சிகைக்கான இலவச விளம்பரத்துக்காக வலைப்பதிவர்களை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தி விட்டீர்கள், உங்களின் அறிவை மெச்சத்தான் வேண்டும்.

    காலநிலை சீர்கேட்டினால் இடம் தான் மாறி வந்ததே தவிர நிகழ்ச்சி நிரல் மாற வேண்டிய துர்ப்பாக்கியம் இல்லையல்லவா, வலைப்பதிவர் குறிப்பிட்டவாறு நிகழ்ச்சி நிரல் தயாரிப்பில் ஏதும் தடங்கல் வந்து குழப்பியதோ?

    இனிமேலும் இலவச விளம்பரத்துக்காக வலைப்பதிவர்களை பயன்படுத்த மாட்டீர்கள் என எண்ணுகின்றோம்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்
    நன்றி ஈழவன்
    இருக்கிறம் சஞ்சிகைக்கு விளம்பரம் தேடுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்கான சந்தர்ப்பங்களும் எங்களைத் தேடி வந்து கொண்டுதானிருக்கின்றன. இது வரை எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் வெற்றிகரமாக 42 இதழ்களைக் கடந்திருக்கின்றோம். அதற்கு எமது வாசகர்களே சான்று. அவர்களுடைய ஆர்வமும். முயற்சியுமே இதற்குக் காரணம். மேலும். இந்த சந்திப்பின் நோக்கம். முதன் முதலாக ஊடகவியலாளர்களையும் வலைப்பதிவர்களையும் சந்திக்கவைப்பதே. அதில் குறிப்பிட்டளவு வெற்றியும் கண்டிருக்கின்றோம். எந்த மீடியாவும் கவனத்தில் கொள்ளாதிருந்த வலைப்பதிவர்களை இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். இன்று நடைபெற்ற சந்திப்பின் மூலமாக ஊடகவியலாளர்களுக்கும் வலைப்பதிவாளர்களுக்குமிடையே நல்லதொரு உறவினையும் ஊடகவியலாளர்களுக்கு வலைப்பதிவர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். இனிவருங்காலங்களில் அதிகமான வலைப்பதிவர்களுடைய ஆக்கங்கள் இலங்கை மீடியாக்களில் பேசப்படப்போவதற்கான முதற்கட்ட நடவடிக்கையே இந்த அச்சு வலைச் சந்திப்பு. இருக்கிறமும் வலைப்பதிவர்களுடைய ஆக்கங்களை பிரசுரிக்கவும் அவர்களுக்கான அறிமுக பக்கங்களை ஒதுக்கவும் தயாராகிவிட்டது. இனிவருங்காலங்களில் ஏனைய அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வலைப்பதிவர்களும் அவர்களுடைய ஆக்கங்களும் நிச்சயமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பாக இதனை நடத்தியிருக்கின்றோம். உலகத்திலே முதன்முதலில் ஊடகவியலாளர்களும் வலைப்பதிவர்களும் ஒன்றுசேர சந்தித்த நிகழ்வு இது மட்டுமேயென நினைக்கின்றோம். தொடர்ந்து இருந்து பாருங்கள். வலைப்பதிவர்களின் ஆக்கங்களும் வலைப்பதிவர்களும் அச்சில் ஏறத்தான் போகின்றன. வானலைகள் வழியாக பேசப்படத்தான் போகின்றன. இருக்கிறமும் தொடர்ந்து இருக்கும். இருக்கிறம் சார்பில் அதன் இணையாசிரியர் சஞ்ஜீத்.

    பதிலளிநீக்கு
  21. //ஈழவன் சொன்னது…

    இவர்களின் முயற்சியை நம்பி 20 பேருக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் உலகின் பல மூலைகளிலும் இருந்து இணையவழி சந்திப்புக்காக காத்திருந்தது தான் மிச்சம்.
    //

    நாங்கள் கூடத்தான் நாப்பதிற்கும் மேற்பட்ட பதிவர்கள் இலங்கையின் பலபாகங்களிலுமிருந்து சந்திப்பிற்குச் சென்றதுதான் மிச்சம்.. :))


    உங்கள் ஆதங்கம் புரிகிறது ஈழவன். என்ன நடக்குது எண்டு தெரியாம இணையவழி ஒளிபரப்பு அறும்போது கடுப்பாகாமல் இருந்தால் அது இயற்கையே இல்லை.

    சென்ற அனுபவத்தால் இந்த முறை பக்காவாகத்தான் சென்றிருந்தேன். இரண்டு கணினிகள், வீடியோ கமரா, உதவிக்கு வெப் காம், மூன்று மொபைல் இணைய இணைப்பு வழங்கிகள் என்று. இதெல்லாம் கொண்டு சென்ற நான் றோள் பிளக்கொன்றும் வாங்கிச் சென்றிருக்க வேண்டும் என்று அங்கு சென்ற பின்தான் தெரிந்தது. இறுதியில் நானே கடுப்பாகி விட்டுவிட்டேன். எதிர்பார்த்து வந்த உங்களை ஏமாற்றிவிட்டேன் போல ஒரு மனக்குறை.

    ஈழவன் உங்கள் ஆர்வம் நன்கே தெரியும். இந்தாங்கோ... விரைவில் எங்கட அதாவது பதிவர்களின் ஆரோக்கியமான ஒழுங்கமைக்கப்பட்ட பட்டறை வரும். எல்லாம் சிறப்பாக நடக்கும்...

    பதிலளிநீக்கு
  22. நன்றி மதுவதனன்,

    இணையவழிச் சந்திப்பு தொடர்பற்றுப் போனது குறையாகத் தெரியவில்லை மது, ஆனால் வலைப்பதிவர்களை இலவச விளம்பரத்துக்காகப் பயன்படுத்தி விட்டார்களே என்பது தான் ஆதங்கம்.

    இலங்கை வலைப்பதிவரின் ஆரோக்கியமான ஒழுங்கமைக்கப்பட்ட பட்டறை எதிர்காலத்தில் சிறப்பாக நடந்தேற முற்கூட்டிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. நன்றி மதுவதனன்.
    ஒழுங்கமைப்பில் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம். ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் ஒழுங்கமைப்புக்கு ஏற்றமாதிரி இயற்கையும் ஒத்துழைத்திருந்தால் உங்கள் எண்ணம் ஈடேறியிருக்கும் என நினைக்கின்றேன். ஆனால் என்ன செய்வது. இயற்கைக்காக. வருகை தந்திருந்தவர்களை கைவிடமுடியுமா? அதற்காக இடங்களை அவசர அவசரமாக மாற்ற வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டதால் தங்களுடைய நேரடி ஒலிபரப்பில் தடங்கல் ஏற்பட்டமைக்கு வருந்துகின்றோம். எனினும். எங்களுடைய நோக்கம் நேரடி ஒலிபரப்பு மட்டுமில்லையே. வலைப்பதிவர்களை ஊடகவியலாளர்கள் அங்கீகரிக்கவேண்டும். அவர்களுடைய பதிவுகளுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். சரி சரி அடுத்த சந்திப்பில் எல்லாவற்றையுமே சீர் செய்வோம். இவ்வளவு தடங்கலுக்கும் மத்தியில் பொறுமையுடன் உங்கள் கடமையைச் செய்தமைக்கு இருக்கிறம் சார்பில் நன்றியுடன் இணையாசிரியர் சஞ்ஜீத்

    பதிலளிநீக்கு
  24. இருக்கிறதில இருந்துகொண்டு கருத்து போடுட ஐயா (கொய்யா எண்டு வாசிக்க வேண்டாம்...)

    //எந்த மீடியாவும் கவனத்தில் கொள்ளாதிருந்த வலைப்பதிவர்களை இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம்.//

    அப்ப நீங்க இணையத்தில சுட்டு போடுறதேல்லாம் கவனத்தில் கொள்ளாதிருந்த தளங்களில்/பதிவுகளில் இருந்தோ...???

    //உலகத்திலே முதன்முதலில் ஊடகவியலாளர்களும் வலைப்பதிவர்களும் ஒன்றுசேர சந்தித்த நிகழ்வு இது மட்டுமேயென நினைக்கின்றோம்.//

    ஆஹா... இதுவேறையா... தொடங்கியாச்சா உங்கட ஊடக பீதாம்பரங்களை...
    இது போன்ற சந்திப்புகள் பலதும் நடந்துள்ளன, 'நன்றி இணையத்தில்' தேடிப்பார்கவும்.... ;)

    //இது வரை எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் வெற்றிகரமாக 42 இதழ்களைக் கடந்திருக்கின்றோம். அதற்கு எமது வாசகர்களே சான்று.//

    அப்பிடியோ, சந்தோசம்...!!!

    //இருக்கிறமும் தொடர்ந்து இருக்கும்.//

    அது தெரியும்... இருக்கிறம் இருக்கிறதின்ர உள்ளாந்த அரசியல் இருக்கிறவரைக்கும் இதுவும் இருக்கும்... இருக்கட்டும்...!!!

    பதிலளிநீக்கு
  25. நன்றி சஞ்சீத்,

    இணையவழி நேரடி ஒளிபரப்பென்பது குத்திமுறியும் வேலையல்ல. மிக மகி இலகுவானது. சென்ற முறை எந்தவொரு ஆயத்தங்களும் இல்லாமல் சிறப்பாகச் செய்யதிருந்தோம். இந்தமுறை பக்காவாக ஆயத்தம் செய்தும் ஒழுங்காக செய்யமுடியாது போய்விட்டதே என்ற ஆதங்கம்தான்.

    உண்மைதான் நேரடி ஒளிபரப்பென்பது இரண்டாம் பட்சமான குறிக்கோளாகத்தான் இருந்தது. ஆனால் தடங்கலில்லாது நடந்திருந்தால் அது எவ்வளவு சிறப்பாக இன்னும் இருக்கிறத்துக்குப் பெருமையாக இருந்திருக்கும். ஏனெனில் அதனை பதிவர் சந்திப்பில் உணர்ந்திருக்கிறோம்.

    இந்தப் பதிவினையும் பின்னூட்டங்களையும் பார்க்கும் ஒருவர்.. என்னடா இது பிரதான நோக்கத்தைவிட்டு நேரடி ஒளிபரப்பைப் பற்றி பிரச்சினைப் படுறாங்கள் எண்டு யோசிப்பார்.

    ஆனால் ஈழவனின் பார்வையில் அவரின் பதிவிற்காகத்தான் இந்தப் பின்னூட்டங்கள். அவ்வளவுதான்.

    இன்னும் ஓரிரி நாட்களில் பதிவர்கள் அச்சுவலைச் சந்திப்பு பற்றி எழுதலாம் நான் உட்பட. அப்போது நிறை குறைகள், எதிர்காலத்தில் எதைத் தவிர்க்க எதை எடுக்க என்ற ஆரோக்கியங்கள் வரும். வரவேண்டும். கதைப்போம்.

    பதிலளிநீக்கு
  26. நன்றி நிமல்
    அதிக வேலைப்பளுவில் இருக்கின்ற உங்களால்( இது நீங்களே உங்கள் வலைப்பதிவில் சொன்னது) நிச்சயமாக இருக்கிறம் வாசிக்க நேரமிருக்காது என்று நினைக்கிறேன். தொடர்ந்து இருக்கிறம் வாசித்திருந்தீர்களென்றால் அதன் அரசியல் உள்ளார்ந்தம் என்னவென்று விளங்கியிருக்கும். ஓகே பரவாயில்லை. இணையத்திலிருந்து சுட்டுப் போடாத சஞ்சிகைகளோ பத்திரிகைகளோ இல்லையென்பதும் உங்களுக்குத் தெரியும். அதற்காகத்தான் வலைப்பதிவர்களை ஊடகவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். ஏனெனில் இனிமேல் ‘நன்றி இணையம்’ என்று எந்த பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வரக்கூடாது என்பதற்காக. முழுக்க முழுக்க வலைப்பதிவர்களுடைய பெயரில் வெளிவருகின்ற ஆக்கங்கள் அந்த இடங்களை நிரப்பட்டும். இதை எந்த உள்ளார்ந்தத்தில் சேர்க்கப்போகின்றீர்கள்?

    பதிலளிநீக்கு
  27. நன்றி மது
    விரைவில் நாங்கள் மீண்டும் இணைவோம்
    அது இதைவிட பலமடங்கு ஆரோக்கியமானதாக அமையும்.

    பதிலளிநீக்கு
  28. சென்ற முறை வலைப்பதிவர் சந்திப்புக்கு சென்று வந்த மகிழ்வோடு நேற்று கிட்டத்தட்ட 200 கிலோமீற்றர் பயணமச் செய்து இதில் கலந்து கொண்டேன். ஆனால் எனது நேரம், பணம் போன்றவற்றை செலவழித்தது தான் மிச்சம்.

    எங்களது பதிவுகளை எங்களுக்கு தெரியாமல் சுட்டு போட்ட “இருக்கிறம்” எங்களை வைத்து வியாபாரம் செய்ய எடுத்த ஒரு முயற்சியாகவே இதை காண்கிறேன்.

    பதிலளிநீக்கு
  29. ஈழவன் சொன்னது....
    //தங்கள் சஞ்சிகைக்கான இலவச விளம்பரத்துக்காக வலைப்பதிவர்களை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தி விட்டீர்கள்//

    இந்தப்பதிவில் உள்ள பின்னுட்டங்கள் எல்லாம் நேரடி ஒளி, ஒலிபரப்பு தடைப்பட்டதால் வந்த கோபமோ அல்லது இருக்கிறம் மீதுள்ள கோபமோ புரியவில்லை.
    நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்டவன் என்ற ரீதியிலும் இருக்கிறமில் தொடர்ந்தும் எழுதிவரும் சாதாரண எழுத்தாளன் என்ற ரீதியிலும் சில விசயங்கள் சொல்லுறன்

    திட்டமிடலில் ஏற்பட்ட சில தவறுகளும் ஏற்பாட்டாளர்களால் சில விடயங்களுக்கு கொடுத்த முக்கியத்துவமுமே நிகழ்வு பூரண முழுமைத்துவத்தை பெற தவறிவிட்டதாக கருதுகிறேன்.
    ஆனாலும் "இருக்கிறம் வலைபதிவர்களை பயன்படுத்தி விட்டது" என்பது ஏற்க முடியாது. அப்படியானால் வந்திருந்த அனைவரும் (நான் உட்பட) எல்லோரும் என்ன ........... ????

    பத்திரிகை, வானொலி மற்றும் வலைப்பதிவுகள் எல்லாவற்றிலும் விளம்பரப்படுத்திய விடயம் "இருக்கிறமால் ஒழுங்கு செய்யப்பட்ட அச்சுவலை சந்திப்பு" . இது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே... இதுவே இருக்கிறத்திட்கான விளம்பரத்துக்கு போதுமானது. எல்லோரும் ஒன்று கூடிய பின் தான் இதனை கூறுவதா? இதில் எல்லா பதிவர்களும் கலந்து கொண்டார்களா? விரும்பி பதிவு செய்தவர்கள் மட்டும் தானே.. அதை போல அழைத்த ஊடகவியலாலர்கள் மட்டும் தானே... பிறகேன் இப்படியான குற்றச்சாட்டுக்கள் . இந்த நிகழ்வை ஒழுங்கு செய்ததே இருக்கிறமை இன்னும் ஒரு படி மேல கொண்டு செல்லுவதற்கு தான்.

    பதிவர்களுக்கென்று இலங்கையில் இப்பொழுது தான் ஒன்று கூடல் நிகழ்வுகளை ஆரம்பித்திருக்கிறார்கள் அதன் இன்னுமொரு முகமே நேற்றைய சந்திப்பு... இது பதிவர்கள் மீது பலரது பார்வையையும் திருப்பும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. நிச்சயமாக நேற்று கலந்துகொண்டவர்களுக்கு தெரியும் 'எவ்வளவு சுதந்திரமாக ஒருவருடன் ஒருவர் பழகினோம்' என்று.. நிறைய நண்பர்கள் , நிறைய தொடர்புகள். ...

    இருக்கிறம் திட்டமிட்டு யாரையும் ஏமாற்றாது... அவர்களுடன் பழகியதில் இருந்து எனக்கு தெரியும். இனி யாரை போய் நோவது...???

    பதிலளிநீக்கு
  30. //நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்டவன் என்ற ரீதியிலும் இருக்கிறமில் தொடர்ந்தும் எழுதிவரும் சாதாரண எழுத்தாளன் என்ற ரீதியிலும் சில விசயங்கள் சொல்லுறன்//

    //இந்த நிகழ்வை ஒழுங்கு செய்ததே இருக்கிறமை இன்னும் ஒரு படி மேல கொண்டு செல்லுவதற்கு தான். //

    //கலந்துகொண்டவர்களுக்கு தெரியும் 'எவ்வளவு சுதந்திரமாக ஒருவருடன் ஒருவர் பழகினோம்' என்று..//

    நன்றி... ;)

    பதிலளிநீக்கு
  31. உண்மையில் இந்த பின்னூட்டங்கள் நேரடி ஒலி ஒளி பரப்பில் எழுந்த குமுறகள் தான் எனவே இதனை வைத்துக்கொண்டு நாம் நிகழ்வை கொச்சைப்படுத்தவில்லை.
    ஆனாலும் 'நிமல்' சொன்னது போல தண்ணிப் பார்ட்டிக்கு வீடியோ தேவை இல்லை

    'வந்தி' //இது பதிவர் சந்திப்பு அல்ல /// என்பதற்கு இந்தளவு விளம்பர பில்ட் அப் தேவ இல்ல
    நம்மட நேரத்தை வீணடித்து விட்டார்கள்.

    ஈழவன்//காலநிலை சீர்கேட்டினால் இடம் தான் மாறி வந்ததே தவிர நிகழ்ச்சி நிரல் மாற வேண்டிய துர்ப்பாக்கியம் இல்லையல்லவா, ///
    சபாஷ் போடுறோம்
    மதுவதனன்.
    //றோள் பிளக்கொன்றும் வாங்கிச் சென்றிருக்க வேண்டும் //
    இனி முடிஞ்சா ஜெனிரடரும் கொண்டு போங்கோ ....

    சரி சரி இனி எப்போ பதிவர்கள் சந்திப்பு அத சொல்லுங்கப்பா

    பதிலளிநீக்கு
  32. நன்றி வரோ(VARO)
    இருக்கிறம் சஞ்சிகை ஆசிரியர் தயானந்தா எழுதிய பின்னூட்டத்தின் பின்னர் இந்தப் பின்னூட்டங்களுக்கு முற்று வைப்பதென நினைத்தேன், இருப்பினும் வரோ எழுதியமைக்காக எனது கருத்தியலையும் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

    // Vilasam கூறியது...

    அன்பு நிறைந்த என் ஈழவனுக்கு,

    முதலில் மன்னிப்புக்கள். இருக்கிறம் ஏற்பாடு செய்த நிகழ்வின் நேரடித் தொடர்பாடலில் ஏற்பட்ட தவறுகளுக்கு இருக்கிறம் நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரிய பீடத்தினர் சார்பிலான மன்னிப்புக்களை அவர்கள் சார்பில் நான் முன் வைக்கிறேன்.

    தவறுகளைத்தான் அனுபவம் என்று சொல்கிறார்கள், எங்கள் அனுபவத்தை அங்கீகரிக்க மாட்டீர்களா?

    என்றுமன்புடன்,
    இளையதம்பி தயானந்தா//

    வலைப்பதிவர் வரோ வலைப்பதிவுக்கு புதியவர் என்பதால் பதிவர்கள் பற்றிய தேடல்கள் அவரிடம் குறைவாக இருப்பதை அவரின் கருத்தாடலில் அவதானிக்க முடிகின்றது, முன்னுக்குப் பின் முரணான வகையில் சில விடயங்களை பதிவு செய்துள்ளார்.

    வியாபார உத்திக்காக வலைப்பதிவர்களை இலவச விளம்பரத்துக்கு உட்படுத்தியுள்ளீர்கள்.
    //இந்த நிகழ்வை ஒழுங்கு செய்ததே இருக்கிறமை இன்னும் ஒரு படி மேல கொண்டு செல்லுவதற்கு தான்//

    உங்கள் சஞ்சிகை செய்து கொண்ட விளம்பரம் உள்நாட்டுக்குள்ளேயே தான், ஆனால் எமது வலைப் பதிவர்கள் உங்களுக்காகச் செய்தது உலகளாவிய விளம்பரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள், இது தான் இலவச விளம்பரம்.
    //பத்திரிகை, வானொலி மற்றும் வலைப்பதிவுகள் எல்லாவற்றிலும் விளம்பரப்படுத்திய விடயம் "இருக்கிறமால் ஒழுங்கு செய்யப்பட்ட அச்சுவலை சந்திப்பு" . இது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே... இதுவே இருக்கிறத்திட்கான விளம்பரத்துக்கு போதுமானது.//

    //திட்டமிடலில் ஏற்பட்ட சில தவறுகளும் ஏற்பாட்டாளர்களால் சில விடயங்களுக்கு கொடுத்த முக்கியத்துவமுமே நிகழ்வு பூரண முழுமைத்துவத்தை பெற தவறிவிட்டதாக கருதுகிறேன்.//

    //நிச்சயமாக நேற்று கலந்துகொண்டவர்களுக்கு தெரியும் 'எவ்வளவு சுதந்திரமாக ஒருவருடன் ஒருவர் பழகினோம்' என்று.. நிறைய நண்பர்கள் , நிறைய தொடர்புகள். ...//

    நிறைவாக,
    இருக்கிறம் சஞ்சிகை மீது எவ்வித மனக் கிலேசமும் "களத்துமேட்டுக்குக்" கிடையாது, தொடர்ந்து இச் சஞ்சிகை பயணிக்க வேண்டும் என்பதே அவா!

    அடுத்த சந்திப்பு குறையின்றி நடந்தேற கை கொடுப்போம், சிந்திப்போம்.

    இந்தச் சந்திப்பினை சர்வதேச ரீதியில் கொண்டு வர முயற்சி செய்த தோழர் மதுவதனன் கௌபாய் அவர்கட்கு பிரத்தியேகப் பாராட்டுக்கள்.

    இன்னும் இன்னும் அதிகம் எழுதத் தேவை இருக்காது என்பதால் இத்துடன் முடிவு செய்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  33. // எந்த மீடியாவும் கவனத்தில் கொள்ளாதிருந்த வலைப்பதிவர்களை இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம்//

    அப்படியா?
    தினக்குரல் பத்திரிகை மீடியா என்பதற்குள் வருவதில்லையா?
    அவர்கள் எங்களை அறிமுமுகப்படுத்துகிறார்களே தவிர தங்களை வளர்க்க முனையவில்லை.

    இருக்கிறம் சஞ்சிகைக்கு விளம்பரம் தேடுவது(ம்) நோக்கம் என்று இளையதம்பி தயானந்தா சொன்னாரே?
    அவர் இருக்கிறம் குழுவில் இல்லையா?

    பதிலளிநீக்கு
  34. நன்றி கனககோபி,

    வலைப்பதிவர்களை வைத்து இலவச விளம்பரம் தேடிய இருக்கிறம் சஞ்சிகையினரின் செயற்பாட்டை கண்ணை மூடியவாறு ஏற்றுக் கொள்ளக்கூடிய வலைப்பதிவர்களும் இருக்கிறார்கள் தானே, தங்களுக்கு அந்தஸ்த்துடன் கூடிய இருக்கை சந்திப்பில் கிடைத்ததால் ஏன் நொந்து கொள்வான் என கருத்துச் சொல்கின்றார்களோ என்னவோ!(தொப்பி அளவானவர்கள் போட்டுக் கொள்ளலாம்)

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----