நோர்வே நாட்டில் வாழும் சில தமிழர்கள் இணைந்து "நோர்வே ஈழத் தமிழர் அவை" எனும் நாமத்தில் நேற்று 2009.12.15 ஆம் திகதி தேர்தலை நாடாத்தினர்.
"# வன்னி வதை முகாம்களில், நாளும் இன்னலுறும் எம்முறவுகளின் இன்னல்களைப் போக்கிடச் சர்வதேச சமூகத்திடம் உரிமையுடன் குரல் கொடுக்கவும்,
# நோர்வே வாழ் தமிழர்களை ஒன்றிணைத்து, அவர்தம் வளர்ச்சிக்காய் வழிவகுக்கவும்,
# வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் தாயக உறவுகளின் நிரந்தரத் தீர்வுக்காய் பணியாற்றிடவும்" எனும் குறிக்கோளுடன் இத் தேர்தலை நடாத்தினர்.
நோர்வேயில் வாழும் வாக்களிக்கத் தகுதியான இலங்கைத் தமிழ் மக்களின் தொகை கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர், நேற்றைய தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 2767 பேராகும், ஆகவே கிட்டத்தட்ட 90 சதவிகிதமான 27,233 பேர் வாக்களிக்கவில்லை எனத் தெரிய வருகின்றது.
10 வீதமான தமிழ் வாக்காளர்கள் அளித்த வாக்குகளின் மூலமே நோர்வே ஈழத் தமிழர் அவை தெரிவாகியுள்ளது தெரியவந்துள்ளது, 90 வீதமான வாக்காளர்கள் இத் தேர்தலை நிராகரித்தமைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, அவற்றில் முதலாவதாக இவ்வமைப்பு விடுதலைப் புலிகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அமைப்பாகவும், மற்றைய காரணியாக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தினை மாத்திரம் பிறப்பிடமாகக் கொண்ட பிரதிநிதிகளை வேட்பாளர்களாக உள்வாங்கிக் கொண்டதும் ஆகும்.
இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அலகுகளாகும், இந்த எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் நோர்வே நாட்டில் வாழும் போது யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இத் தேர்தலுக்கான அபேட்சர்களாக நியமிக்கப்பட்டு தேர்தலும் நடந்து முடிந்துள்ளது, இங்கு உருவாக்கப்பட்டுள்ள பிராந்தியவாதத்தினால் 10 சத விகித வாக்குகளை மட்டுமே இந்த அபேட்சகர்கள் பெறக் கூடிய துர்ப்பாக்கியம் நிகழ்ந்துள்ளது, இதனை வைத்துக் கொண்டு நோர்வே வாழ் தமிழர்களின் பிரதிநிதிகள் தாமென தம்பட்டம் அடிக்கும் நிலை இவர்களுக்கு இல்லையென்பது தெட்டத்தெளிவாகின்றது.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது அபேட்சகர்களின் குடும்ப அங்கத்தவர்கள் செலுத்திய வாக்குகளாகவே கணிக்க முடிகின்றது, அவ்வாறே அபேட்சகர்களும் வாக்குகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேசியப் பட்டியலில் உள்ள ஜெயஸ்ரீ பாலசுப்பிரமணியம், ஆ.குமாரசாமி (ஆதி), சனுகாந்த் பரம்சோதி (சனு), ஸ்ரிவன் புஸ்பராஜா கருணசாமி, தயாபரன் பரமானந்தன், திலகவதி சண்முகநாதன், பஞ்சகுலசிங்கம் கந்தையா (Dr. ரமணன்), பியோனார் முக்ஸ்னெஸ் மற்றும் தர்மசீலன் தர்மலிங்கம் போன்றவர்களில் எவரும் யாழ்ப்பாணம் தவிர்ந்த வேறு எந்த இலங்கையின் தமிழ் மக்கள் வாழும் மாவட்ட பிரதிநிதிகளிடமிருந்து தெரிவு செய்யப்படவில்லை.
இந்தத் தெரிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதனை எவராலும் அறிய முடியவில்லை, இதற்கான காரணத்தையும் இந்த அவையினர் அறியத் தரவும் இல்லை.
"இனியாகிலும் நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம்" எனும் தலைப்பில் தேர்தற்குழு 2009.11.14 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கைக்கும் மேற்சொல்லப்பட்ட அபேட்சகர்கள் தெரிவுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கின்றது, யாழ்ப்பாணத்தை மாத்திரம் சொந்தமாகக் கொண்டவர்களை பட்டியலிட்டு பிரதேசவாதத்தை உருவாக்கிவிட்டு இனியாகிலும் நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம் எனக் கூறுவது வேடிக்கையாக இல்லையா?
யாழ்ப்பாணத்தாரின் அடக்குமுறையும் - தலைக்கனமும் ஒரு நாளும் அழியாது! இதுதானே இந்தளவுக்கு நாட்டை சீர்குலைத்திருக்கு!
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள் முகுந்தன்.
பதிலளிநீக்கு