ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

நிறைவெய்திய இலங்கைப் பதிவர் சந்திப்பு! - இணையவழி ஒளிபரப்பினூடான தேடல்.

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியது, வந்திருந்த ஆர்வலர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர், இந் நிகழ்வை சர்வதேசமே இணைய வழியாகப் பார்த்தும் கருத்துத் தெரிவிக்கக் கூடிய வகையிலும் ஒழுங்கு செய்யப்பட்டமை ஓர் வரப்பிரசாதமாகும்.

தொழிநுட்ப வளர்ச்சியினால் சர்வதேசமெங்கும் பரந்து வாழும் தமிழ் வலைப் பதிவர்கள் இந்த நேரடி நிகழ்வை முறையாகப் பயன் படுத்தியிருப்பார்கள், ஆனால் இதில் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டிய பதிவர்கள் தேவையில்லாமல் அரட்டையில் இறங்கியதே வேதனையாக இருந்தது.

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலங்கை வலைப் பதிவர் சந்திப்பை பலத்த வேலைப்பளுவுக்கும் மத்தியில் நிகழ்த்திக் கொண்டிருந்த தோழர்கள் நேரடி இணையத்தின் வழியான கருத்துத் தெரிவிக்கும் பகுதிக்கும் ஓடோடி வந்து வலைப் பதிவர்களின் அரட்டைக்கும் பொறுமையாகப் பதிலளித்துக் கொண்டிருந்தது சிறப்பாக அமைந்திருந்தது.

நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட வலைப் பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்ட போதிலும் அதனை இணைய வழி நேரடி நிகழ்வில் கேட்க முடியாமல் இருந்தது, காரணம் சத்தம் குறைவாகவும், தெளிவின்மையாகவும் இருந்தமையே, அது தொழிநுட்பக் கோளாறாக கொள்ளத் தக்கதே!

இளைய பதிவர் ஒருவரின் அறிமுகம் எல்லோரையும் திகைப்புக்கு உள்ளாக்கியது, அதிகம் கருத்துத் தெரிவிக்கா விட்டாலும் தந்தையினாலேயே இந்த பாதைக்குள் நுழைந்தாக குறிப்பிட்டது அருமை.

கலந்துரையாடலில் "யாழ்தேவி திரட்டி" பற்றிய விமர்சனம் சூடு பிடித்தது, பலரும் பல கருத்தினைத் தெரிவித்தனர், யாழ்தேவி எனும் நாமம் பொருத்தமற்றது என்பதுவே பலரது ஆதங்கமாக இருந்தது, இதில் பிரதேசவாதம் தொக்கி நிற்பதாக சிலரும், சின்னமாக பொருத்தமற்ற விதத்தில் புகையிரதம் இதில் இணைக்கப்பட்டிருப்பதாக சிலரும் விமர்சனம் செய்தனர். அதன் நிர்வாகத்தினரும் அதனை ஏற்றுக் கொண்டமை சந்திப்புக்குக் கிடைத்த சிறப்பம்சத்தில் ஒன்றாகும்.

அடுத்த சந்திப்பு பற்றியதாகவும், ஏற்பாட்டுக் குழுவினரின் நிர்வாகப் பொறுப்புக்கள் பற்றி பேசப்பட்ட போதிலும் முடிவெதுவும் எட்டப்படவில்லை. இறுதியில் சஞ்சிகையொன்றும் வினியோகிக்கப்பட்டு இனிதே நிறைவெய்தியது.

படங்களை நேரடியாக பங்கெடுத்த வலைப் பதிவர்களில் பதிவுகளில் காணாலாம்.
1. ஆதிரை
2. வந்தியத்தேவன்

பிந்திய இணைப்பு
3. மதுவதனன் மௌ

26 கருத்துகள்:

  1. நன்றிகள் ஈழவன் பதிவர் சந்திப்பை நேரடி ஒளிபரப்பில் பார்வையிட்ட பார்வையாளர்களில் ஒருவராக உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள்.

    அடுத்த சந்திப்பு பற்றிய எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை ஆனால் அடுத்த சந்திப்பை கொழும்பில் இல்லாமல் இன்னொரு நகரத்தில் வைக்கும் முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

    பதிலளிநீக்கு
  2. இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உள்ள பிரதேச வாதம் ஒருபோதும் மாற்றப்பட முடியாத ஒரு பிறவிக் குணம் என்பதை பதிவர் சந்திப்பும் ஊர்ஜிதம் செய்கிறது! எனினும் முதல் சந்திப்பு என்ற படியால் குறை நிறைகள் இருக்கத்தானே செய்யும்! பெயரைப் பற்றிக் குறைப்படுவோர் - எழுதும் எழுத்துக்களையும் விமர்சித்திருக்கலாம்! வெளிநாட்டில் இருப்பதால் நடந்தவற்றை முழுவதுமாக தெரியாமல் எதையும் சொல்ல முடியாது! பதிவுகளில் பதியப்பட்ட கருத்தை மட்டும் வைத்தே பதிவிடுகிறேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  3. ஈழவன்..
    முதல் பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றதாகவே கருதுகிறேன். இணையவழி பார்வையினூடு பார்வையிட்டு தங்களின் கருத்தினை பதிவிட்டிரக்கிறீர்கள். வாழ்த்துக்கள். எதிர்கால சந்திப்புக்கள் இன்னும் வெற்றிபெறும் என்று நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  4. களத்துமேட்டுக்கு வருகை தந்த வந்தியத்தேவனை வரவேற்கின்றேன்.

    உங்களை இணையம் வாயிலாகப் பார்க்கக் கிடைத்ததையிட்டு மகிழ்வெய்கின்றேன்.

    "ஒற்றுமையே பலம்" என்பது இந்தச் சந்திப்பின் எடுத்துக்காட்டு.

    நன்றி வந்தி.

    பதிலளிநீக்கு
  5. நன்றி முகுந்தன், நீண்ட நாளைக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி.

    சிறு குறைகள் இருப்பினும் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது, நீங்கள் சொன்ன மாதிரி முதற் சந்திப்பில் சில குறைகள் இருக்கத் தான் செய்யும்.

    எப்படி இருப்பினும் கணினி யுகத்தில் கொடி கட்டிப் பறக்கும் இந்தியர்களையும் அவர்களது பதிவுலகச் சந்திப்புகளையும் விஞ்சும் அளவுக்கு இலங்கைப் பதிவர் சந்திப்பு அமைந்தது என்றால் அதில் மிகையில்லை.

    பதிலளிநீக்கு
  6. களத்துமேட்டுக்கு வருகை தந்த மருதமூரானை வரவேற்கின்றேன்.

    அடுத்த சந்திப்பு இன்னும் சிறப்படைய அதற்கான உத்திகளை வகுக்க வேண்டிய கட்டாயம் இலங்கை வலைப் பதிவர்கள் அனைவருக்கும் உண்டு.

    இணையவழியாக உங்களைப் பார்க்கக் கிடைத்ததில் சந்தோசம்.

    நன்றி மருதமூரான்.

    பதிலளிநீக்கு
  7. ஈழவன்…..

    நீங்கள் பதிவர் சந்திப்பை தொடர்ந்தும் அவதானித்து வந்தது மகிழ்ச்சியே. சில தேவையற்ற அச்சங்களும், தோற்றப்பாடுகளும் ‘யாழ்தேவி’ குறித்து முன்வைக்கப்பட்டது. அவை, பதிவர்களின் திறந்த விவாதம் ஊடாக தீர்த்து வைக்கப்படும்.

    பதிலளிநீக்கு
  8. மருதமூரான் நீங்க குறிப்பிட்ட விடயம் சரியானதே!

    ஆரோக்கியமான விவாதத்தின் ஊடாக பல தரப்பட்ட விடயங்களுக்கு முடிவு காணலாம்.

    தமிழ்மணம் போன்ற பிரபல்யமான திரட்டிகள் இடம் கொடுக்க மறுத்த போதும் பல இலங்கைப் பதிவர்களுக்கு யாழ்தேவி தளம் கொடுத்ததை மறுப்பதற்கில்லை.

    அதன் சேவையும் அளப்பரியதே!

    பதிலளிநீக்கு
  9. முழுமையான ஒலி வடிவத்தினை இணைத்திருக்கிறேன் இங்கே

    ஈழவன் மைக்குடன் கூடிய நீட்சிக் கமராவினை வைத்தே ஒளிபரப்பினை ஆரம்பித்தோம். அது பிரச்சினை குடுக்க ஆரம்பிக்க மடிக்கணிணியின் மைக்குடன் ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. ஒலி தெளிவின்மைக்கு அதுவும் காரணமாயிருக்கலாம்.

    அப்படியே மீண்டுமொருமுறை உங்கள் சாட்டிங்கிற்குச் சென்று மீள அந்த சாட்டிங்க வரலாற்றினை பெறமுடியுமா என்று பாருங்கள். முடியுமானால் சேமித்து வையுங்கள்.

    பிரியமுடன்,
    கௌபாய்மது

    பதிலளிநீக்கு
  10. களத்துமேட்டுக்கு வருகை தந்த கௌபோய் மதுவை ஸ்நேகமுடன் வரவேற்கின்றேன்.

    இலங்கை வலைப் பதிவர் சந்திப்பை நன்றாக நடாத்தி முடித்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.

    அடுத்த தடவை பதிவர் சந்திப்பை இன்னும் சிறப்பாக நடத்த இம்முறை ஏற்பட்ட தவறுகள் படிப்பினையாக அமையும்.

    ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு இயல்பானதே, நீங்கள் குறிப்பிட்டவாறு அரட்டை வரலாற்றைத் தேடினேன், கிடைக்கவில்லை, இவை அனைத்தும் வரலாற்று ஆவணங்கள், இவற்றை நீங்கள் தொகுத்திருப்பீர்கள் எனும் நம்பிக்கை இருந்தது, என்ன செய்வது முடியாமல் போனது வருத்தம் தான்.

    வீடியோ பதிவுகள் எதுவும் செய்யவில்லையா?

    நன்றி மது.

    பதிலளிநீக்கு
  11. //சில தேவையற்ற அச்சங்களும், தோற்றப்பாடுகளும் ‘யாழ்தேவி’ குறித்து முன்வைக்கப்பட்டது.//

    மருதமூரான், தேவையற்ற... என்ற அடைமொழியை ஒரேயடியாக இங்கே நீங்கள் பாவிப்பது, மற்றவர்களின் கருத்துக்களுக்கு எவ்வளவு பெறுமதியை கொடுத்திருக்கின்றீர்கள் என்பதை காட்டுகின்றதா...???

    இன்றைய சந்திப்பில், சேரன் கிரிஷ் கூட யாழ்தேவிக்கு (அதன் பெயருக்கு) ஒரு புனிதம் கற்பிக்க முயன்றதை காணக்கூடியதாகவிருந்தது.

    நீங்கள் ஒன்று செய்யுங்கள், யாழ்தேவி திரட்டி தளத்தின் முகப்பில், அதன் பெயர் சம்பந்தமாக ஒரு திறந்த வாக்கெடுப்பை செய்யுங்கள். அப்போது, மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ளமுடியும்...

    இலங்கை பதிவர்களின் பதிவுகளை ஒன்றிணைக்கும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியதே, தொடர்ந்து செய்யுங்கள்...

    மது வர்மன்

    பதிலளிநீக்கு
  12. மதுவர்மனை களத்துமேட்டிற்காக வரவேற்கின்றேன்.

    எனது பதிவை வாசித்து விட்டு அதற்காக பின்னூட்டமிட்ட மருமமூரானின் வரிகளில் யாழ்தேவி திரட்டி பற்றியதான விமர்சனக் கருத்தாடல் அமைந்திருந்தது, வலைப்பதிவர் சந்திப்பில் மருதமூரான் உரையாற்றும் போது யாழ்தேவியின் சார்பாகவே உரையாற்றினார்.

    தோழர் மதுவர்மன் நீங்கள் உணரும் ஆதங்கத்துக்கு மருதமூரானே பதில் சொல்ல வேண்டும் என்பது எனது கருத்து.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. ஒளிப்பதிவு செய்யப்பட்டாலும் 4 மணிநேர நிகழ்ச்சி சுருக்கப்பட்டு 1.5 மணி நேரத்துக்குதான் பதியப்பட்டது.. நீங்கள் நேரடி ஒளிபரப்பை கண்டு களித்தமை மகிழ்வூட்டுகிறது.. முதல்சந்திபபில் இவ்வளவு செய்யமுடியுமானால் இனிவரும் காலங்களில் இன்னும் திறம்படச்செய்யலாம் என்ற நம்பிக்கை உண்டு.. கத்துக்களுக்கும் பதிவுக்கும் நன்றி ஈழவன்.. அத்தோடு இந்திய சிங்கைப்பதிவர்கள் எங்கோ சென்று விட்டார்கள்..அவர்கள் புத்தக வெளியீடு திரைப்படக்காட்சி சுற்றுலா என்று மிகவும் சிறப்பான முறையில் பதிவர்கள் சந்திப்பை முன்னெடுத்துச்சென்றுள்ளார்கள்.. அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்பது என் அவா... நன்றி

    பதிலளிநீக்கு
  14. இந்தச் சந்திப்பு முதல் சந்திப்பாக இருந்தாலும் நல்ல பல விடயங்கள் பேசப்பட்டதோடு. வெற்றிகரமான சந்திப்பாகவும் அமைந்தன.

    அடிக்கடி சந்திப்புக்களை ஏற்படுத்தி நல்ல பல விடயங்கள் ஆராயப்பட வேண்டும் என்பதே என் அவா.

    இந்தச் சந்திப்பில் நான் கலந்து கொள்ள முடியாமல் போனது கவலையாக இருந்தாலும் நேரடி ஒளிபரப்பு சந்தோசத்தைத் தந்தது நிம்மதியே.

    பதிலளிநீக்கு
  15. களத்துமேட்டில் புல்லட்டை வரவேற்கின்றேன்.

    ஒளிப்பதிவு சுருக்கப்பட்டாலும் கூட அவை வரலாற்று ஆவணமாக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது, ஆகவே உங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது, பாராட்டுக்கள்.

    இவற்றைப் படிப்பினையாகக் கொண்டு எதிர்வரும் காலங்களில் சீரிய வலைப்பதிவர் சந்திப்பு இடம்பெற வேண்டும்.

    நன்றி புல்லட்.

    பதிலளிநீக்கு
  16. சந்ருவை களத்துமேட்டில் வரவேற்கின்றேன்.

    முதலாவது வலைப்பதிவர் சந்திப்பு காத்திரமாக அமைந்திருந்தது, ஏற்பாட்டுக் குழுவினர் திறமையாக உழைத்திருந்தனர், இது தானே ஆரம்பம் ஆகையால் இன்னும் திறமையாகச் செயற்படுவார்களென நம்புவோம்.

    நன்றி சந்ரு.

    பதிலளிநீக்கு
  17. நினைச்சனான் உது நடக்கும் எண்டு.ஏன் யாழ்தேவி எண்டு பெயர் வைச்சநீங்கள் கண்டித்தேவி திருகோணமலைத்தேவி என்று பெயர்வைக்கவில்லையே என்று எங்களது சீர்திருத்தவாதிகள் கேட்பார்கள் என்று.யாழ்தேவி திரட்டி ஆரம்பித்து பத்திரிகையாக வெளியிடும் எண்ணத்தை இலண்டனில் ஒரு இலக்கியக்கூட்டத்தில் கதைத்தபொழுது நானும் இருந்தேன்.அப்;பொழுதே உந்தப்பிரச்சனை ஆரம்பித்தது.ஆனால் அதை ஆரம்பித்த இந்த இளம்கலைஞர்வட்டம் மற்றும் அதனுடன் இணைந்துள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் அவர்களது உண்மையான அர்பணிப்புள்ள நோக்கம் மின்னஞ்சலூடாக வாசிக்கப்பட்டபொழுது கூடியிருந்தவர்கள் வாய்மூடி மௌனமாய் இருந்தார்கள்.அந்தப்பெயரை மாற்றவேண்டும் என்று அழுத்தம் கொடுத்தவர்கள்கூட அதன்பிறகு எதுவும் பேசவில்லை.யாழ்தேவி ஒரு இணைப்புப்பாலமாக பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு இலங்கைக்கான பொது அடையாளமாக இருக்கும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.எங்களுக்கு வாதிடுவதற்கும் சண்டைபோடுவதற்கும் பிரச்சனைகள் இருக்கின்றன.பெரிய பிரச்சனைகள்.இந்தக்குறுகிய வட்டத்திற்குள் நின்று பார்காத ஊத்தைப்பிரதேசவாதத்தை பேசாத பதிவர்கூட்டம் யாழ்தேவிக்குப்பலமாக இருக்கும் என்று நம்புகிறேன்.ஆனானாலும் அதன் சின்னததை ஒரு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஒரு குறியீடாக மாற்றும்படி எனது கருத்தை தெருவித்துக்கொள்கிறேன்.இந்த பிரதேசவாத்தை கருத்தில் எடுப்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் வன்னிசிங்கம்

    யாழ்தேவி திரட்டியை இணையத்தில் முதன்முதலில் பார்த்தவர்கள் அனைவருக்கும் பிரதேசவாதம் அல்லது புகையிரதம் பற்றிய சிந்தனையே தொக்கி நின்றிருக்கும்,ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யாரென தேடிக் கொண்டிருந்தோருக்கு இன்றைய பதிவர் சந்திப்பு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.

    முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் தனது ஆய்வு நூலுக்கு யாழ்நூல் எனப் பெயரிட்டுள்ளார், அது உலகளாவ பெயர் பெற்றது, ஆனால் இதில் பிரதேசவாதம் தொற்றிக் கொள்ளவில்லை, காரணம் அவர் வடக்கின்றி கிழக்கின் காரைதீவு எனும் கிராமத்தைச் சேர்ந்தவராதலால், ஆனால் யாழ்தேவி திரட்டி அப்படியல்ல, பொது நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது, இருப்பினும் யாழ்தேவி புகையிரதம் வடக்கை நோக்கி மீண்டும் பயணிக்கத் தொடங்கிய காலத்தில் யாழ்தேவி திரட்டியும் ஒழுங்கமைக்கப்பட்டு புகையிரத குறியீடுடன் புறப்பட்டது தான் இந்த ஆதங்கத்துக்குக் காரணம் என்று நினைக்கின்றேன்.

    யாழ்தேவி திரட்டிக்கான புகையிரத குறியீடு பொருத்தமற்றது என்பது என்னுடைய ஆதங்கமும் கூட, இவற்றை சம்பந்தப்பட்டோர் கருத்தில் எடுத்து ஆரோக்கியமாக திரட்டியை முன் நகர்த்துவர் என்பது திண்ணம்.

    இங்கு பெயரும் குறியீடும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில் குறியீட்டை மட்டும் மாற்றாமல் கூடவே பெயரையும் மாற்ற முனைவது காத்திரமாக இருக்கும் என்பது எனது கருத்து.
    உருவாக்கப்படும் குறியீடும், பெயரும் பொதுவானதாக இருப்பதுடன் எமது பண்பாட்டையும் பிரதிபலித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வன்னியசிஙம்,
    //.யாழ்தேவி ஒரு இணைப்புப்பாலமாக பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு இலங்கைக்கான பொது அடையாளமாக இருக்கும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது//

    உங்களுக்கு, எனக்கு, மற்றும் சிலருக்கு இது தெளிவாகவே விளங்குகின்றது.

    புதிது புதிதாக உருவாகப்போகும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் இதை விளங்கப்படுட்திக்கொண்டிருக்கமுடியுமா?

    First Impression என்று சொல்லப்படுகின்ற, முதல் அபிப்பிராயம் என்பது மிக முக்கியமல்லவா?

    உண்மையை சொல்கின்றேன், 2009 இன் இலங்கை வலைப்பதிவர் சந்திப்பில் தான் நான் முதன் முதலில் யாழ்தேவி யை பற்றி அறிந்துகொண்டேன். பெயர் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது.

    புதிதாக அணுகும் பதிவர்களை, கொஞ்சம் தூர விலகிநின்றே பார்க்கச்செய்யும்.

    இங்கே பிரதேசவாதம் பேசவில்லை, இந்த திரட்டியின் எதிர்கால் வெற்றிக்காகவே பெயர் தொடர்பாக இங்கே கதைக்கவேண்டியுள்ளது.

    ஏற்கனவே பிரதேசவாதம் தமிழ் மக்களை இன்று முள்வேலிகளுக்கு பின்னால் கொண்டுவந்து விட்டுள்ளதை மறந்துவிட்டு பேசமுடியாது. பெயரளவில் கூட அது வெளிக்காட்டப்படுவதை தவிர்ப்போமே.

    நல்லதொரு விடயத்தை செய்வதற்கு எந்தவொடு சிரமத்தையும் எடுத்துக்கொள்வதில் தப்பில்லை.

    என்ன, யாழ்தேவி திரட்டியின் பெயர் மாற்றப்பட்டால், அதில் எல்லோரும் இணைந்துகொள்வார்கள், இல்லாவிட்டால் ஒருசாரார் கொஞ்சம் விலகியே நிற்பார்கள்.

    எது நல்லது என்று சிந்தித்து எடுக்கவேண்டிய முடிவு இது..

    பதிலளிநீக்கு
  20. கலந்துகொண்ட எல்லோருக்கும் வழிநடத்தியவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். :)

    பதிலளிநீக்கு
  21. மதுவர்மனின் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  22. ஊர்சுற்றியை களத்துமேட்டில் வரவேற்கின்றேன்.

    உங்கள் வாழ்த்தும் நன்றியறிதலும் இலங்கைப் வலைப்பதிவர் ஏற்பாட்டுக் குழுவினருக்கு உரித்தாகட்டும்!

    நன்றி ஊர்சுற்றி.

    பதிலளிநீக்கு
  23. உங்கள் பதிவிற்கு நன்றி. எல்லா புகழும் இறைவனுக்கும் பதிவர்களுக்குமே.

    பதிலளிநீக்கு
  24. களத்துமேட்டுக்கு வருகை தந்த எஸ்சதீஸ் அவர்களை வரவேற்கின்றேன்.
    இலங்கை வலைப் பதிவர் சந்திப்பை ஏற்பாட்டுக் குழுவினர் மிகவும் திறமையாக நடாத்தி உள்ளனர், அதனால் மனதார அவர்களைப் பாராட்டுவதில் பின் நிற்கத் தேவையில்லை என்பதாலேயே இணையவழி ஒளிபரப்பினூடான தேடலைப் பதிவு செய்திருந்தேன்.

    நன்றி சதீஸ்

    பதிலளிநீக்கு
  25. நகைச்சுவைக்காக எழுதினேன். பதிவர் சந்திப்பு சிறப்பாக இருந்தது.
    முதன் முதலில் சினிமாவை விமர்சித்த ஒருவர் படத்தை பார்த்துவிட்டு மரங்களும் ஆட்டுக்குட்டியும் நல்லா நடித்திருக்கு என்றாராம். ஆனால் இப்ப சினிமாவின் வளர்ச்சி பிரமாண்டமானது அது போல நம்ம பதிவர் சந்திப்பும் வரணும் என்ற ஆதங்கத்தில தான் இப்பிடி ஒரு பதிவு.

    பதிலளிநீக்கு
  26. களத்துமேட்டுக்கு வந்த இலங்கனை வரவேற்கின்றேன்.

    நகைச்சுவையாக எழுதினாலும் உளசுத்தியோடு எழுதியுள்ளீர்கள், நானும் நகைச்சுவைக்காகவே உங்களது பதிவுக்கு பின்னூட்டமிட்டேன், பாராட்டுக்களும் கூடவே நன்றியும்.

    நான் தொலைவில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது, ஆனால் இணைய வழியாகக் கலந்து கொண்ட பெருமை எனக்கு இருக்கின்றது.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----