புத்திசுவாதீனமற்ற இளைஞர் ஒருவர் பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தின் மீது கல்வீச்சு நடத்திவிட்டு கடலில் குதித்துத் தப்பி ஓடிய போது துரத்திச் சென்ற ஸ்ரீலங்கா பொலிஸார் அவ்விளைஞனை கடலில் வைத்து அடித்து மூழ்கடித்துக் கொலை செய்துள்ள கொடூர சம்பவத்தினை பம்பலப்பிட்டியில் உள்ள Z Building இல் இருந்து TNL தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் மிகவும் துல்லியமாக வீடியோ காட்சியாகப் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டத்தினையும் பாதுகாப்பினையும் பேணிக் காக்க வேண்டிய காவற்துறையினர் ஸ்தலத்திலேயே தண்டனையைக் கொடுக்க முனைவது கண்டிக்கப்பட வேண்டியதே, நீதி தேவதை கண் திறப்பாளா?
அன்பைப் போதித்த கௌதம புத்தருடைய நாட்டில் நடக்கும் இன்னொரு அதர்மத்துக்கான ஆதாரம்! என்னால் இதையெல்லாம் பார்த்தக்கொண்டிருக்க முடியவில்லை ஈழவா! என்ன செய்யலாம்?
பதிலளிநீக்கு< இலங்கையில் மனநோயாளிகளை நேசிக்கத் தெரிந்தவர்கள் எவராவது உள்ளனரா என வினாவினால் பதில் கசப்பாகவே இருக்கும்.
பதிலளிநீக்குமுகுந்தன் நீங்கள் வாழும் சுவிஸ் நாட்டில் எங்கேனும் புத்திசுவாதீனமற்றவர்கள் யாரையாவது பார்த்தீர்களா, சந்தற்பம் இல்லை, அப்படி இருப்பினும் அந்நோயாளியைப் பராமரிப்பதற்கென பயிற்சி பெற்ற ஒருவர் கூடவே இருப்பார், அந்நாட்டுப் பிரஜையான மனநோயாளிக்கும் அரசு அங்கீகாரம் கொண்ட கௌரவத்தை வழங்குகின்றது.
எமது நாட்டில் மனநோயாளிகளை கௌரவப் பிரஜையாக எவரும் நோக்குவதில்லையே, பாவப்பட்ட கேலிப் பொருளாகவே எல்லோரும் புத்திசுவாதீனமுற்றவரைப் பார்க்கின்றோம். இதனாலேயே இலங்கையின் தலைநகரம் முதல் கிராமப் புற வீதிகளெங்கும் மனநோயாளர்கள் பரவிக் கிடக்கின்றனர்.
இவர்களையும் கௌரவமாக நடத்தக் கூடிய பக்குவம் எமக்கு ஏற்பட்டாலொழிய இந்நோயாளிகளை இல்லாமலாக்கிவிட முடியாது.
அடித்துக் கொல்லப்பட்ட இளைஞனின் மரண விசாரணையைத் தொடர்ந்து பாகுபாடற்ற விசாரணை முடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.b>
மனித இனத்தையே மதிக்க தெரியாதவர்களுக்கு மன நோயாளியை மதிக்க தெரிந்திருக்குமோ ?
பதிலளிநீக்கு