இலங்கையின் கொழும்பு - 7, ரொறிங்டன் அவனியூ, இலக்கம் - 3 இல் அமைந்துள்ள "இருக்கிறம்" சஞ்சிகை அலுவலகத்தில் நவம்பர் இரண்டாம் நாளாகிய நாளை மாலை 3 மணியளவில் வலைப்பதிவர்கள் மற்றும் அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெற இருக்கின்றது.
இச் சந்திப்பு வலைப்பதிவருக்கான உத்தியோகபூர்வ இரண்டாவது சந்திப்பாக மதிப்பிடப்படுகின்றது, இச்சந்திப்பு சிறப்படைய "களத்துமேடு" வாழ்த்துகின்றது.
இந்தச் சந்திப்பினை இணைய வழியூடாகச் சென்று கலந்து கொள்வதற்கான வாய்ப்பினை தோழர் கௌபாய்மது எனப்படும் மதுவதனன் மௌ.ஏற்பாடு செய்துள்ளார், முதலாவது வலைப்பதிவர் சந்திப்பினை இணைய வழியூடாகவும் பங்குபற்ற வழி வகுத்தவர் மதுவதனன் என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த தடவை ஏற்பட்ட தவறுகள் இனிமேலும் ஏற்படாது என எதிப்பார்க்கப்படுகின்றது.
இந்தச் சந்திப்பானது இலங்கைப் பதிவர்களுக்கு மட்டுமானதா அல்லது சர்வதேச பதிவர்களுக்குமானதா என அறிய முடியவில்லை, தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள்.
நாங்களும் பங்குபற்றலாம் என்பதுபோலத்தான் ஏற்பாடுகள் இருக்கிறது! நேரடியாக இணைய தொடர்புமூலம் இணைந்து எமது அபிப்பிராயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன் ஈழவரே!
பதிலளிநீக்குமுதலாவது இலங்கை வலைப்பதிவர் சந்திப்பில் இணைய வழியூடாக நான் கலந்து கொண்டேன், அந்நிகழ்ச்சியையும் ஏப்பம் விடக்கூடிய அளவுக்கு இன்றைய சந்திப்பையும் ஏற்பாட்டாளர்கள் ஒழுங்கு செய்திருப்பார்கள் என்பது திண்ணம்.
பதிலளிநீக்குஏனெனில் முந்திய நிகழ்வின் படிப்பினை இன்னும் இச் சந்திப்பை மெருகூட்டும்.
இணையவழிச் சந்திப்பில் கலந்து கொள்வோம் முகுந்தன்.
அன்பு நிறைந்த என் ஈழவனுக்கு,
பதிலளிநீக்குமுதலில் மன்னிப்புக்கள். இருக்கிறம் ஏற்பாடு செய்த நிகழ்வின் நேரடித் தொடர்பாடலில் ஏற்பட்ட தவறுகளுக்கு இருக்கிறம் நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரிய பீடத்தினர் சார்பிலான மன்னிப்புக்களை அவர்கள் சார்பில் நான் முன் வைக்கிறேன்.
தவறுகளைத்தான் அனுபவம் என்று சொல்கிறார்கள், எங்கள் அனுபவத்தை அங்கீகரிக்க மாட்டீர்களா?
என்றுமன்புடன்,
இளையதம்பி தயானந்தா
"விமர்சனத்தை எவன் ஏற்கின்றானோ அவன் முழு மனிதன்" இவ்வாக்கியம் பொய்க்கவில்லை.
பதிலளிநீக்குதோழர் தயானந்தாவுக்கு நன்றி. இதில் மன்னிப்பு என்றெல்லாம் பெரிய வார்த்தைகள் எதற்கு, அடுத்த சந்திப்பு தடையின்றி நடக்கும் என எதிர்பார்ப்போம், கைகோர்ப்போம்.
இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் உருவான சந்திப்புக்கு ஒத்துழைக்க வந்த வலைப்பதிவர்களான தோழர் மதுவதனன் போன்றோருக்கு நீங்களும் கை கொடுத்திருந்தால் நிகழ்வு எங்கோ போயிருக்கும்.
அன்புடன்
ஈழவன்