அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், ஔவையார், இளங்கோ அடிகள் போன்ற பற்பல விற்பன்னர்கள் தமிழைச் செம்மைப்படுத்த அரும்பாடுபட்டு உழைத்தார்கள், அவர்களின் நிகரற்ற சேவையினாலேயே இன்று தமிழ்மொழி செம்மொழியாகத் திகழ்கின்றது. ஆங்கில மோகத்தில் சிக்கியுள்ள எமது இளம் தலைமுறையினர் எதிர்காலத்தில் தமிழை முற்றாக மறந்து போகக் கூடிய விதத்தில் தற்போது துள்ளிசையில் தமிங்கில திரைப்படப் பாடல்கள் தயாரிக்கப்படுகின்றன.
புதன், 23 நவம்பர், 2011
தனூஸுக்கு ஏன் இந்த கொலைவெறி! - காணொளி
அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், ஔவையார், இளங்கோ அடிகள் போன்ற பற்பல விற்பன்னர்கள் தமிழைச் செம்மைப்படுத்த அரும்பாடுபட்டு உழைத்தார்கள், அவர்களின் நிகரற்ற சேவையினாலேயே இன்று தமிழ்மொழி செம்மொழியாகத் திகழ்கின்றது. ஆங்கில மோகத்தில் சிக்கியுள்ள எமது இளம் தலைமுறையினர் எதிர்காலத்தில் தமிழை முற்றாக மறந்து போகக் கூடிய விதத்தில் தற்போது துள்ளிசையில் தமிங்கில திரைப்படப் பாடல்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஞாயிறு, 20 நவம்பர், 2011
லண்டலில் மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் தடங்கல்!
தமிழீழ விடுதலைப் புலிகளால்
வருடாந்தம் நவம்பர் 27 ஆம் திகதி அனுட்டிக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள், 2009 ஆம்
ஆண்டு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை முற்றுப் பெற்றதாக
அறிவிக்கப்பட்டு, விடுதலைப் புலிகளின் முக்கியத்தர்கள் அரச படைகளிடம் சரணடைந்ததைத்
தொடர்ந்து விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் முடிவடைந்தன, ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில்
வாழும் விடுதலைப் புலிகள் இம்முறை மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு செய்துள்ள
போதிலும் சிறு சிறு பிரிவுகளாகவுள்ள அணிகள் ஒன்றுக்கொன்று மோதலில் ஈடுபட்டுள்ளதால்
நிகழ்வு தடைப்படும் நிலையை எட்டியுள்ளது.
வியாழன், 17 நவம்பர், 2011
சமாதான உடன்படிக்கையின் தோல்வி "அமைதிக்கான அடமானங்கள்" - வீடியோ இணைப்பு
ஶ்ரீ லங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கை தோல்வி அடைந்தது தொடர்பாக கடந்த 2011.11.12 ஆம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் "அமைதிக்கான அடமானங்கள்" (Pawns of Peace) எனும் தலைப்பில் 208 பக்கங்களைக் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
ஞாயிறு, 13 நவம்பர், 2011
மீளா துயில் கொண்ட சிவதாசன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
வட இலங்கை இடதுசாரி தலைவர்களுள் ஒருவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இரண்டுமுறை பதவி வகித்திருந்தவருமான தோழர் சிவதாசன் அவர்கள், இன்று (2011.11.13) மாலை தனது 77வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் 2006ல் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தும் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டிருந்த தோழர் சிவதாசன் அவர்கள் ஏறத்தாழ 50 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்ட விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் இடதுசாரி அரசியல் தலைவர்களுள் ஒருவர் என்பதுடன் அறுபதுகளின் பிற்பகுதியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்திருந்த பல ஆயுத அரசியல் போராட்டங்களின் முன்னோடிகளுள் ஒருவருமாவார். இலங்கையின் மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த சிறந்த மொழி பெயர்ப்பாளருமான தோழர் சிவதாசன் அவர்கள் இறக்கும்வரையில் இலங்கையின் ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் விமோசனத்திற்காக அயராது குரல்கொடுத்துவந்திருந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அரசியலில் கத்துக்குட்டி - எரிக் சொல்ஹைம்.
2001 ஆம் ஆண்டு தொடக்கம் 10 தடவைகள் நோர்வே நாட்டின் சுற்றாடல் மற்றும் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹைம் அவர்களைச் சந்தித்த தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசியலில் கத்துக்குட்டியாக இருந்து வந்தாரென இந்திய செய்தி ஊடகமான ஐ ஏ என் எஸ் இற்கு எரிக் சொல்ஹைம் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
திங்கள், 7 நவம்பர், 2011
கொழும்பு மாநகரசபைக்கு மனோவின் ஆதரவைக் கோரிய ரணிலின் கடிதம்.
கொழும்பு மாநகரசபையின் ஆட்சிப் பொறுப்பைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிராததால் மாநகரசபை முதல்வர் ஏ.ஜே.எம். முஸாமில் நிர்வாகத்தைக் கொண்டு நடாத்துவதில் சிக்கல்கள் நிகழக் கூடும் என உணர்ந்ததால் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவினை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் கோரியுள்ளார்.
சனி, 5 நவம்பர், 2011
ஶ்ரீ லங்கா தொடர்பான இணையத்தளங்கள் ஊடக - தகவல் அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும்.
வியாழன், 3 நவம்பர், 2011
விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியின் செவ்வி. - காணொளி
ஶ்ரீ லங்காவில் இடம்பெற்ற விடுதலை புலிகள் மீதான யுத்தம் தொடர்பாக "Freedom Speaks"எனும் ஆவண திரைப்படம் அண்மையில் கொழும்பில் அங்குராப்பணம் செய்யப்பட்டது, அந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை "அததெரண தமிழ்" இணையத் தளம் சந்தித்தது, அவர்களுள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டாயத்தின் பேரில் இணைக்கப்பட்ட புதுக்குடியிருப்பைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளி விஸ்வநாதன் நிரோசா என்பவரை செவ்வி கண்ட போது தெரிவித்த கருத்துக்கள் காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)