இந்தியாவின் மகாராஷ்டிராவின் சாங்கிலிவாடி கிராமத்தைச் சேர்ந்த 11 வயதுடைய பிருதுவிராஜ் பாட்டேல் விசித்திரமான நோய்க்கு இலக்காகி உள்ளார்.
பிறக்கும் போது இவரது தலையில் மட்டுமன்றி உடலின் ஏனைய பாகங்களிலும் உரோமங்கள் இருந்தன, சிறுவனின் வளர்ச்சிக்கேற்ப தலைக் கேசம் வளர்வது போன்று முகத்திலுள்ள உரோமங்களும் வளர்ச்சியடைந்து வருகின்றது.
சமீபத்தில் நடந்த சாங்லி மருத்துவ முகாமுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனின் முகத் தோற்றம் கமராவினுள் சிக்கிக் கொண்டது.
பாவம் சிறுவன். ஏந்தான் முகத்தில் உள்ள முடியை வெட்டாமல் விட்டு வைத்திருக்கிறார்களோ! ஒரு வேளை வெட்டினால் முடி ரொம்பவும் தடிமனாக ஆகிவிடும் என்கிற அச்சமாக கூட இருக்கலாம். பதின்ம வயதுகளில் வரும் உணர்வுகளால் சக வயது பெண்களை நெருங்க படப் போகும் துன்பத்திற்கு எல்லையே இருக்காது...
பதிலளிநீக்குபகிர்ந்தமைக்கு நன்றி களத்துமேடு.
களத்துமேட்டுக்கு வருகை தந்து பின்னூட்டமிட்ட மாசிலாவுக்கு நன்றி.
பதிலளிநீக்கு)இப்படி பிறேசிலில் ஒரு குடும்பத்தில் 5 பிள்ளைகள் 2 பெண்கள் உட்பட உள்ளனர்; அவர்களை கரடி மனிதர்கள் என்கிறார்கள்;வறியகுடும்பம் புதினம் பார்க்கவரும் சுற்றுலாப்பயணிகள் உதவியுடன் கல்வியைத் தொடர்கிறார்கள்; இதில் மூத்த 16 வயது இளைஞருக்கு கனடிய அதே வயது பெண்தோழி கிடைத்துள்ளார். அவர்கள் சந்தோசமாக (முத்தமிட்டவண்ணம்) கடலோரம் உலாவியதையும் தொலைக் காட்சியில் "நம்பக் கஸ்ரம் ஆனால் உண்மை" எனும் நிகழ்ச்சியில் காட்டினார்கள்;. இந்தியச் சிறுவன் எனக்குப் புதிய செய்தி.
பதிலளிநீக்குயோகன் பாரிஸ்(Johan-Paris)தங்களின் தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குமானுடப் பிறவியிலும் எத்தனை சிக்கல்கள்!