ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் "கிழக்கின் வெற்றி" பற்றிய செய்தி தொடர்பாக "தமிழர்களுக்கான தீர்வை முன்வைக்க மஹிந்த அரசாங்கம் தயாராக இல்லை, தீர்வை முன்வைக்குமாறு பன்னாட்டு சமூகமும் அழுத்தங்களைக் கொடுக்கத்தவறிவிட்டது, மஹிந்த அரசாங்கம் பரப்புரை செய்ததுபோல கிழக்கின் வெற்றி அவர்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் நீக்குவதற்கான திட்டமிடல்களையும் ஒழுங்குபடுத்தல்களையும் தமிழீழ தேசியத்தலைவர் மேற்கொள்கின்றார். எமது தேசியத் தலைவர் அவர்கள் சிறிய பலத்துடன் பெரிய மாற்றங்களைச் செய்ய ஆயத்தமாக இருக்கிறார்" இவ்வாறு கிளிநொச்சியில் நேற்று முன்தினம் புலிகளின் குரல் முத்தமிழ் கலையரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியற்றுறைப் பொறுப்பாளர் திரு.சி. எழிலன் கருத்துத் தெரிவித்தார்.
இவரின் கருத்துத் தொடர்பாக தமிழீழத்தில் வாழும் மக்கள் கூறுகையில்,
பலம் வாய்ந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இன்றைய நிலையில் சிதைவுற வைத்ததுடன் எண்ணற்ற போராளிகளையும் பொது மக்களையும் இல்லாதொழித்து பல போராளிகளையும் எண்ணற்ற பொதுமக்களையும் ஊனமுற வைத்து கிழக்கில் பல அகதி முகாம்களை உருவாக்கி விடுதலைப் புலிகளை வன்னிப் பகுதிக்குள் முடங்கும் அளவுக்கு மாற்றமுறச் செய்தவர் தான் இந்த சி.எழிலன், இவர் கருத்து தெரிவிப்பதற்கு எவ்வித அருகதையும் அற்றவர்.
எவ்வித தொந்தரவுமின்றி அமைதியாக இருந்த மூதூர், சம்பூர் மாவிலாறு ஆற்றைப் பூட்டி விவசாயிகளுக்குச் செல்லும் நீரைத் தடுத்து பேரம் பேச முற்பட்டதன் விளைவே இன்றைய தமிழீழ விடுதலைப் புலிகளின் அறுவடையாகும்.
"தமிழ்வின்" இணையத்தில் வந்த செய்தி தகவலுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
மஹிந்த அரசாங்கம் பரப்புரை செய்ததுபோல கிழக்கின் வெற்றி அவர்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற புலிகளின் குரல் முத்தமிழ் கலையரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:
தமிழர்களுக்கான தீர்வை முன்வைக்க மஹிந்த அரசாங்கம் தயாராக இல்லை. தீர்வை முன்வைக்குமாறு பன்னாட்டு சமூகமும் அழுத்தங்களைக் கொடுக்கத்தவறிவிட்டது.
மஹிந்த அரசாங்கம் பரப்புரை செய்ததுபோல கிழக்கின் வெற்றி அவர்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் நீக்குவதற்கான திட்டமிடல்களையும் ஒழுங்குபடுத்தல்களையும் தமிழீழ தேசியத்தலைவர் மேற்கொள்கின்றார். எமது தேசியத் தலைவர் அவர்கள் சிறிய பலத்துடன் பெரிய மாற்றங்களைச் செய்ய ஆயத்தமாக இருக்கிறார் என்றார்.
ஐயா களத்துமேடு யார் ஐயா உங்களுக்கு தமிழீழம் வாழ் தமிழ்மக்களின் கருத்துக்களை கொண்டுவந்து தந்தது.
பதிலளிநீக்குசிங்களப் போர்வெறிக்கு மாவிலாறு சாட்டுக்கு இல்லை என்றால், அது அடங்கிவிடும் என்று கனவுகாணும் அந்த மேதாவித்தனங்களைப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது.
தமிழ்மக்களுக்கு சிங்கள அரசு காதுகுத்த ஆசைப்பட்டால் அது வெறும் கனவாகவே இருக்கமுடியும், இப்படிப் பட்ட கருத்துக்களையெல்லம் எங்களின் சார்பில் அவர்களாகவேதான் விடவேண்டும், அதை கோமாளிப் பதிவுகள் மூலம் தெரியாமல் எடுத்து ஒட்டவேண்டியதுதான்
tamil makkalin kanavu vanniyil veeduku oruvarai supply pannum nilaiku vanthudduthu...karuna may have a point....
பதிலளிநீக்குகளத்துமேட்டுக்கு வந்து பதிவிட்டுச் சென்ற தேவன் அவர்கட்கு:-
பதிலளிநீக்குஇத் தளம் ஊடகப் புதினங்களை திறனாய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டது என்பதனால் தவறான செய்திகளைத் தோல் உரித்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது. இதில் நேர்மையான கருத்தோ அல்லது மாற்றுக் கருத்தென்றோ எதுவும் கிடையாது.
பதிவாகிய செய்திகள் எங்கிருந்து பெறப்பட்டது என்பதனை ஆதாரத்துடன் குறிப்பிட்டு இருக்கும் போது, செய்திகளை யார் தந்தது என நீங்கள் வினாவுவது எந்தளவுக்கு பொருத்தமானது?
23 ஆடி 1983ஆம் ஆண்டு காலம் தொடக்கம் தின்னவேலியில் இருந்து பலமாக உருவெடுத்த இன விடுதலைப் போராட்டம் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டை எட்டி விட்டது, ஆனால் ஈழம் வாழ் தமிழர்களுக்கு கிடைத்த பெறுபேறு தான் என்ன?
மரபுவழிப் போராட்டம் தூக்கியெறியப்பட்டு மீண்டும் கால் நூற்றாண்டுக்கு முன் உருவான கெரில்லாப் போராட்டம் வீரியமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் இளந்திரையன் கூறியது மக்களுக்குக் கூறுவது தான் என்ன? வலுக் கட்டாயமாகத் திணிக்கப்படும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத அப்பாவிகள் துரோகிகளென காரணங்கூறி சுட்டுக் கொல்லப்படுவதும், தெருத் தெருவாய் கண்ணிவெடிகளும், குண்டு வீச்சுக்களும் இப்போது முளைக்கத் தொடங்கியுள்ளன, அப்படியானால் கால் நூற்றாண்டு போராட்டம் தந்த பரிசு தான் என்ன?
இன்றைய தமிழீழத்தில் சகோதரப் படுகொலைகளும், அகதி வாழ்க்கையும், மயான பூமிகளும் மற்றும் ஊனமுற்ற உறவுகளுமே மலிந்துள்ளன. இது தான் தமிழீழமா? இப்படியே எம்மினம் கொன்றொழிக்கப் படுவது தான் போராட்டத்தின் சம்பளமா? எதிரியான ஸ்ரீலங்கா அரசாங்கத்தை எல்லாவற்றுக்கும் குற்றம் சாட்டிக் கொண்டு பிழையான பாதையில் போய்க் கொண்டிருப்பதனை என்னவென்று வரவேற்பது?
சந்தற்பம் வாய்க்கும் போது எதிரியின் தோளில் கை போடுவதும், சந்தற்பம் வாய்க்காத போது தூற்றுவதும் ஆதிக்கவெறியினால் ஏற்பட்டதென்பதனை மறந்து விடக்கூடாது.
எம்மவர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமெனக் கூறி எம்மவர்களின் தலைகளையே கொய்து கொண்டிருந்தால் மலரும் எனக் கனாக் காணும் தமிழீழத்தில் வாழ இருப்பவர்கள் யார்? மயானத்துக்குத் தேவையா காவலன்?
//இவரின் கருத்துத் தொடர்பாக தமிழீழத்தில் வாழும் மக்கள் கூறுகையில்,//
பதிலளிநீக்குஎல்லாம் சரிதான் - எழிலன் கூறியதற்கு ஆதாரம் தமிழ்வின்னில இருந்து தந்திருக்கிறியள் -
அந்த தமிழீழ மக்கள் கூறியதற்கு என்ன ஆதாரம் -
பேசாமால் களத்து மேடு அவ்வாறு கருத்துத் தெரிவிக்கிறார் எனச் சொல்லலாமே.. ஒன்றும் தப்பாக நினைத்துக் கொள்ள மாட்டோம் - உங்கள் சொந்தக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு எதற்கைய்யா தமிழீழ மக்களை துணைக்கழைக்கிறீர்கள்..
மற்றும்படி வாழைப்பழத்தில் ஊசியேற்றும் உங்கள் செயற்பாடுகள் வெற்றியளிக்க ஆண்டவன் அருள் பாலிக்கட்டும். வாழ்த்துக்கள்.
கொழுவியின் கருத்து தொடர்பாக:-
பதிலளிநீக்குஈழத்தில் கருத்துச் சுதந்திரம் கிடையாதென்பதனை கொழுவி மறைமுகமாக சொல்வது புரிகின்றது, துப்பாக்கியுடன் நின்று திணிக்கப்படும் கருத்துக்களை ஏற்கமறுத்து நக்கீரத் தனமாகப் பதிலிறுத்தால் அதற்குப் பேர் துரோகத்தனமா? தயவு செய்து கருத்துச் சுதந்திரத்துக்கு வழி விடுங்கள்.
எழிலனுக்கு பேச்சுரிமை உண்டு. ஆனால் அவருடைய கருத்தை யாரும் மதித்து வாசிப்பார்களா என்பது பெரிய சந்தேகத்தை தருகின்றது.
பதிலளிநீக்குஇந்த கூட்டம் ஒரு குறிப்பிட்ட சொற்தொடர்களை பாவிப்பார்கள்.
பதிலளிநீக்கு'அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன' , 'தமிழீழ மக்கள்' (இவர்கள் ஈழக்கொள்கை சரிவராது என்று எப்போதோ கைவிட்டவர்கள்) 'தமிழீழ பெரியவர் ஒருவர்', 'நம்பத்தகுந்த வட்டாரங்கள்' பிரபலம். ஆனால் எல்லாம் தங்கள் வயித்தெரிச்சல் தான்!!!!!!!
களத்துமேட்டுக்கு வந்து கருத்துக்களைப் பதிவு செய்த பெயரிலிகளுக்கு நன்றி.
பதிலளிநீக்குஏன் பெயரிலிகளாக வந்து கருத்திட வேண்டும், முகம் காட்டிப் பதிவிடுவதில் என்னதான் தயக்கம்? கருத்துச் சுதந்திரம் தாராளமாக உள்ளது முகவரி காட்டிப் பதிவு செய்யுங்கள்.