அமெரிக்க "புளும் பேர்க்" செய்தி நிறுவனத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் வழங்கிய செவ்வியில் எமது மக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து வித போரியல் யுத்திகளையும் பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளார்.
தென் தமிழீழத்தை ஸ்ரீலங்காப் படைகள் கைப்பற்றியுள்ளதென்பது முற்றிலும் அரசியல் நலன் சார்ந்தது, ஸ்ரீலங்காப் படைகள் ஆக்கிரமித்த குடும்பிமலைப் பகுதி கேந்திர முக்கிய வாய்ந்த பிரதேசம் இல்லையென்பதால் இந்நிலப் பகுதிகளிலிருந்து பின்னகர வேண்டிய தேவை ஏற்பட்டது, இதனால் தென் தமிழீழத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிட்டு விட்டார்கள் எனும் அர்த்தமல்ல, தமது அமைப்பின் தளபதிகளும் மற்றும் படையணிகளும் தொடர்ந்து அப்பகுதியில் நிலை கொண்டுள்ளன.
ஸ்ரீலங்காப் படைகள் தென்தமிழீழத்தை ஆக்கிரமித்திருக்கும் வரை அமைதி நிலை அப்பகுதியில் ஏற்படுவது சாத்தியம் இல்லை. ஆகவே தேர்தல் ஒன்றை தென் தமிழீழத்தில் நடத்துவதென்பது இரத்தக் களரியை உருவாக்க எடுக்கும் முயற்சியாகுமென்று இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
"விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை" என்பது போல இளந்திரையனின் செவ்வி அமைந்துள்ளது, விடுதலைப் புலிகளூக்கு இது கொஞ்சம் ஓவராக தெரியல்ல!
பதிலளிநீக்குஜனார்த்தனன்.செ
கரூர்.
களத்துமேட்டுக்கு வருகை தந்து கருத்திட்ட கரூர் ஜனார்த்தனனுக்கு நன்றி.
பதிலளிநீக்கு