நேற்று மாலை ஊடகவியலாளர் மாநாட்டினை நடாத்திய தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தலைவர் சிறிகாந்தா மற்றும் செயலாளர் சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் இதனால் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை இன்றுடன் கலைப்பதாக தெரிவித்துள்ளனர்.
தங்களது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்ட போதும் இவர்களின் நடவடிக்கையில் திருப்தி காணாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்காது விலக்கி வைத்தது.
இதனால் ஆத்திரமுற்ற மேற்படி இருவரும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எனும் அரசியல் பெட்டிக்கடையைத் திறந்தனர், அதன் மூலம் அரசியல் பிரவேசத்தை நகர்த்த எடுத்த பிரயத்தனம் கைகூடாததால் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்காக ரெலோவெனும் முகமூடியுடன் உள்ளே செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.
இன்று வவுனியாவில் நடைபெறவுள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் வருடாந்த மாநாட்டில் மேற்படி இருவரும் இணையவுள்ளனர்.
தொடர்புபட்ட செய்திகள்
1. சிவாஜிலிங்கம், சிறிகாந்தா உருவாக்கிய தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு

2. தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு கலைக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.