அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 அக்டோபர், 2008

அமெரிக்காவில் குடியேற கிறீன்கார்ட்!

அமெரிக்காவில் 2010 ஆம் ஆண்டு 50,000 பேரைக் குடியேற்றுவதற்காக அமெரிக்கா லொத்தர் மூலம் விசாவுக்கான விண்ணப்பத்தினைக் கோரியுள்ளது.

ஸ்ரீலங்காவைச் சேர்ந்த க.பொ.த.சா/த சித்தியடைந்த அமெரிக்கா செல்லவிரும்புவோர் 2008.10.02 முதல் டிசம்பர் 01 ஆம் திகதிக்கு முன்பாக விண்ணப்பிக்கலாம், அதிஷ்டசாலிகள் கணினி மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.

2009 மே - ஜூலை காலப் பகுதியில் செண்டுக்கு வில்லியம்ஸ் பேர்க் இராஜாங்க திணைக்களத்தின் தூதரக அலுவலகம் லொத்தர் விசாவுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை தபால் மூலம் அறிவித்ததும், ஒரு வருடத்தில் அமெரிக்காவில் குடியேறலாம்.

மேலதிக விபரங்கள் :)

வியாழன், 18 செப்டம்பர், 2008

71,54 வயதுடைய ஓரினத் தம்பதியர் !

71 வயதுடைய "ஸ்ரார் டெக்" நடிகர் ஜோர்ஜ் தகேயி தனது நீண்ட கால ஆண் காதலனான 54 வயதுடைய பிரட் அல்ட்மானை லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜப்பான் - அமெரிக்க தேசிய அருங்காட்சியத்தில் பௌத்த மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

ஒரே பாலினத்தவர்களின் திருமணத்துக்கு தடையாக இருந்த சட்டத்தினை கலிபோனியா நீதிமன்றம் 2008.06.17 ஆம் திகதி நீக்கியதையடுத்து 21 வருட காலமாக சட்டரீதியற்று தன்னுடன் வாழ்ந்து வந்த அல்ட்மானை ஜோர்ஜ் தகேயி பல நண்பர்கள் வாழ்த்துடன் கரம் பற்றினார்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சகோதரர்களுக்கும் சரத்பொன்சேகாவுக்கும் எதிராக அமெரிக்காவில் விசாரணை?

ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழர்களுக்கு சொல்லொண்ணா துயரங்களைக் கொடுத்து வரும் அமெரிக்க குடியுரிமையுள்ள கோத்தபாய ராஜபக்ஷ், பாராளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ஷ் மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக அமெரிக்க குடிமக்கள் எனும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் "இனச் சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு" அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்வின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கு கலிபோனியாவில் டிமாஸ் எனுமிடத்தில் வீடும், பஸில் ராஜபக்ஷ்வுக்கு கலிபோனியாவில் பொண்டோனா எனுமிடத்தில் வீடும் உள்ளது, அத்துடன் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்க வதிவிட தகைமையுடைய "கிறீன் கார்ட்" இருப்பதுடன் ஒக்கலாமா எனுமிடத்தில் வீடும் உள்ளது.

போர்க் குற்றங்களைப் புரியும் அமெரிக்கர்களையும்,அமெரிக்க குடிமக்கள் அல்லாதவரையும் அமெரிக்கச் சட்டம் கடுமையாகத் தண்டிக்க கூடியது என்பதால், அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் புரூஸ் பெய்ன் தலைமையில் "இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு" நடவடிக்கை எடுக்கவுள்ளது.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----