வெள்ளி, 30 ஜனவரி, 2009

மூளைச் சலவைக்குப் பலியான முத்துக்குமரன் !

ஸ்ரீலங்கா அரச படையினர் தமிழர்கள் மீது நடத்தும் இனவெறி அடக்குமுறைக்கு எதிராக தென்னிந்திய மக்கள் கொண்டுள்ள ஆர்வம் அளப்பரியது, ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் முல்லைத்தீவு நோக்கிய நகர்வை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா பாராளுமனறின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈறாக தமிழக மக்களும் அரும்பாடுபட்டு வருகின்றனர்.

தமிழக மக்களின் இவ் எழுச்சியை தமிழக அரசியல்வாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைப்பது மனதை நெருடுகின்றது, இவ் அரசியல்வாதிகளின் பேச்சுத்திறனில் மயங்கிய இளைஞர்கள் உண்ணாவிரதம், தீக்குளிப்பு என்றெல்லாம் தங்களை மாய்த்துக் கொள்ள மூளைச் சலவை செய்யப்படுகின்றார்கள்.

இளைஞர்களே உங்களது உயிர் விலை மதிக்க முடியாதவை, உயிரோடு விளையாடாதீர்கள், உங்களை இந் நிலைக்கு திருப்பி விட்டுள்ள அரசியல்வாதிகள் தாங்கள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிப்பார்கள், ஊடகத்துறைக்குச் செய்தி எட்டியதும் விலகி விடுவார்கள், அவர்களுக்கெல்லாம் தேவை அரசியல் கலந்த விளம்பரம் மாத்திரமே, அரசியல் சிம்மாசனத்துக்காக எத்தனை உயிர்களை மாய்க்கவும் தயங்க மாட்டார்கள், இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து கொண்டே இருப்பார்கள், ஆகவே இளைஞர்களே சிந்தியுங்கள்.

முத்துக்குமாரின் சாவு எல்லோரையும் கவலை கொள்ளத்தான் செய்ததே தவிர, ஸ்ரீலங்கா படை நகர்வில் எவ்வித தடைகளையும் ஏற்படுத்த வில்லை, ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏலவே திட்டமிட்டபடி 48 மணி நேர அவகாசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு அறிவித்துள்ளது என்பது தான் உண்மை.

இன்னும் பல முத்துக்குமார்கள் உருவாகுவார்கள், இவர்களின் உருவாக்கம் தவிர்க்க முடியாதவை, விடுதலைப் புலிகளின் வீரச் சாவுக்கு ஒப்பானது இம் மரணங்கள் என்றெல்லாம் அரசியல்வாதிகள் தங்களின் வாய்ப் பேச்சுத் திறனின் மூலம் மூளைச் சலவையை விருத்தி செய்து கொண்டே வருகின்றார்கள், ஆனால் அவ் சாவுக்கு அவர்கள் தயாராக மாட்டார்கள், இளைஞர்களை பலியிட முயல்வார்கள்.

முத்துக்குமாருக்கு ஏற்பட்ட மனக் கிலேசம் நியாயமானது தான், ஆனால் அவரின் இந்த திடீர் முடிவு பரிசீலிக்கப்பட வேண்டியது, அவர் வாழ வேண்டியவர், இன்னும் பல போராட்டங்களை பார்க்க வேண்டியவர், அரசியல்வாதிகளின் நாடகங்களை பதிவு செய்ய வேண்டியவர், துரதிஷ்டம் திடீர் முடிவு எடுத்து சாவைத் தழுவிக் கொண்டது தான்!

‘பெண்ணே நீ’ மாத இதழில் ஊடகவியலாளராகப் பணிபுரிந்த, சென்னை.99 - கொளத்தூர் மக்கான் தோட்டம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த கு.முத்துக்குமார் திட்டமிட்டு பலியாக்கப்பட்டது கவலை கொள்ள வைக்கின்றது, 26 அகவையையுடைய இவ் வாலிபன் நான்கு பக்க அறிக்கை எழுதும் அளவுக்கு பட்டறிவு உள்ளவனல்ல, ஈழத் தமிழினம் காக்க இந்தியாவில் தீக்குளிப்பது என்பது காலில் உள்ள காயத்துக்கு தலையில் மருந்து கட்டுவது போன்றாகும்.

முத்துக்குமார் இறுதியாக தயாரித்த மரண வாக்குமூலம்

முத்துக்குமாருக்குக் களத்துமேட்டின் கண்ணீர் அஞ்சலி

8 கருத்துகள்:

  1. கொடுமையிலும் கொடுமை இது.இனி இதுபோல வேண்டாம் தயவு செய்து.உதவி செய்யுங்கள் உயிர் வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  2. karunanithy அவர்கட்கு உண்மை கசக்கின்றதா?, ஏன் இப்படியான் அநாகரீக எழுத்து.

    கருத்தைக் கருத்துக்களால் பேசுவோம்!
    முத்துக்குமாரின் தியாகம் போற்றப்பட வேண்டியது, ஆனால் உயிரை அழிப்பதால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை, ஆகவே உயிரை மாய்க்காமல் அரசியல்வாதிகளின் மாயப் பேச்சுக்குத் துணை போகாமல் ஈழத் தமிழருக்கான போராட்டத்தைத் தொடருங்கள், தார்மீக ஆதரவை நல்குங்கள்.

    "சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரையலாம்"

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஹேமா,
    எமது ஈழத் தமிழருக்காக வாழும் வயதில் ஓர் வாலிபன் உயிரை அழித்துக் கொண்டது வேதனையானது, இது தொடரக் கூடாது.

    பதிலளிநீக்கு
  4. ஈழவன்,
    நீங்க முத்துக்குமாரோட அறைவாசியா? போகிற போக்கில் இப்படி தாறுமாறா எழுதறீங்க.
    முத்துக்குமாரனுடைய தீக்குளிப்பு வருந்தத்தக்க ஒன்று. இப்படி ஒரு சிந்தனையாளன் ஏன் உணர்ச்சிமிக்க முடிவை எடுத்தான் நாங்கள் குமுறிக் கொண்டிருக்கையில் அவனது செயலைக் கொச்சப்படுத்தியது மட்ட்டுமல்லாமல் அவனையே முட்டாளாக்கி விட்டீர்களே.

    //26 அகவையையுடைய இவ் வாலிபன் நான்கு பக்க அறிக்கை எழுதும் அளவுக்கு பட்டறிவு உள்ளவனல்ல//

    உம்முடைய புனைவுக்கு அளவே இல்லையா?

    பதிலளிநீக்கு
  5. Pot"tea" kadai அவர்கட்கு,

    முத்துக்குமரனின் தியாகம் மறக்க முடியாதது, ஆனால் உணர்ச்சி வசப்பட்டு இப்படியான நிலைக்கு தள்ளப்படுவதே வேதனையானது, இதேபோல் இன்னும் பல முத்துக்குமரன்கள் இந்தப் பாதையில் பயணிக்கக் கூடாது என்பதே இந்தப் பதிவின் நோக்கம்.

    பொட் டீ கடை நினைப்பது மாதிரி தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது, உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் இம் முயற்சியில் பல அரசியல்வாதிகள் குளிர் காய்கின்றனர், அதனாலேயே இளைஞர்களே சிந்தியுங்கள் எனப் பதிவு செய்ய வேண்டியிருந்தது.

    பதிலளிநீக்கு
  6. முத்துக்குமார் என்பவன் கோழைத் தனமாகத் தற்கொலை செய்துகொண்டவனில்லை முத்துக்குமாரின் கடிதத்தைப் படித்தால் இது புரியும்.............

    பதிலளிநீக்கு
  7. அன்பின் ஈழவன் தோழமையுடன் அப்புச்சி எழுதுகிறேன் தங்களின் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.என்னுடைய பயிற்சிகால பாடல்கள் இவை...

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----