விடுதலைப்புலிகள் தவறை உணர்ந்து திருந்தி விட்டார்கள் எனும் தலைப்பில் "தமிழ் அரங்கம்" தனது பாணியில் பத்தியொன்றைப் பதிவு செய்திருந்தது, குமுதம் சஞ்சிகைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் அவர்கள், முஸ்லிம்கள் உட்பட தமிழ் பேசும் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னால் அணி திரள்க எனும் பதத்தினூடாக வழங்கிய செவ்வியின் ஆதங்கமே தமிழ் அரங்கத்தின் இச் சாடலாகும்.
யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக வசித்து வந்த முஸ்லிம்கள் ஒரே இரவில் உடுத்த உடையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட சம்பவம் உலகம் அறிந்ததே! இதனை முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்குமாப் போல் தெரியாது எனக் காட்ட திரு.பா.நடேசன் முனைவதே வேடிக்கையாக இருக்கின்றது.
"முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் இரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது பாரிய நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டார். இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்." இவ்வாறு திரு.நடேசன் கூறுவதன் அர்த்தம் தான் என்ன? இதைத் தான் காலம் கடந்த ஞானம் என்பதா, அல்லது சந்தற்பவாத அரசியலா?
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முஸ்லிம் சுத்திகரிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இன்றும் பொறுப்பு வாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதனை நடேசன் மறந்து விட்டார் போல்த் தெரிகின்றது, காவற்துறையின் பொறுப்பாளராக இருந்த போது கண்டும் காணாதவர் போன்று நடேசன் இருந்தமையே இந்த பொறுப்பற்ற செவ்வியாகும்.
1990 ஆம் ஆண்டு கால நடுப்பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம்களும் அவர்களின் தீவிரவாத அமைப்புக்களும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மீதான இனச் சுத்திகரிப்பை மிகத் திட்டமிட்டு கச்சிதமாக நடாத்தி முடித்தனர், இன்றும் பல தமிழ்க் கிராமங்கள் மனித வாடையற்று காடாகிக் காட்சி தருவது உலகுக்குத் தெரியாத விடயமாகும்.
இக் காலத்தில் அம்பாறை ஊடான இனச் சுத்திகரிப்பு ஆரம்பமானது, இம் மாவட்ட தமிழர்கள் கிராமம் கிராமமாக கொன்றொழிக்கப்பட்டும், சொத்தழிவும் செய்து துரத்தப்பட்டார்கள், இறந்த உறவுகளைப் புதைக்க நேரமின்றி உடுத்த உடையுடன் அகதிகளாக ஓடிக் கொண்டே இருந்தார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரனின் மெய்ப் பாதுகாவல் படையணிகளில் இருந்தவர்களின் அதிகமானோர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தோர்களாக இருந்ததால், தங்களை கிழக்குக்கு அனுப்புமாறும் அங்கு முஸ்லிம்கள் நடாத்தும் இனச்சுத்திகரிப்பை தடுத்து நிறுத்த அனுமதி தருமாறுமாம் கோரி நின்றனர், இதனால் வன்னிப் படையணிகளில் தொய்வு ஏற்படலாயிற்று, இதனைச் சீர்படுத்த விடுதலைப் புலிகளின் தலைவர் எடுத்த திடீர் முடிவானது சற்று ஆச்சரியம் ஊட்டுவதாகவே இருந்தது, அது தான் காத்தான்குடி, சம்மாந்துறை பள்ளிவாசல் தொழுகைகளில் இருந்த முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களாகும், இதனைத் தலைமை தாங்கும் பொறுப்பு திரு.கருணா அம்மானுக்கு வழங்கப்பட்டிருந்தது, ஆனாலும் முஸ்லிம்கள் தமிழர்கள் மீது நடாத்தும் இனச் சுத்திகரிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது, கிழக்கு விடுதலைப் புலிகளால் இவ் வெறியாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, வன்னிப் படையணிகளில் ஆட்டம் காண ஆரம்பித்தன, இதனைச் சுமுகமாகத் தீர்க்க தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த அடுத்த கட்ட அதிரடி முடிவே யாழ்ப்பாண முஸ்லிம்களை ஒரே இரவில் துரத்த எடுத்த நடவடிக்கையாகும்.
இந் நடவடிக்கை திரு.இளம்பருதி, திரு.கரிகாலன் போன்றோர் தலைமையில் நடத்தப்பட்டதாக ஊடகச் செய்திகள் கூறின, துரத்தப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்தில் உள்ள பாலாவி, தில்லையடி போன்ற பகுதிகளிலும் மற்றும் அனுராதபுரத்திலும் இன்று வரை வாழ்க்கை நடாத்தி வருகின்றார்கள்.
தமிழ் அரங்கத்தின் பத்தி தொடர்பாக 19.11.91 அன்று தான் யாழில் நடேசன் பொலீஸ் பொறுப்பாளராக பொறுப் பேற்றிருந்தார். இவர் தனது முதல் நடவடிக்கையாக - இந்த தீயசக்திககளை - ஏன் கைது செய்யவில்லை. அந்தப் பொலீஸ் படையின் முதல் அணிவகுப்பே இதே திகதியில் பிரபாகரன் முன்னிலையில் நடந்ததாக `விடுதலைப் புலிகள்` ஏடு தை - 92 எழுதியதே! அதுவும் பொய்யா? எனக் குறிப்பிட்டு பின்னூட்டமிட்டுள்ளதனையும் நடேசன் கருத்தில் கொள்வது நல்லதல்லவா?
உலகம் இருண்டு விட்டது என நினைத்து அர்த்தமற்றுப் பதிலளிப்பது காத்திரமாக இராது, அனைவரும் விழித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்டு கொள்ள வேண்டும்.
வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதானது வருத்தம் தரும் செயலும்,சிங்கள பேரினவாதத்துக்கு ஒப்பாக விடுதலையை வேண்டி நிற்கும் ஒரு இனம் இன்னொரு சிறுபான்மை இனத்தை ஒடிக்கியதான வரலறும் அது.இது என்றுமே தமிழரின் கறைபடிந்த அத்தியாயம்.தவறுகளை எவரும் நியாயபடுத்த முடியாது,இன்றும் சாதாரண மக்களாக வாழ்ந்த முஸ்லிம்கள் அப்படியே அகதி முகாமில் தான் வாழ்கிறார்கள், சொத்துக்களை விட்டு சென்றாலும் வசதியாக வாழ்ந்து சென்றவர்கள் தமது வாழ்வை அதே போல் அமைத்தே வாழ்கிறார்கள்.இதுவரை அடிப்படையாக வடக்கில் வாழ்ந்த தமிழருக்கு அந்த கோரமான சோக நிகழ்வு ஏன் ஏற்பட்டது என்று கேட்டால் அவர்களிடம் இருந்து சரியான பதிலை அறியமுடியாது,கள்ளன் கதை போல வோக்கி இருந்தது,வாள் இருந்தது,மப் இருந்தது இப்படியான பதில் தான் வரும்.இதை எந்த தமிழ் பொதுமகனாவது பார்த்து இருக்க மாட்டார்,ஆனால் இன்னொரு உண்மையும் நாம் மறக்க முடியாது கிழக்கில் அதே நேரத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் சகோதரர் போல் வாழவில்லை[[[[பெரும்பாலானோர்]]]].இரயாகரன் சொல்வது போல, புலிகளால் மட்டும் இது ஏற்படவில்லை,ஏனைய போராளி இயக்கங்களும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டுள்ளன.தனிப்பட்ட விரோதங்கள் பிரிவினைகளையும்,கழ்ப்புணர்வுகளையும் தான் மேலும் மேலும் வழர்க்கும்,இந்த இடத்தில் தீப்பொறி கோவிந்தனின் வாசகம் மிகவும் பொருத்தமானது,தமிழீழ விடுதலை போராட்டம் வன்முறையில் நம்பிக்கை கொண்ட ஆயுதம் ஏந்திய போராட்டமாயினும் அது அராஜகதன்மை கொண்டதாக மாறிவிட அனுமதிக்க முடியாது,விடுதலை போராட்டத்தில் மனிதாபிமானமும்,மானிட உயிர்ப்பிற்கான ஆவலும் மேலோங்கி இருக்க வேண்டும்.எமது போராட்டம் இதனை இழந்து சென்றால் இன்னொரு அராஜகத்துக்கும் ஒடுக்கு முறைக்குமான வழியாகவே அது அமைந்துவிடும்."முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் இரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். யார் இந்த தீய சக்திகள் என்று கேள்வி கேட்காதது செவ்வி கண்டவர் தவறே தவிர,ஈரை பேனாக்கி......இராயகரனின் சாமர்த்தியம் அல்ல............
பதிலளிநீக்குதோழமையுடன்
அப்புச்சி
வடக்கு தமிழரிடம் கேட்டால்
பதிலளிநீக்குநன்றி அப்புச்சி,
பதிலளிநீக்குபிட்டும் தேங்காய்ப்பூவும் என வாழ்ந்த தமிழ் பேசும் மக்களாகிய தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் விரிசல் காண வைத்தவர்கள் அரசியல்வாதிகளே, முஸ்லிம் காங்கிரஸ் தாபகர் அஸ்ரப் அவர்களின் காலத்தில் முஸ்லிம் இராணுவ கட்டமைப்பு இரகசியமாக உருவாக்கம் பெற்றது, (அதற்கு புனர்வாழ்வு கொடுக்க அதாவுல்லா போன்றோர் இப்போதும் தயாராகவே இருக்கின்றார்கள்) அவ் இராணுவ கட்டமைப்பின் ஒத்திகையே அம்பாறை மாவட்ட தமிழர்கள் மீதான சுத்திகரிப்பும், அரச இராணுவ புலனாய்வுத்துறைக்கான ஒத்துழைப்பும் ஆகும்.
இதன் ஒரு அங்கமே யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் ஐஸ்பழ விற்பனையாளர்களிடம் காணப்பட்ட வோக்கிடோக்கி போன்ற புலனாய்வு தொலைத் தொடர்பு சாதங்களாகும்.
எது எப்படியாக இருந்தாலும் பாரம்பரியமாக வாழ்ந்த ஒரு இனம் சுதந்திரம் மறுக்கப்பட்டு, அம் மண்ணில் வாழும் உரிமை பறிக்கப்பட்டு துரத்தப்பட்டது வேதனையானதாகும்.
"புதியதோர் உலகம்" படைத்த தோழர் கோவிந்தன் ஈழ விடுதலைப் போராட்டம் அராஜகப் போக்குக்கு மாறிச் செல்வதால் அதனை அனுமதிக்க முடியாது என கட்டியம் கூறியதால் 1991.05.17 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து காணாமற் போனது ஜனநாயகவாதிகளுக்கு துரதிஷ்டமே ஆகும்.
திரு.பி.இரயாகரன் நுனிப் புல் மேய்ந்து விட்டு பத்தி எழுதியதால் களத்துமேட்டில் பதிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் அரசியல் இல்லாமல் நடக்கும் போராட்டங்களுக்கு கை கொடுப்போம்.இது தான் விடுதலை,,,வட்டிகாசுக்காக ரோட்டில் நிற்கும் ஆதரவாளார்களை கொழுத்துவோம், புலம் பெயர்ந்த நாட்டில் வட்டிக்கு காசு கொடுத்து,,,,,,தமிழீழம் கேட்கும் நாய்களை கொழுத்துவோம்,,,,,,, தமிழனின் இரத்தத்தை உறிஞ்சும் தமிழனை கொழுத்துவோம்,,,,,ஆனையிறவு அடிச்சிட்டாங்களாம் எண்டு சொல்லி போட்டு, காசு சேக்க வாறாங்கள் கதவை பூட்டுங்கோ என்றவனை பதம் பாப்போம்,கள்ள மட்டை போட்டு பிடிபடும் நேரம் அது புலிக்காக போட்டம் என்பவனை இனம்கண்டு கொள்வோம்,,,,,,,,,,,என்ன செய்ய ஒண்டும் செய்ய முடியாது இவங்கள் தான் இன்டைக்கு பெரிய ஆக்கள் விட்டா புலி என்கிறாங்கள் இந்த நாய்களை எப்படி எழுதமுடியும் .......................
பதிலளிநீக்கு