ஸ்ரீலங்கா அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவி வகித்த திரு.கருஜெயசூரிய அரசாங்கத்திலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டிருந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இம் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஊடகத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த திரு.அனுர பிரியதர்சன யாப்பா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவி வகித்த திரு.சரத் அமுனுகம பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.
எஞ்சியுள்ள ஊடகத்துறை அமைச்சினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.