எமது வலைப் பதிவுலகிலுள்ள தோழர் ஹேமா தனது "உப்பு மடச்சந்தி" தளத்தில் "தரணி ஆண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு" எனும் பத்தியை பதிவு செய்துள்ளார், அதில் தமிழர்களின் புத்தாண்டுக்குரிய நாள் தைப்பொங்கல் என்பதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்கத் தவறிவிட்டார்.
யாருக்கோ துதி பாட வேண்டும் என்பதற்காக எழுதியது போல் தெரிகின்றது, ஆதியில் தமிழர் உலகப்பரப்பில் பரந்து வாழ்ந்தான் என்பது அறிவியலாளர்களின் கருத்து இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.
ஹேமா சொல்லியது போல் கணிக்கப்பட்ட நாட் கணக்குகள் தொண்டுதொட்டு பஞ்சாங்கத்தின் மூலமே இன்றும் அறியக் கூடியதாகவுள்ளது, கோண்டாவிலுக்கு அருகிலுள்ள இணுவில் கிராமத்தில் பதிவு செய்யப்படும் பஞ்சாங்கத்தில் பல உண்மையான விடயங்கள் உள்ளன என்பது ஹேமாவுக்குத் தெரியாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
பஞ்சாங்கங்களில் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கங்கள் புகழ்பெற்றன, இந்தப் பஞ்சாங்கங்களில் வாக்கிய பஞ்சாங்கம் சூரியன் மேடராசியில் பிரவேசிப்பது முதல் மீனராசியை விட்டு நீங்கும் வரையும் உள்ள காலம் சௌர வருஷம் என்று கூறுகிறது. திருக்கணித பஞ்சாங்கம் மேடராசியின் தொடக்கமாகிய அச்சுவினி நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலம் தொட்டு, மீனராசியின் அந்தமான ரேவதி நட்சத்திரத்தில் நின்று நீங்கும் வரையில் உள்ள காலம் சௌர வருஷம் என்றும் கூறுகின்றது, இவை அனைத்தும் விஞ்ஞான ரீதியில் பார்க்கும் போது உண்மை புலனாகின்றது.
கார்த்திகை மாதத்தில் தொடங்கும் முதல் மழையைத் தொடர்ந்து விவசாயி தனது உழவுத் தொழிலுக்குத் தயாராகின்றான், இக் காலத்திலேயே உழவர்கள் காடுகளை வெட்டிக் கழனியாக்கி வேளாண்மைப் பயிர்ச் செய்கைக்குத் தயாராகின்றார்கள் தை மாதமானது உழவருக்கு வேலைவெட்டி நிரம்பிய மாதமாகும், புவியியல் ரீதியாகப் பார்த்தாலும் தை மாதமானது இலங்கையருக்கு மாரி காலமாகும், இக் காலம் வறுமை நிறம்பிய காலமென்றால் மிகையாகாது, இக் காலத்தில் மழை சற்று ஓய்வு பெறும் காலம் தை நடுப் பகுதியாகும், இக் காலத்தில் உழவன் பாடுபட்டு பயிர் செய்த வேளாண்மை தனது பொற்கதிர்களை உலகுக்கு காண்பிக்கும், இதில் சிவந்த கதிர்களை அறுவடை செய்து அதை அரிசியாக்கி, அதனைக் கொண்டு உதவி செய்த சூரியனுக்கும், மறுநாள் மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாட்களே தைப்பொங்கலும், மாட்டுப் பொங்கலும் ஆகும்.
இவை தமிழர்களின் புத்தாண்டு நாட்களல்ல, பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயி அறுவடை அனைத்தும் முடித்து நெல் மணிகளை வீட்டில் கொண்டு சேகரித்து வைத்து குடும்பத்துடன் கூடிக் குலாவும் காலமே சித்திரை மாதமாகும், இந்தக் காலத்தில் உற்றார் உறவினர்கள் அனைவரும் இணைந்து சிறப்பிக்கும் காலமான சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் முதல் நாளே சித்திரை வருடப்பிறப்பாகும்.
மேலதிக விபரம்: "வியாபாரிமூலை" இந்து வருடப்பிறப்பு
வணக்கம்.
பதிலளிநீக்குதை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனும் என்னுடைய பதிவை வாசிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
ஈழவன் இனிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.ஆசை தீர என்னைத் திட்டி வைச்சிடீங்க.நிறைய நாள் ஆசை இது உங்களுக்கு.சரி...சரி.
பதிலளிநீக்குஎனக்கும் பெரிசா ஒன்றும் தெரியேல்ல.என்றாலும் ஜனவரி 14 ம் திகதியை தமிழர் திருநாள் என்று பிரகடனப் படுத்தியிருக்கிறார்கள் என்று அறிகிறேன்.அதற்காக நான் யாருக்கும் துதி பாடுகிறேன் என்றில்லை.அதன் விளக்கம் அறியவே அதைப் பதிவாக்கினேன்.இப்போ ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தோடு இருக்கிறார்கள் என்று அறிகிறேன்.மிஞ்சியது எது எப்போ பொங்கல், எது எப்போ புத்தாண்டு என்று புரியாத குழப்பம்தான்.
வியாபாரிமூலையும் வாசித்தேன்.நன்றி ஈழவன்.
களத்துமேட்டுக்கு வருகை தந்த தோழர் சுப.நற்குணனை வருக வருகவென வரவேற்கின்றேன்.
பதிலளிநீக்குநன்றி நற்குணன்.
நன்றியும் வாழ்த்துக்களும் ஹேமா.
பதிலளிநீக்குஅறிவியல் விவாதங்களுக்கூடான விடயங்களைப் பதிவு செய்வதெனில் தேடல்கள் மிகவும் அவசியமானவை,
ஆதாரபூர்வமாக எவையும் இருக்காமையினால் தான் களத்துமேட்டில் பதிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது ஏனெனில் இது ஊடகப் புதினங்களின் திறனாய்வுக் களம்.
மற்றும் தங்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கம் களத்துமேட்டுக்கோ அன்றில் ஈழவனுக்கோ கிடையாது.
இப்பதிவினால் ஏதும் மனத்தாக்கம் ஏற்பட்டிருப்பின் மன்னிப்புக் கோருகின்றேன்.
நட்புத் தொடரும்....
இதுக்கெல்லாம் போய் கோவப்படலாமோ ஈழவன்.
பதிலளிநீக்குஆரோக்கியமான விவாதங்களின் விடைகூட வெளிச்சமாக இருக்கும்தானே!
இன்னும் இப்பிடி அப்பிடி ஏதாவது நான்.....பதிவிட்டால் திருத்திவிடுங்கோ.