இணையத்தின் எமது சக பதிவர் தோழர் அப்புச்சி தனது விம்பங்கள் எனும் தமிழர்களின் உரிமைக் குரலில் "இலங்கை அரசின் அந்தக்கால பயங்கரவாதப் பட்டியல்......" எனும் தலைப்பில் அருமையான வரலாற்றுக் கட்டுரையைப் பதிவு செய்துள்ளார், இக் கட்டுரை இன்னும் விரிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும், ஏனெனில் இன்னும் பல விடுதலைக் குழுக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக ஒரு பிரமை.வலைப் பதிவர் இக் கட்டுரையில் முக்கியமாக இக் குழுக்களின் அல்லது இவ் இயக்கங்களின் தலைவர்களின் பெயர்களையும், இவர்களால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதல்கள் போன்ற விபரங்களுடன் ஆங்கில எழுத்துக்களால் குறிப்பிடப்படும் அவ்வியக்கங்களின் முழுப் பெயரையும் பதிவு செய்வது சிறப்பாக இருக்கும்.
இவ் ஈழ இயக்கங்களின் வரலாற்றுப் பதிவுகள் எமது எதிர்காலச் சந்ததிகளுக்கு நிச்சயம்
தேவையானவை, அவை பதிவு செய்த வரலாற்று உண்மைகளையும் மறக்காமல் அப்புச்சி பதிவு செய்வது காத்திரமானதாகும்.
உதாரணம்:
பத்மநாபா மற்றும் டக்ளஸ் தேவானந்தாவின் EPRLF இனரால் வெளியிடப்பட்ட வரலாற்று ஆவணமான ஈழம் முத்திரை.
மகேஸ்வரனைத் தலைமைத்துவமாகக் கொண்ட TEA இனரால் கொணரப்பட்ட அதிட்டலாபச் சீட்டு.
ஸ்ரீசபாரெத்தினம் மற்றும் தாஸ், பொபி போன்றோரின் TELO இனரால் யாழ்ப்பாண நகரத்தில் உருவாக்கப்பட்ட வாகன நெரிசலைத் தவிர்க்கும் பொலிஸ் சேவை.
உமாமகேஸ்வரனைத் தலைமையாகக் கொண்ட PLOT இனரால் யாழ்ப்பாண கோட்டையில் இருந்து ஸ்ரீலங்கா படையினரால் ஏவப்படும் செல் தாக்குதலில் இருந்து பொது மக்கள் தப்பிக்கக் கூடிய வகையில் போதனா வைத்தியசாலையைச் சுற்றி அமைக்கப்பட்ட ஓசை எழுப்பக் கூடிய கருவிகள் மற்றும் பாதுகாப்பு அரண்கள்.
விம்பங்கள் எனும் அப்புச்சியின் வலைப் பதிவில் பின்னூட்டமிடுவது கடினமாக இருப்பதால் அதனைச் சீர்படுத்துவதுடன், அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விபரங்களுடன் இன்னும் பல சாதக பாதக விபரங்களையும் சேர்த்துக் கொள்வது வரலாற்றுத் தேவையாகும்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
ஈழவன் நானும் நினைத்திருந்தேன்.
பதிலளிநீக்குநீங்கள் அப்புச்சிக்குக் கருத்துத் தெரிவித்து இருக்கிறீர்கள்.அப்புச்சி இவற்றில் கவனம் எடுக்கவேணும் என்று நானும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி ஹேமா,
பதிலளிநீக்குஅப்புச்சி கவனம் எடுப்பார் என நினைக்கின்றேன், அவரும் புதுவருட கொண்டாட்டத்தில் இருக்கின்றாரோ என்னவோ!