சனி, 8 செப்டம்பர், 2007

வல்வையில் உப்பு விளைந்துள்ளது!

வல்வை பரவைக் கடலில் விளைந்த உப்பை அள்ளுவதற்கு மக்கள் கடகங்களுடன் திரண்டு செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

வல்வைக் குடாக் கடலின் உப்புக்கழி, கொள்ளையன்தூவு, அலைவாய்க்கடல், ஆனைவிழுந்தான், மண்டான்கரை, மாதுவில் முழக்கன், உப்புவல்லை போன்ற பகுதிகளில் செறிவாக உப்பு விளைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 கருத்துகள்:

  1. என்னது உப்பு விளைகிறதா?
    புரியவில்லை,நகரத்தில் வாழும் பலருக்கு இது தெரியாது.
    கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. வடுவூர்குமார் தங்களின் வருகைக்கு நன்றி.

    மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட பகுதியை குடா என்பார்கள், அவ்வாறே வல்வை கடற்பகுதியும் அமைந்துள்ளது, இப்பகுதி கடலானது ஆழம் குறைந்தும் அலையில் வீச்சம் குன்றியும் இருக்கும், கொடை காலத்தில் இப்பகுதியில் இருக்கும் கடல்நீர் வற்றியதும் அவ்விடத்தில் உப்புப் படிமங்கள் உருவாகும், அது நாளடைவில் பளிங்குக் கற்கள் போன்று விளைந்து பரந்து கிடக்கும். இதுவே உப்பு விளைச்சல் ஆகும்.

    பதிலளிநீக்கு
  4. this picture is not real picture of Vallai Salt Lake...the people on the picture are Europeans(with kids)..i don't think White people living(or even visitiing) with kids in Jaffna area now..

    பதிலளிநீக்கு
  5. வெத்து வேட்டு, படம் நிஜமானதல்ல என்பது உண்மை.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----