
வலைப் பதிவுலகில் நேசிக்கக் கூடிய "வானம் வெளித்த பின்னும்..." தளத்தின் சோதரி ஹேமாவின் கதை பேச அழைக்கும் "உப்புமடச் சந்தி"யில் அரட்டைக்கு என்னால் வர முடியாமைக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சினிமா வாசனையற்ற என்னையும் உப்புமடச் சந்திக்கு அரட்டையடிக்க கூப்பிட்டமைக்கு நன்றி ஹேமா.
நல்லதொரு புதிய முயற்சி, பாராட்டும் கூட.
எனக்கு சினிமாவில் அவ்வளவு நாட்டமில்லை, சேரனின் படங்கள் என்றால் ரசித்துப் பார்ப்பதுண்டு.
சந்தற்பம் கிடைத்தால் நகைச்சுவைப் படங்களையும் பார்ப்பேன்.
திறனாய்வு செய்யுமளவுக்கு முடியவில்லை ஹேமா, இயலுமான அளவுக்கு முயற்சிக்கின்றேன். முடியாமைக்கு காரணங்கூறி பின்னூட்டத்தில் மேற் சொன்னவாறு பதிவு செய்திருந்தேன்.
என்ன செய்விங்களோ ஏது செய்விங்களோ சினிமாப் பதிவு உங்கள் தளத்தில் களத்துமேட்டில் வரவேணும்.சரியா?
அடுத்த என் "உப்புமடச் சந்தி" பதிவு உங்கள் தளத்தில் இருந்துதான் எடுக்க யோசித்து இருக்கிறேன் எனக் கூறி சோதரியின் அன்புக் கட்டளை உள்ளது, ஆகவே முடியாமைக்கான எனது பலவீனத்தை தெரிவித்து விடை பெறுகின்றேன்.