ஐரோப்பாவில் இருந்து பல தொலைக்காட்சிகள் தமிழில் பல சேவைகளை நடாத்தி வருகின்றது, அவற்றில் தீபம் தொலைக்காட்சி பிரித்தானியாவில் இருந்து ஒளி பரப்பினை நடாத்தி வருகின்றது, தீபம் தொலைக்காட்சியானது தனது சேவையைத் தொடங்கி இன்றுடன் பத்து ஆண்டுகளை எட்டுகின்றது எனக்கூறும் தொலைக்காட்சி நிறுவனத்தினர் நேர்மை, பக்கச்சார்பின்மை, எப்போதும் நடுநிலமைச் செய்திகளை மக்களுக்கு கொணர்வது போன்ற மேதாவித்தன அறிவித்தல்களை விடுத்து வருகின்றனர்.
இவர்கள் நடுநிலமை எனக் கூறுவது எது என்பது அனேகமானவர்களுக்குத் தெரியாமல் இருக்கின்றது, ஸ்ரீலங்காவில் நடக்கும் நிகழ்வுகளை அரங்கேற்றுவது ஊடகங்களின் தார்மீகப் பணி, அதிலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உள் வீட்டு அந்தரங்கங்க விடயங்கள் மட்டும் தான் நடுநிலைச் செய்திகள் அல்ல, மாறாக விடுதலைப் புலிகளின் அசைவுகளில் ஏற்படும் பிழைகளையும் சுட்டிக்காட்டுவது தான் நடுநிலைச் செய்தி, ஆரோக்கியமானதும் கூட, ஆனால் தீபம் தொலைக்காட்சி என்றும் அவ்வாறு நடந்து கொள்ளவில்லையே!
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தீபம் தொலைக்காட்சிக்கு தெரியாமல் போனதற்குக் காரணமென்ன, அல்லது ஏன் போய் வீண் பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொள்ள வேண்டுமென தவிர்த்து ஒரு தலைப் பட்ச செய்திகளை மட்டும் பதிவு செய்ததா?
ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழினத்துக்குச் செய்யும் அராஜகம் கொஞ்சநஞ்சமல்ல, அளவுக்கு அதிகமானது தான், ஆனால் அதற்கு எதிர் தரப்பு எனக் கூறப்பட்ட விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை ஏன் தீபம் தொலைக்காட்சி பதிவேற்றம் செய்ய மறந்து விட்டது.
ஜனநாயக நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோர்கள் துரோகியாக வர்ணிக்கப்பட்டு கொல்லப்பட்டார்களே, இது பிழையான வாதம் என தீபம் குரல் கொடுக்கத் தவறிவிட்டதே!
வீட்டுக்கு ஒருவர் போராட்டத்துக்கு வரவேண்டும் எனக்கூறி பலவந்தமாக பதின்ம வயதுக்குள்ளானவர்கள் அனைவரையும் ஆயுத முனையில் யுத்த களத்துக்கு அனுப்பி கொன்றதுடன், எஞ்சிய சிலராக ஊனமுற்ற சமுதாயமொன்றை விடுதலைப் புலிகள் பிரசவித்து விட்டு காணாமல் போனார்களே இது தீபம் தொலைக்காட்சிக்குத் தெரியவில்லையா?
வன்னியில் முன்னூறு ஆயிரம் பேருக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை துப்பாக்கி முனையில் தடுத்து வைத்து யுத்தம் நடத்தினார்களே, அந்தவேளை எதிரி பாரிய ஆயுத தளபாடங்களுடன் யுத்தத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றான் மக்களை விடுவியுங்கள் என ஒரு நாளிகையாவது விடுதலைப் புலிகளுக்கு உங்களின் ஊடகத்தின் மூலமாக அறிவித்தல் விடுத்தீர்களா முடியவில்லையே ஏன்?
இன்னும் அதிகம் குறிப்பிடலாம் இனிமேலாவது நடுநிலை தவறிய ஊடகம் தீபம் எனப் பதிவு செய்யுங்கள், அரசியல் ஞானமுள்ள ஊடகவியலாளர் திரு.அனஸ் முகமட் எனும் இளைய அப்துல்லாஹ் கூட தீபம் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாரே தவிர விடுதலைப் புலிகளினால் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் பற்றி குரல் கொடுக்கத் தவறி விட்டாரே !
ஆகவே மொத்தத்தில் தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகமென்பதே நிஜம்.
தீபம் அரச ஆதரவு பெற்ற தொலைக்காட்சியென்றுதான் நினைக்கிறேன். வர்த்தகம் தெரிந்தவர்கள். முன்னைய தினமுரசு போல..
பதிலளிநீக்குபுலிகளுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டுக்கொண்டே கொழும்பில் ஊடக மாநாடுகளுக்கு சென்று தீபத்தின் ஒலிவாங்கியை வைப்பதிலிருந்தே சில செய்திகள் தெரிகின்றன.
அல்லது சிறிலங்கா அத்தனையளவிற்கு பத்திரிகை சுதந்திரத்தை மதிக்கத்தொடங்கிவிட்டதோ என்னவோ..?
சனல் 4 செய்தியாளரையே நாடு கடத்துகிறார்களாம். தீபம் செய்தியாளர்களை - அதுவும் தீபம் ஒலிவாங்கியோடு- பகிரங்கமாக பணியாற்றும் தீபம் செய்தியாளர்களை - அனுமதிக்கிறார்களாம்.
நன்றி கொழுவி.
பதிலளிநீக்குதீபம் தொலைக்காட்சி போன்றனவற்றால் சர்வதேசத்துக்கு எவ்வித அழுத்தத்தையும் கொடுக்க முடியாது என ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு நன்கு தெரியும், இதனாலேயே ஸ்ரீலங்கா அரசாங்கம் கண்டும் காணாமல் இருக்கின்றது.
முன்னைய தரிசனத்தால் கூடத்தான் சர்வதேச அழுத்தம் பெறமுடியாது. விட்டுவைத்தார்களா..=
பதிலளிநீக்குதற்போதைய ஜிடிவி கொழும்பில் இயங்க அனுமதிப்பாரா கோத்தபாய..?
http://maruthamuraan.blogspot.com/2009/06/blog-post_13.html
பதிலளிநீக்குமேல கூத்த பாருங்க :)
அன்புடன் கொழுவிக்கு,
பதிலளிநீக்குகூத்தைப் பார்த்தேன், நீங்கள் சொல்லுமாப் போல் முந்திரிகைக் கொட்டைகள் தானோ என்னவோ !
ஊடக தர்மம் பற்றி கருத்து சொல்பவர் முதலில் ஊடக தர்மம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
ஒரு பதிவின் ஆளத்தை அறியாமல் அதில் நீச்சலிட மருதமூரான் முனைவது அவரது பலவீனம் என்றே கருதுகின்றேன்.
உண்மையில் ஊடகதர்மம் எப்படியானது என மருதமூரானுக்குத் தெரிந்து இருப்பின் பின்னூட்டத்தில் அல்லாமல் தலைப்பிட்ட பதிவாக தனது தவறை ஒத்துக் கொண்டு பதிவிட்டு இருப்பார், அவருக்கு இருக்கும் வரட்டுக் கௌரவத்தினால் தான் தனிப் பதிவாகச் சொல்லத் தயங்கி பின்னூட்டத்தில் பதிலிறுத்துள்ளார்.
இனிமேலாவது பொறுப்புணற்சியுடன் ஒரு தரத்துக்கு இரு தடவை பதிவுகளை வாசித்துப் பார்த்துவிட்டு காத்திரமாக பதிவு செய்வார் என நினைக்கின்றேன்.
ஊடகப்புதனங்களின் திறனாய்வுக்களம் என்று போட்டுவிட்டு பொறுப்பற்ற பின்னூட்டங்ளை அனுமதித்திருக்க கூடாது.
பதிலளிநீக்கு//புலிகளுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டுக்கொண்டே கொழும்பில் ஊடக மாநாடுகளுக்கு சென்று தீபத்தின் ஒலிவாங்கியை வைப்பதிலிருந்தே சில செய்திகள் தெரிகின்றன. //
மேலுள்ள கொழுவியின்
பின்னூட்டத்தின் பிழையையும் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்
கொழுவி ..நீர் கொழுவி என்ட பெயருக்குச்சரியான ஆள்த்தான் :)
வருகைக்கும், காத்திரமான பின்னூட்டத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குதொடர் வருகைக்காகக் காத்திருக்கின்றேன்.
வன்னி சிங்கத்தின் வருகைக்கும், காத்திரமான பின்னூட்டத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குதொடர் வருகைக்காகக் காத்திருக்கின்றேன்.
வன்னிசிங்கம்..
பதிலளிநீக்குஅதான் கொழுவி
மற்றும்படி நான்எழுதிய ஒன்றுக்கு எனக்கு எதிராவே கருத்துவைச்சிருந்தாலும் - இன்னொராள் அடிவாங்கிறதை பாத்து கொடுப்புக்குள்ளை சிரிச்சிட்டு போக முடியாதுதானே :)
நாங்கள் பெடியங்கள். பழைய ஆட்கள்மாதிரியெல்லாம் யோசிக்கமாட்டம். :)
மற்றும்படி.. புலிகளுக்கான நேரடி ஆதரவை ஐரோப்பாவில் அளித்துக்கொண்டு கொழும்பில சுதந்திரமா இருக்கமுடிகிறது என்பது எனக்கு கேள்விதான்.
அவ்வாறான ஒரு சூழல் கொழும்பில இருந்தால் (நெனப்புத்தான்) எனக்கு மகிழ்ச்சிதான்.
கொழுவிக்கு, காலம் கனிந்து வருகின்றது எனக் கூறுகிறார்கள், நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு0000000000000000000000
பதிலளிநீக்குஅரசியல் ஞானமுள்ள ஊடகவியலாளர் திரு.அனஸ் முகமட் எனும் இளைய அப்துல்லாஹ் கூட தீபம் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாரே தவிர விடுதலைப் புலிகளினால் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் பற்றி குரல் கொடுக்கத் தவறி விட்டாரே !
0000000000000000000000
ஈழவன் என்னைப்பற்றிய புரிதலோடு இருக்கிறீர்கள். என்னை எவ்வாறாகவாவது ஊடகத்தில் இருந்து தூக்கவே பலர் விரும்புகிறார்கள் அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் செய்கிறார்கள். உங்களுக்கு எங்கே தெரியும்? நீங்கள் புலி என்கிறீர்கள். புலி என்னை துரோகி என்கிறது குடும்பத்தை இங்கு வைத்துக்கொண்டு வேக் பேமிற்றில் இருந்து பாருங்கள் அந்த வலி தெரியும் உங்களுக்கு. முட்டாள்களின் கூடாரத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் ஈழவன்.
அன்புடன் தோழர் இளைய அப்துல்லாஹ்வின் வருகைக்கும், எந்தன் கருத்தியல் ரீதியான பதிவுக்கான பின்னூட்டத்துக்கும் நன்றி,
பதிலளிநீக்குகளத்துமேடு திரு.அனஸை விடுதலைப் புலிகள் எனும் குறியீட்டில் நோக்கவில்லை, ஆனால் அரசியல் ஞானமுள்ள ஊடகவியலாளர் திரு.அனஸ் முகமட் எனும் இளைய அப்துல்லாஹ் கூட தீபம் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாரே தவிர விடுதலைப் புலிகளினால் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் பற்றி குரல் கொடுக்கத் தவறி விட்டாரே! என்பது தான் ஆதங்கத்துக்குக் காரணம். ஏன் இன்றைய சிவாஜிலிங்கத்துடனான நேர்காணலிற்க்கூட அதன் வாசத்தைக் காணக்கூடியதாக இருந்தது.
ஒரு தலைப்பட்ச நோக்கத்துடன் அல்லது விடுதலைப் புலிகளின் விளம்பரத்துக்கென இயங்கும் தீபம் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் ஜனநாயகக் கருத்துக்களை மதிக்கும் ஊடகவியலாளர்கள் தடம் பதித்து நிமிந்து நிற்பது என்பது எட்டாக்கனி தான், இருப்பினும் இந்த நடுநிலையற்ற ஊடகத்தில் நீச்சலடித்து முன்னேறுகின்றீர்களே அதற்காக பாராட்டினையும் தெரிவித்தாக வேண்டும்.
புலிச் சாயம் பூசிக் கொண்டு பயணிக்கும் தீபம் வண்டியில் இருந்து கொண்டு "என்னை எவ்வாறாகவாவது ஊடகத்தில் இருந்து தூக்கவே பலர் விரும்புகிறார்கள் அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் செய்கிறார்கள். நீங்கள் புலி என்கிறீர்கள். புலி என்னை துரோகி என்கிறது, முட்டாள்களின் கூடாரத்தில் இருந்து கொண்டிருக்கிறேன்" என சுய விமர்சனம் செய்தீர்களே இதுவே போதும் நீங்கள் அரசியல் ஞானமுள்ள ஊடகவியலாளர் என்பதற்கு!, இருப்பினும் எழுதித் தரும் வினாக்களை மட்டும் நேர்காணலில் பரிசோதிக்காமல் சொந்த பகுத்தறிவுடனாக வினாக்களையும் இனிமேல் கவனத்துக்கு எடுத்துக் கொள்வீர்களென நம்புகின்றது களத்துமேடு.
வே.பிரபாகரனின் மரித்த செய்தியை அறிவித்த ஊடகங்கள் பேரினவாதத்துக்கு விலை போயுள்ளன எனப் பூதக் கண்ணாடியின் உதவி கொண்டு விடுதலைப் புலிகளுக்காகவே புராணம் பாடி, தீபத்தை தனது குடும்ப சொத்தாக பயன்படுத்தும் ஊடகவியலாளரும் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்வதே மேல் !
புரிதலின் ஊடாக, காத்திரமான ஊடக செயற்பாட்டுக்காகக் என்றும் கைகொடுப்போம்.
நன்றி அனஸ், தொடர் வருகை செய்யுங்கள்.