தீபம் தொலைக்காட்சி இன்று இரவு 8.30 மணி தொடக்கம் நேர்காணல் ஒன்றை நடத்தியது, எதிர்வரும் 20.06.2009 ஆம் நாள் சனிக்கிழமை பிரித்தானியாவின் நடத்தவிருக்கும் ஊர்வலம் தொடர்பாக திரு.சபா பத்மநாதன் பதிலளித்துக் கொண்டிருந்தார், அவரிடம் வினாக்கள் தொடுக்கவிருக்கும் நேயர்கள் கேள்விகள் கேட்கலாமென அறிவிப்பாளர் அனஸ் தொலைக்காட்சியில் இலக்கத்தையும் அறிவித்து செவ்வியைத் தொடர்ந்தார், ஆனால் சபா பத்மநாதனிடம் கேட்கப்படும் காத்திரமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே அவசர அவசரமாக நேர்காணல் முடிவடைந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மீண்டும் கண்ணீர் வடிக்கத் தொடங்கி விட்ட சபா பத்மநாதன் பதிலளிக்க மறுத்து, வினா தொடுத்தவர்களிடமே கேள்விகளைக் கேட்டு விதண்டாவாதம் புரிந்தது வேடிக்கையிலும் வேடிக்கை.
மக்கள் பிரதிநிதிகள் என சபைக்கு முன் தோன்றுபவர்கள், அல்லது ஊடகங்களின் மூலம் பதிலளிக்க வருவோர்கள் மக்களின் குரலாக மனம் திறந்து பதிலளிக்க வேண்டும், மாறாக விடுதலைப் புலிகளின் பாணியிலேயே பதில் சொல்வது ஆரோக்கியமானதல்ல.
பதிலளிநீக்குவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி தீவிரவாசகன்.
பதிலளிநீக்குஅடிக்கடி வாருங்கள்.
அந்தக்கேள்வியையும் பதிலையும் பிரசுரித்திருந்தால் நல்லா இருந்திருக்கும்
பதிலளிநீக்குநன்றி சேரன்கிறிஸ்.
பதிலளிநீக்குவேலைத் திட்டங்கள் அதிகம் இருக்கின்றன, எங்களுடன் கைகோருங்கள், விமர்சனம் செய்யாதீர்கள், விமர்சனத்தால் தான் எமது போராட்டம் பின் தள்ளப்பட்டுள்ளது எனப் பொருள் கொள்ளத் தக்கதாக சபா பத்மநாதன் ஒரு கணத்தில் குறிப்பிட்டு இருந்தார், அவரிடம் தொலைபேசி வாயிலாக வினாவ வந்த தீபம் நேயர் நீங்கள் குறிப்பிடும் பொது வேலைத் திட்டம் என்னவென்பதை பகிரங்கமாக தெரிவியுங்கள், அத்துடன் வணங்காமண் கப்பலுக்குச் சேர்க்கப்பட்ட பணத்துக்கு கணக்குக் காட்டுங்கள்...... இப்படியான கேள்விகள் தொடரும் போது கேள்விகளை தொலைக்காட்சி பார்க்கும் நேயர்களும், விடை கூற வந்த அதிதியும் அந்த வினாக்களை உள் வாங்காமல் இடைமறித்து வினா கேட்டவரிடமே, நீங்கள் சமூகத்துக்குச் செய்த வேலைகள் என்ன உங்களிடம் என்ன வேலைத் திட்டங்கள் இருக்கின்றன ....? இதை வெளிப்படுத்துங்கள் என விதண்டாவாதம் புரிந்தார்.