
அமெரிக்காவின் சிக்காக்கோ நகரின் மெக்காமிக் ஹார்வெஸ்ட் வேக்ஸ் எனும் நிறுவனத்தின் பணியாளர்களின் வேலைப் பகிஷ்கரிப்பினால் ஏற்பட்ட கலவரத்தில் அந் நிறுவனம் மூடப்பட்டது.
எண்ணற்ற தொழிலாளர்கள் துப்பாக்கி வேட்டுக்கு இலக்காகி இரத்தத்தில் தோய்ந்து மாண்டனர், அத் தொழிலாளர்களின் மகத்தான மரணத்தினால் கிடைக்கப் பெற்றதே எட்டு மணி நேர வேலை எனும் உரிமையுடனான உலகத் தொழிலாளர் தினமாகும்.


வணக்கம் தோழர் புரட்சிகரமான தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.மேலும் தெசம் நெட்டில் ஈழபிரியனின் ஆக்கம் ஒன்று வெளியாகி உள்ளது படித்து பாருங்கள்.நீண்ட காலம் ஓய்ந்து விட்டீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.செய்திகளை மாத்திரம் போடாமால் வரும் செய்திகளை ஆய்வு செய்து பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குதோழமையுடன்
அப்புச்சி
தோழர் அப்புச்சி,
பதிலளிநீக்குதற்போதைய நிலையில் எதை எழுதுவது என்றே தெரியாமல் இருக்கின்றது, எமது மக்களின் மீதான கொடூரப் படுகொலைகளை நோக்கும் போது அதற்குக் மூல காரணமானவர்களை விமர்சிக்க மனம் எண்ணுகின்றது, ஆனால் இச் சூழல் இதற்குரிய நேரமில்லாமல் இருப்பதால் மனதை திடப்படுத்திக் கொண்டு அமைதியாக அமைந்துள்ளேன் என்பது தான் சரியானது அப்புச்சி.
எமக்கு
விடுதலைப் போராட்டம்
தந்த பரிசு
மனித அரவமற்ற சுடுகாடும்,
அரைகுறையாய்க் கிண்டிய கிடங்கினுள்
அவசரமாய்ப் புதைத்த
மனிதப் பிண்டங்களும்
எலும்புக் கூடுகளும் மண்டையோடுகளுமே!
உலவு.காம் திரட்டியினருக்கு நன்றி.
பதிலளிநீக்குஉங்கள் சேவை தொடர களத்துமேட்டின் வாழ்த்துக்கள்.