இலங்கையின் வன்னிப் பகுதியில் தொடரும் போர் அவலத்தை நிறுத்தக் கோரி ஸ்ரீலங்கா அரசாங்கத்தைக் கோரும் உண்ணா நோன்பினை இன்று காலை அண்ணா நினைவிடத்தில் கலைஞர் கருணாநிதி ஆரம்பித்தார்.
கலைஞரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா அரசாங்கம் பாதுகாப்பு அவையைக் கூட்டி யுத்த நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ள செய்தி தனக்கு எட்டியுள்ளதாகவும் கூறி உண்ணா விரதத்தைக் கை விட்டார் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.
இந்திய ஊடகங்கள் தான் போர்நிறுத்தம் என்று சொல்கின்றதே தவிர வேறெந்த ஊடகங்களிணும் இல்லை. மீண்டும் ஒரு நாடகம் அப்பட்டமாக படுதோண்வி அடைந்துள்ளது. உல்மையிலேயே ஒருகணம் சந்தோசப்பட்டேன் ஆனாண் அதை பொய்யாக்கி விட்டார் கருணாநிதி. இந்திய ஊடகங்கள் எப்பொழுது தான் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுவதிலிருந்து வெளிவரப்போகுதோ தெரியவில்லை.
பதிலளிநீக்குவருகைக்கும் காத்திரமான பின்னூட்டத்துக்கும் நன்றி செல்வா.
பதிலளிநீக்குஇந்தியா எதிர்கொள்ளவிருக்குக்கும் தேர்தலுக்கான நாடி பிடிப்பே இந்த உண்ணா நோன்பாகும்.
தமிழீழம் தேவையெனும் செல்வியின் அறிவிப்பும், கலைஞரின் சில மணித்தியால உண்ணா விரதமும் மற்றும் திருமா, ராமதாஸ், விஜயகாந்த் போன்றோரின் உணர்ச்சிப் பிரபாகம் அனைத்தும் எதிர்கால அரசியல் இருப்புக்கான முன் நகர்வுகளே !
முதலில் ராமதாசு,திருமா,வீரமணி இவர்கள் சென்று பேசிய போதே கலைஞர் உண்ணாவிரத்ம் இருக்கப் போவதாகச் சொல்ல இல்லை வேண்டாம் என்று சொன்னதாக மருத்துவர் சொன்னார்.
பதிலளிநீக்குபின்னர் தமிழக ஆட்சியைத் தேர்தல் இல்லாமல் காங்கிரசு,அதிமுக வுடன் பெற்றிடலாம் என்று பேரம் பேசிச் சோரம் போய்விட்டார்.
இப்போது கலைஞர் வேறு யாரையுங் கேட்காமல் விடிய்ற்காலையில் சென்று உண்ணாவிரதம் இருந்தார்.
அனைவரும் கவணித்தனர்,
செய்தியை ஒழுங்காகக் கேட்காத தலையைத் தவிர உடம்பெல்லாம் மூளையுள்ள சிதம்பரம் அவர்கள் போர்நிறுத்தம் அறிவித்து விட்டார்கள்,நீங்கள் உண்ணாவிரத்த்தைக் கைவிடுங்கள் என்று சொல்லிக் கழுத்த்தை அறுத்து விட்டார்.
வருகைக்கும் கலைஞர் சார்பான கண்ணோட்டத்தையும் பதிவு செய்தமைக்கு நன்றி தமிழன்.
பதிலளிநீக்குஅரசியல் சுத்துமாத்துக்களில் பாண்டித்தியம் பெற்றவரல்லவா, நீண்ட கால அரசியல் வாழ்க்கையென்றால் சும்மாவா?
முதல் நாள் செல்வி ஜெயாவின் இலங்கைத் தமிழருக்கு தமிழீழம் தேவை, அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதனைப் பெற முயற்சி செய்வேன் எனக் கூறியதைச் செவிமடுத்த கலைஞர் மக்கள் ஆதரவு அதிமுக பக்கம் திரும்பி விடாமல் இருப்பதற்காக யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் நடத்திய நாடகத்தின் ஓர் அங்கம் தான் இந்த சில மணி நேர உண்ணாவிரதம்.
நன்கு திட்டமிட்டு ஊடகங்களுக்கு அறிவித்துச் செய்திருக்கலாம், அத்துடன் இலங்கை அரசைக் கோர வேண்டிய அவசியம் இல்லை அதனை நேரடியாக இந்திய மத்திய அரசைக் கேட்டிருக்கலாமே!