சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நீதிபதியாகவும், தென்னாபிரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றின் முதற் பெண் நீதிபதியாகவும் பணிபுரிந்து வரும் தென்னாபிரிக்காவில் பிறந்த தமிழிச்சி திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஸ்தானிகராக, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, டேபன் நகரின் பேரூந்து ஓட்டுநர் ஒருவருக்கு மகளாக பிறந்த நவநீதம்பிள்ளை அவர்கள் தென்னாபிரிக்க வம்சாவளியாக இருந்தமையால் 28 வருடங்களாக அந் நாட்டின் நிறவெறி அரசாங்கத்தினால் நீதிபதி சம்மேளனத்தில் இணைக்கப்படாமல் இருந்து, 1995 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதல் பெண் மேன்நீதிமன்ற நீதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஐ.நா. சபையினுள் நுழைந்த தமிழிச்சி திருமதி நவநீதம்பிள்ளைக்கு "களத்துமேடு" வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
//ஐ.நா. சபையினுள் நுழைந்த தமிழிச்சி திருமதி நவநீதம்பிள்ளைக்கு "களத்துமேடு" வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது//
பதிலளிநீக்குஎன்னோட வாழ்த்துக்களையும் இட்டுச் செல்கிறேன்
நன்றி ஆ.ஞானசேகரன்.
பதிலளிநீக்கு