சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் வலது குறைந்தோருக்கான சர்வதேச தினம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதம அதிதியாகக் கொண்டு அலரி மாளிகையில் நடைபெற்றது, டக்ளஸ் தேவானந்தா, போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமாவும் மற்றும் இன்னோரன்ன அதிதிகளும் கலந்து கொண்டு வலது குறைந்தோருக்கான இந் நிகழ்வைச் சிறப்பித்திருந்ததாக ஊடகச் செய்திகள் படங்களுடன் செய்திகளைப் பதிவேற்றி இருந்தன.
முப்பது ஆண்டு கால போய் ஓய்ந்து விட்டதென முரசம் கொட்டிக் கொண்டிருக்கும் அரச பேரினவாதமும் அதன் ஏவலாளர்களும், இந்தப் போரின் எச்சங்களாக வலது குறைந்து எஞ்சியிருக்கும் மக்களை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவூட்டியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும், இன்னும் இதற்கு அப்பால் சென்று முகாம்களில் சித்தசுவாதீனமுற்று, வலது குறைந்து நிர்க்கதியாக முடங்கிப் போயுள்ள தமிழ் உள்ளங்களைப் பார்த்து நேசக்கரத்தினை நீட்டினால் குதூகலமாக இருந்திருக்கும் அல்லவா?
இந்த நிகழ்வை நடத்திய அமைச்சரே தமிழராக இருப்பதால், எமது மக்களின் ஊனமான நிலையை உலகுக்கு உரத்துக் கூற அருமையான சந்தற்பமாக இது அமைந்திருக்கும், அமைச்சு சார் நிகழ்வுகள் தமிழருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல இலங்கை வாழ் சகலருக்கும் தேவையானதென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை, ஆனால் இன்றைய சூழலில் வலது குறைந்து நிர்க்கதியாக அழுது கொண்டிருக்கும் மக்களென்றால் நிவாரணக் கிராமங்களில் வாழும் எமது மக்கள் மாத்திரமே!
"ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம்"படம்- 1படம்- 2