வெள்ளி, 6 ஜனவரி, 2012

லண்டனில் உலா வரும் தமிழீழம் பேரூந்து - காணொளி


பிரித்தானியாவின் வடமேற்கு லண்டன் பகுதியின் கிங்ஸ்பிறி பகுதியூடாக தமிழீழம் என எழுதப்பட்ட பயிற்றுநர் பேரூந்து சேவையில் உள்ளது.  ஈழ வரைபடம், கார்த்திகைப் பூ, விடுதலைப் புலிகளின் பாயும் புலி இலச்சனை, பிரித்தானிய தேசியக் கொடி மற்றும் "நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிது, தமிழ் பெரிது, தமிழ் மானம் பெரிதென்று வாழ்" எனும் வாசகமும் பேரூந்தின் முகப்பின் மேல்க் கண்ணாடியில் பொறிக்கப்பட்டுள்ளது.

ACT-FIRST எனும் பிரித்தானிய தனியார் பேரூந்து நிறுவனத்தின் L77EUK எனும் இலக்கத்தைக் கொண்ட தமிழீழ இலச்சனை பொறித்த பேரூந்தில் பல்லின மக்களும் ஓட்டுநர் பயிற்சி பெறக்கூடியதாக இருப்பினும் மாவீரர் குடும்பத்தினருக்கு இலவச பயிற்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரூந்தில் பொறிக்கப்பட்டுள்ள ஈழம் சார்ந்த வார்த்தைப் பிரயோகங்கள் அனைத்தும் வியாபார நோக்கத்துக்கான விளம்பரமாக இருந்தாலும் ஈழத்தின் பால் இவர் கொண்டுள்ள பாசம் பாராட்டுதற்குரியதே!

மேலதிக தேடலுக்கு:

Act First
Bridge Park Community Leisure Centre
Brentfield
Harrow Road
London
NW10 0RG

தொலைபேசி இலக்கம் 020 8961 9686, 07915 104395

இணையத் தளம்: http://www.act-first.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.