சனி, 8 அக்டோபர், 2011

ஒரு வார்த்தை ஒரு லட்சம் ஜேம்ஸ் வசந்தனுக்கும் வார்த்தை சறுக்கியதோ!


விஜய் தொலைக்காட்சியில் வாராந்தம் சனிக்கிழமை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தொகுத்தளிக்கும் "ஒரு வார்த்தை ஒரு லட்சம்" அனேகமான ரசிகர்களைக் கொள்ளை கொண்ட நிகழ்ச்சியாகும்.  தமிழகத்தில் தமிழை நிலை நிறுத்துவதற்காக உருவான போட்டி நிகழ்ச்சியெனில் மிகையில்லை.

தொலைக்காட்சிகளில் தமிழ் வளர்க்கக் கூடிய விவாத அரங்கம், பேச்சுப் போட்டிகள், கவிதை அரங்கம் போன்ற பல நிகழ்ச்சிகள் உள்ளன, இந் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டுமெனில் அபரிதமான தமிழ் அறிவும், பேச்சுத் திறமையும் இருப்பதுடன் மேடைக் கூச்சமும் இல்லாதிருக்க வேண்டும், ஆனால் ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சிக்கு எதுவுமே தேவையில்லை.  ஒவ்வொரு சொல்லையும் சமயோசிதமாக யோசித்து சொன்னால் போதும் போட்டியாளர்களுக்கு வெற்றி நிச்சயம்.

இதனாலேயே அனேகமான பார்வையாளர்களை பார்க்கத் தூண்டுகின்றது, போட்டியிட வைக்கின்றது. 2011.10.08 ஆம் திகதியான இன்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் நேயர்களுக்காக வீடு, காவல், குறைக்கும் எனும் குறுஞ்செய்தியூடான வினா கேட்கப்பட்டுள்ளது, இதற்காக தொகுப்பாளர் வசந்தனின் வாய் உச்சரிப்பினூடாக குரைக்கும் என ஒலி வெளி வந்தது, ஆனால் எழுத்துமூல வரி வடிவில் குறைக்கும் என பதிவாகியுள்ளது.

இதற்காக எழுத்து வடிவமைப்பாளர்களே பொறுப்புக் கூற வேண்டியவர்களாகும், ஆனால் இந்த சிறப்பான நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கும் பொறுப்பு திரு. ஜேம்ஸ் வசந்தனிடம் உள்ளதால், ஜேம்ஸ் வசந்தனுக்கும் வார்த்தை சறுக்கியதோ என கேட்கத் தோன்றுகின்றது.

மேலதிக தேடலுக்கு: யூரியூப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.