செவ்வாய், 28 அக்டோபர், 2008

வன்னியில் இருந்து மண்டைதீவுக்கு வள்ளதில் வந்த 19 பேர்!


தீபாவளி தினமான 2008.10.27 நேற்று வன்னியில் இருந்து 19 பொது மக்கள் வள்ளத்தின் மூலம் இடம்பெயர்ந்து மண்டைதீவுக்கு வந்துள்ளனர்.

முறிகண்டி பகுதியைச் சேர்ந்த ஆறு குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் 6 ஆண்களை மற்றும் இரு குழந்தைகள் உட்பட 19 பேர் பலத்த செல் வீச்சுக்கும் மத்தியில் பூநகரி ஊடாக மண்டைதீவுக்கு வந்துள்ளனர்.

கடற்படை அதிகாரிகளினால் இன்று யாழ்ப்பாண மாவட்ட அரச அதிகாரிகளிடம் இம் மக்கள் ஒப்படைக்கப்படவுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

4 கருத்துகள்:

  1. ஈழவன்,உங்கள் செய்திகளை என்றும் பார்க்கிறேன்.பின்னூட்டம் என்ன சொல்லி இட நான்?

    பதிலளிநீக்கு
  2. உண்மையான செய்திகள் எல்லா ஊடகங்களிலும் பதிவு செய்யப்படுவதில்லை, சில செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன, இதனாலேயே இப்படியான செய்திகளையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

    இவை காலத்துக்குப் பொருந்தாது என்பதால் புறக்கணித்து விடுவது எப்படி?

    பக்கச் சார்பின்றி சகல செய்திகளையும் "களத்துமேடு" சேர்த்துக் கொள்ளும்.

    வருகைக்கு நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  3. நன்றி

    இவை தான் நான் பத்திரிகைகளுடன் முறுகுவதற்குக் காரணமே!

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.