ஞாயிறு, 26 ஜூன், 2011

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எனும் அரசியல் பெட்டிக்கடை கலைக்கப்பட்டது!

நேற்று மாலை ஊடகவியலாளர் மாநாட்டினை நடாத்திய தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தலைவர் சிறிகாந்தா மற்றும் செயலாளர் சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் இதனால் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை இன்றுடன் கலைப்பதாக தெரிவித்துள்ளனர்.

புதன், 15 ஜூன், 2011

"இலங்கையின் கொலைக்களம்" ஆவணத் திரைப்படத்தின் முழு வடிவம்!

ஸ்ரீலங்காவின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தும் "இலங்கையின் கொலைக்களம்" எனும் தலைப்பிலான ஆவணத் திரைப்படத்தை சனல் - 4 தொலைக்காட்சி ஒளிபரப்புச் செய்தது.

Sri Lanka’s Killing Fields எனும் இவ் ஆவணத் திரைப்படத்தின் முழு வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 14 ஜூன், 2011

சனல்-4 தொலைக்காட்சியில் இன்று "இலங்கையின் கொலைக்களம்" ஒளிபரப்பு

வன்னி யுத்தத்தின் அவலத்தினை உலகுக்குக் காட்டுவதற்காக சனல் 4 தொலைக்காட்சியினால் உருவாக்கப்பட்ட "இலங்கையின் கொலைக்களம்" எனும் ஆவணத் திரைப்படம் இன்று சர்வதேச நேரம் 23.05 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

ஞாயிறு, 5 ஜூன், 2011

கட்சி தாவலை உறுதிப்படுத்தினார் மு.றெமிடியஸ்

யாழ் மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான முடியப்பு றெமீடியஸ் ஆளும் மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணியில் இணைந்து செயற்பட இருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும். ......................................................................................

யாழ் மாநகரசபை ஆளும் தரப்புக்கு தாவினார் எதிர்க்கட்சித் தலைவர் சட்டத்தரணி றெமிடியஸ்

யாழ் மாநகரசபையின் எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுமைக்குட்பட்ட யாழ் மாநகரசபையின் தரப்புக்கு மாறியுள்ளதாக யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

சனி, 4 ஜூன், 2011

ஜெனிவாவில் ஒளிபரப்பான "இலங்கையின் கொலைக்களம்" ஆவணத் திரைப்படம்.

சுவிற்சலாந்தின் தலைநகர் ஜெனிவாவில் 2011.06.06 ஆம் திகதியான இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில், ஈழத் தமிழர்கள் மீதான போர்க் குற்ற ஆவணத் திரைப்படம் "இலங்கையின் கொலைக்களம்" (SRILANKA'S KILLING FIELDS)எனும் மகுடத்துடன் சனல்-4 தொலைக்காட்சியினால் காண்பிக்கப்பட்டது.