புதன், 11 ஏப்ரல், 2007

தேன்கூட்டின் மறுமொழி

தேன்கூட்டுக்கு ஒரு மடல் எனத் தலைப்பிட்டு நேற்று நான் பதிவு செய்த பகிரங்க மடல் சார்ந்த e mail இற்கு தேன்கூட்டில் இருந்து பதில் கிடைத்தது.

பொறுமை காக்க முடியாமல் நான் பகிரங்கமாக பதிவு செய்த காரணத்தினால் தேன்கூடு எனது ஆதங்கத்தைப் புரிந்து பதில் தந்தமைக்காக நன்றியுடன் அப் பதிலை இத்தால் இணைக்கின்றேன்.

இனிமேல் எனது இடுகைகள் தேன்கூட்டில் பதிவாகும் எனும் நம்பிக்கையில் காத்திருக்கின்றேன்.



அன்பு நண்பருக்கு,

தேன்கூடு தளம் சாகரனின் (கல்யாண்) முழு மேற்பார்வையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருந்ததால் அவருக்கு பிறகு தொடர்ந்து நடத்துவதில் சில நடைமுறை சிக்கல்களும், தாமதங்களும் ஏற்படுகின்றன. இடுகைகள் பகுதியில் புதிய பதிவுகள் இணைப்பதில் இருந்த சிரமங்கள் நீங்கி இப்பொழுது பதிவுகள் இணைக்கத் தொடங்கிவிட்டோம். இனி இந்த வகையான தாமதங்கள் ஏற்படாது என நம்புகிறோம். பொறுமை காத்தமைக்கு நன்றி.

- தேன்கூடு குழு

2 கருத்துகள்:

  1. சாகரனின் இழப்பின் பின்பும் தேன்கூடு புத்துயிர் பெற்றுள்ளது என்றால் அதில் மிகை இல்லை.

    பதிலளிநீக்கு
  2. பின்னூட்டமிட்டமைக்கு நன்றி இலக்கியா.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.