ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

இலவச இணையத் தளமும், இலவச ஈமெயில் கணக்கும் !

இணையத் தளமும், அவ் இணையத்தளத்தின் பெயருடன் கூடிய ஈமெயில் கணக்கினையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ள http://www.cydots.com/ உதவுகின்றது.

http://www.cydots.com/ சென்று xx.blogspot.com எனும் வலைப்பூவை xx.net.ms என்று பெயர் மாற்றம் செய்து y@xx.net.ms என ஈமெயில் எனும் கணக்கினையும் வைத்துக்கொள்ள http://www.cydots.com/ உதவுகின்றது.

உ-ம்: எனது வலைப்பதிவு களத்துமேடு இதனை http://www.ekalamm.net.ms/ என்று பெயரை மாற்றி eelavan@ekalamm.net.ms எனும் ஈமெயில் கணக்கினையும் வைத்துள்ளேன்.

இலவசமாக இத் தளம் உள்ளதால் நீங்கள் விரும்பினால் செய்து பார்க்கலாமே!

சனி, 30 ஆகஸ்ட், 2008

கண்ணைத் தோண்டிக் கடவுளுக்கு படையல் செய்த நவீன கண்ணப்பன் !

முற்காலத்தில் காளாத்தியப்பருக்கு கண்ணிரண்டையும் கொடுத்தார் கண்ணப்ப நாயனார், இது கதையா, கற்பனையா என்று விவாதக் களங்கள் உருவாகியுள்ள இக் காலத்தில், நவீன கண்ணப்பராக இந்திய பாகல்கோட்டை மாவட்டத்தின் பாதாமி தாலுகாவில் உள்ள அடகல் கிராமத்தைச் சேர்ந்த 41 வயதுடைய முதுகப்பா உருவெடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் வீரபத்ரேசுவரா சுவாமிகள் கனவில் வந்து "முதுகப்பா உனது கண்ணை எனக்கு படையல் செய்" எனக் கேட்டதற்கிணங்க, உடனே சங்கரையா மடத்திலுள்ள வீரபத்ரேசுவரா கோவிலுக்குச் சென்ற முதுகப்பா தனது வலது கண்ணைத் தோண்டியெடுத்து சிலைக்கு படையல் செய்துள்ளார்.

நம்பவே முடியாமல் இருக்கின்றதல்லவா, ஆம் இப்போது முதுகப்பா பாகல்கோட்டை அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டு வருகின்றார்.

நல்லூர் கந்தனின் தீச்சட்டி மீது வீழ்ந்த பக்தர்கள் !

யாழ். நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழாவான 24ஆம் நாளாகிய நேற்று தேர்வீதி உலா வந்து முருகனை கீழே இறக்கிய போது ஏற்பட்ட சனநெரிசலில் தீச்சட்டியின் மீது பக்தர்கள் தவறி விழுந்ததில் பதினொரு பேர் தீக்காயங்களுக்கு இலக்காகினர்.

தீக்காயங்களுக்குள்ளாகியோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

..


..



தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டோர் விபரம்:
  1. ஏ.அருண்ராஜ் - 18 வயது - நல்லூர்
  2. எஸ்.சபேசன் - 8 வயது - கந்தர்மடம்
  3. ஆர்.குகேந்திரமாலா - 13 வயது - இணுவில்
  4. என்.வினேதீஸ்வரன் - 27 வயது - இணுவில்
  5. என்.தில்லைச்சிவன் - 27 வயது - இணுவில்
  6. எஸ்.ஜெககாந்தினி - 26 வயது - கொக்குவில்
  7. ஐ.ரதீஸ்வரன் - 36 வயது - நவாலி
  8. எஸ்.ஸ்ரீதரன் - 36 வயது - மானிப்பாய்
  9. பி.கொலிஸன் - 24 வயது - மானிப்பாய்
  10. கே.யோகமலர் - 57 வயது - சுன்னாகம்
  11. எஸ்.அரியமலர் - 53 வயது - வட்டுக்கோட்டை

மட்டு. சிறைச்சாலையில் குண்டுத் தாக்குதல் !

மட்டக்களப்பு சிறைச்சாலையினுள் நேற்று காலை நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் கைதிகளாக இருந்த ஈபிடிபி உறுப்பினர்கள் ஐவரும் மேலும் இருவருமாக ஏழு பேர் காயமைடைந்துள்ளதாகவும், அச் சம்பவத்தில் ஈழமாறன் ரவி என்பவர் கையை இழந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பிள்ளையான் குழுவினரே இக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக ஈபிடிபியினர் குற்றம் சாட்டிய போதிலும் எவராவது கைது செய்யப்பட்டதாக அறிய முடியவில்லை. தங்களால் இத் தாக்குதல் நடத்தப்படவில்லையென ரிஎம்விபியினரின் ஊடகப் பேச்சாளர் மௌலானா பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலையினுள் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் காரணிகளை கண்டு பிடிக்க விசாரணை நடைபெறுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஈபிடிபி இனர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை:


கிழக்கில் வேலியே பயிரை மேய்கிறது அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
ஊடக அறிக்கை 28.08.2008

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் பெயரால் எமது உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எமக்கான நியாயமும், நீதியும் கிடைக்குமென நாம் நம்புகின்றோம். எமது அரசியல் செயற்பாடுகளை மட்டக்களப்பிலிருந்து அகற்றும் நோக்கத்தோடு காலத்துக்குக் காலம் எம்மீது பலவிதமான வன்முறைகளை சமூக விரோதிகள் புரிந்துவருவதை எமது மக்கள் அறிவார்கள்.

இதன் தொடர்ச்சியாக அண்மையில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த எமது நீண்ட கால உறுப்பினர் தோழர் அப்பாஸ் சுடப்பட்டதையும் மக்கள் அறிவார்கள்.

வாழைச்சேனையில் எமது உறுப்பினரான தோழர் சீலன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நாம் பொலிஸாரிடம் முறையிட்ட போதிலும், அதுகுறித்து இன்றுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எமது உறுப்பினர்களைக் கடத்தியது அஜித் தலைமையிலான ரி.எம்.வி.பி.யினர்தான் என்பதை நாம் குறிப்பிட்டிருந்தோம். இந்த விடயத்தில் தமது தலையீட்டை அரசியல் செல்வாக்குச் செலுத்தித் தப்பித்துக் கொண்டுள்ளனர்.

இத்தகைய அதிகார துஷ்பிரயோகமானது நீதி, நியாயம் கிடைக்கவிடாது, கிழக்கில் அச்சச் சூழலையே தோற்றுவித்துள்ளது. இத்தகைய பயங்கரமான சூழலின் பின்னணியிலேயே 29.08.2008 அன்று மட்டக்களப்பு சிறையில் நடந்த கைக்குண்டு வெடிப்புச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 6.30 மணிக்கு சிறையில் இருப்பவர்களை இயற்கை கடமைகளுக்காக திறந்துவிடும் வழக்கமான நேரத்திலேயே எமது உறுப்பினர்கள் மீது திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் செங்கலடியின் பொறுப்பாளர் தோழர் ரவி (தர்மரெட்ணம் ஈழமாறன்), தோழர் சேகர் (வீரகுட்டி சேகர்), தோழர் ஜெயகுமார் (யோகராசா ஜெயகுமார்), தோழர் விஜய் (மகேந்திரராஜ் - வினோதராஜ்), தோழர் விஜி (கோவிந்தன் - பிரதீப்), ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்களுடன் இருவர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு நிறைந்த சிறைக்குள்ளேயே இத்தாக்குதல் நடந்துள்ளது. சட்டம், ஒழுங்கில் இருக்கும் குறைபாடுகளையே இது கோடிட்டுக் காட்டுகிறது. எங்கும் பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சியையே மக்கள் கொண்டிருக்கின்றனர்.

இத்தாக்குதலை நடத்திய ரி.எம்.வி.பி. உறுப்பினரை எமது உறுப்பினர்கள் பார்த்துள்ளனர். எனினும் அது தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? இத்தகைய சூழலையா கிழக்கின் விடுவிப்பும் - ஜனநாயகம் என்றும் நம்புகின்றோம் என்று மக்களின் கேள்விகளுக்கு என்ன பதிலளிக்க முடியும். சட்டம், ஒழுங்கைச் செயற்படுத்த வேண்டியவர்கள், ஒரு குறிப்பிட்ட தரப்பை பாதுகாக்க செயற்படுகின்றனர்.

அப்படியாயின், அப்பாவிப் பொதுமக்களையும், அரசியல் சக்திகளையும் பாதுகாக்க வழியேதுமில்லையா? நீதிக்காகக் காத்திருப்போரை சிறையிலேயே கொலை செய்யும் கொடூரம்தான் கிழக்கின் தற்போதைய அரசியல் போக்காக மாறி இருக்கிறது.

மக்களே! அரசியல் பலத்தையும், ஆயுதப் பின்னணியையும் கொண்டு, மக்களை அடக்கி ஒடுக்கி காட்டு ராஜ்ஜியம் நடத்த எத்தனிக்கப்படுகின்றது. இந்த நிலையானது சட்டியிலிருந்து அடுப்பில் வீழ்ந்த கதையாகிவிட்டிருக்கிறது. மக்களையும், மக்கள் சேவகர்களையும், வன்முறையைப் பிரயோகித்து அடிமைப்படுத்த நினைக்கும் சக்திகளின் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஊடகச் செயலாளர்

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

3,27,000 ரூபாய் பட்டுச் சேலை !

இந்திய கோவை மாவட்டத்தின் சிறுமுகை புதூர் இராமலிங்க சௌடேஸ்வரி கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் 1330 திருக்குறளையும், திருவள்ளுவரையும் ஒரே சாறியில் வடிவமைத்துள்ளனர்.

பாலசுப்ரமணியம் லட்சுமி தம்பதியினர் 130 நாட்களில் 3,27,000 ரூபாய் செலவில் பட்டுச் சேலை நெய்து சாதனை படைத்துள்ளனர்.

நவீன கணினி தொழிநுட்பத்தில் நெய்யப்பட்ட இச் சேலையை, பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம் கின்னஸ் சாதனை மட்டத்துக்குக் கொண்டு செல்ல முயன்று வருகின்றார்.

கால்நூற்றாண்டு ஊடகவியலாளர் அஷ்ஹர் மரணம் !

ஸ்ரீலங்காவின் மூத்த தமிழ் பேசும் பத்திரிகையாளரும் நவமணி பத்திரிகை பிரதம ஆசிரியருமான 61 வயதுடைய அல்ஹாஜ் எம்.பி.எம்.அஷ்ஹர் நேற்று மரணமானார்.

தினபதி, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் பத்திரிகையாளராகக் கடமை புரிந்த அஷ்ஹர் 1969 - 1994 ஆம் ஆண்டு வரையான கால் நூற்றாண்டாக ஸ்ரீலங்கா பாராளுமன்ற செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார்.

"உறுமும் கடலும் உலவும் நதியும்" எனும் 25 வருட கால பாராளுமன்ற செய்தியாளரின் அனுபவப் பகிர்வு பற்றிய நூலினையும், "மாண்புறு ரமழானில் மனதுக்கினிய சிந்தனைகள்" எனும் இஸ்லாமிய நூலினையும் வெளியிட்டுள்ளார்.

1965 - 1969 ஆசிரியராக "புதுமைக்குரல்" பத்திரிகையிலும், 1968 - 1974 செய்தியாளராக "தினபதி" பத்திரிகையிலும் மற்றும் 1975 - 1994 செய்தியாளராக "வீரகேசரி" பத்திரிகையிலும் ஊடகவியலாளனாக பணிபுரிந்தமைக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

அன்னாருக்கு களத்துமேட்டின் அஞ்சலிகள்.

வியாழன், 28 ஆகஸ்ட், 2008

கருணாநிதி Vs நெடுமாறன்

தமிழ்நாட்டின் பத்திரிகைகளில் கருணாநிதி Vs நெடுமாறன் பட்டிமன்றம் தொடர்பான விடயங்கள் அலங்கரிக்கத் தொடங்கி விட்டன. "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்பது போல அரசியல்வாதிகள் சண்டை பிடித்தால் வாசகர்களுக்குத் தீனி தானே இதனால் வாசகர்களுக்கு நல்ல தீனி கிடைக்கவிருக்கின்றது, அதுமட்டுமல்லாமல் அரசியல் சகதி நாற்றமும் வெளியே வரப் போகின்றது.

கருணாநிதியைச் சாடி பழ.நெடுமாறனின் கட்டுரையும், பதிலாக கவி வடிவில் பழ.நெடுமாறனைச் சாடி கருணாநிதியும், இப்போது கருணாநிதியின் பொய்களுக்கு பதில் தருகின்றேனென பழ.நெடுமாறனின் அறிக்கையும் பத்திரிகைகளில் களைகட்டத் தொடங்கி விட்டன.

திரு.பழ.நெடுமாறன்:
காதோரம் ஒரு முடி நரைத்ததற்கே தசரதன் ராமனை மன்னராக்கினான். ஆனால் கருணாநிதியோ இன்னும் முதல்வர் பதவியை விடாமல் பிடித்திருக்கிறார்.......

...........




கலைஞர்.மு.கருணாநிதி:

ஆழ்வார்கள் புராணம்
விடுதலைப் போர் நாயகராம்
விருதுநகர் மாவீரர் காமராஜரின்
விசுவாசமிக்க சீடர் என்று
விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்
வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர்
விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!
அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன் என நவின்று
கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!

மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்
முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றி விட்ட எட்டப்பன்!
குன்றணைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க
குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென
தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;
தான் மட்டுமே தப்பி வந்த ஆஞ்சநேயன்!
வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே
குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!

தரணிதனில் பல புராணங்கள் இருக்க
தசரதன் புராணத்தில் இவர் இறங்கி
அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை- தன் கட்டுரைக்கு
விதையாக்கி விஷத்தைக் கக்கியிருப்பததுதான் பெரும் விந்தை!
சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!
கூராக்கவே இயலாத மூளையிலே விஷம் ஒரு மொந்தை!


திரு.பழ.நெடுமாறன்:

பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி. 1969-ஆம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும் நாடாளுமன்றத் தொகுதியல்ல இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.

அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.

1996-ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்த போது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவகவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.

1983-ஆம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி. பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வரவேண்டும்.

பட்டிமன்றம் தொடருமா காத்திருப்போம் !

உதயனின் இளவல்கள் வட்டம் !

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் "உதயன்" பத்திரிகையில் "இளவல்கள் வட்டம்" என்னும் பரப்பு விரிந்துள்ளது.

உங்களின் திறமைகளை வெளிக்கொணரவும், பிரச்சனைகள் பற்றிப் பேசவும், தேடல்களுக்குத் தீனி போடவும் உதயனின் இளவல்கள் வட்டம் காத்திருக்கின்றது.

தொடர்புக்கு:


"இளவல்கள் வட்டம்"
"உதயன்"
361, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.

நெடுமாறனை நோக்கிய கலைஞரின் கவிதை !

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அண்மையில் எழுதிய விமர்சனக் கட்டுரையில், காதோரம் ஒரு முடி நரைத்ததற்கே தசரதன் ராமனை மன்னராக்கினான். ஆனால் கருணாநிதியோ இன்னும் முதல்வர் பதவியை விடாமல் பிடித்திருக்கிறார் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதற்கு கவிதை வடிவில் மு.கருணாநிதி பதில் சொல்லி இருந்தார்.

ஆழ்வார்கள் புராணம்


விடுதலைப் போர் நாயகராம்
விருதுநகர் மாவீரர் காமராஜரின்

விசுவாசமிக்க சீடர் என்று
விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்

வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர்
விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!

அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன் என நவின்று
கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!

மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்
முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றி விட்ட எட்டப்பன்!

குன்றணைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க
குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென

தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;
தான் மட்டுமே தப்பி வந்த ஆஞ்சநேயன்!

வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே
குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!

தரணிதனில் பல புராணங்கள் இருக்க
தசரதன் புராணத்தில் இவர் இறங்கி

அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை- தன் கட்டுரைக்கு
விதையாக்கி விஷத்தைக் கக்கியிருப்பததுதான் பெரும் விந்தை!

சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!
கூராக்கவே இயலாத மூளையிலே விஷம் ஒரு மொந்தை!

------------------- மு.கருணாநிதி

புதன், 27 ஆகஸ்ட், 2008

இனவாதிகளிடம் பறிபோகும் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் !

ஸ்ரீலங்காவின் யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக வாழ்ந்த முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டார்கள், காத்தாங்குடி பள்ளிவாயலில் வைத்து தொழுகையில் இருந்த முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், சம்மாந்துறையில் முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றெல்லாம் ஊடகங்கள் பல செய்திகளை எழுதி வருகின்றன, ஆனால் முஸ்லிம்களினால் தமிழர்கள் கொல்லப்படும் விடயங்களும், உடுத்த உடையுடன் உடமைகளை இழந்து முஸ்லிம்களினால் துரத்தப்பட்ட தமிழ்க் கிராமங்களும், முஸ்லிம்களினால் வேட்டையாடப்பட்ட, கொள்ளையிடப்பட்ட பல தமிழ் கிராமங்களும், முஸ்லிம்களினால் தீண்டப்பட்ட தமிழ் யுவதிகளென்றெல்லாம் நீளும் பட்டியல் வெளியே தெரிய வராமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றது.

முஸ்லிம்களின் கீழ்த்தரமான இச் செயற்பாடுகளுக்கு அரசாங்கமும், அரச படைகளும், ஊடகங்களும், ஒத்துழைப்புச் செய்து வருகின்றன.

இந்த விடயங்களை நடுநிலையில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஊடகங்கள் புரிந்து கொள்ள மறுப்பது வேடிக்கையாக உள்ளது.

"இனவாதிகளிடம் பறிபோகும் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள்" எனும் கருப் பொருளில் தினக்குரல்( 24.08.2008 ) சிவநடேசன் எழுதிய கட்டுரை முக்கியமானதொன்றாகும்.

இக் கட்டுரையாளர் மறைக்கப்பட்டு வரும் பல உண்மைகளை இக் கட்டுரை மூலம் தெரிய வைத்துள்ளார்.

நன்றி தினக்குரல்


கட்டுரையின் மீது அழுத்துவதன் மூலம் தெளிவாக வாசிக்கலாம்.

பிரித்தானியா ஒலிம்பிக் இலச்சினை !


2012 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் இலச்சினை.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2008

விடுதலைப்புலிகளின் வான்படை திருமலையில் குண்டுத் தாக்குதல் ! தலைநகரம் இருளில் !!

ஸ்ரீலங்காவின் திருகோணமலை துறைமுகத்தில் இன்றிரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை குண்டுத் தாக்குதல் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து உள்ளே சூட்டுச் சத்தம் கேட்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் செய்தி கொழும்புக்கு எட்டியதும் தலைநகரம் இருளில் மூழ்கியுள்ளது.

23ம் வருட நிறைவு வயலூர் கிராம தமிழர் படுகொலை !




<--------(இதனை அழுத்தவதன் மூலம் கட்டுரையைப் படிக்கலாம்)
ஸ்ரீலங்கா படையினரால் அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள் வரிசையில், ஊடகங்களூடாக வெளியே தெரிய வராமல் இருந்த "வயலூர்" கிராமம் படுகொலையில் 23வது நிறைவு தினம் பற்றிய தொல்காப்பியனின் கட்டுரை 2008.08.24 ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் 11ஆம் பக்கத்தில் பிரசுரமாகி இருந்தது.

நன்றி தினக்குரல்

உலக தனவந்தர்கள் பட்டியல்

உலகின் தனவந்தர்களான அரச குடும்பத்தினர் பட்டியலை பிரபல சஞ்சிகையான "போர்ப்ஸ்" வெளியிட்டுள்ளது.
1. தாய்லாந்து மன்னர் - 80 வயது - 35 பில்லியன் அமெ.டொலர் சொத்துரிமை
(62 வருட காலமாக மன்னர் பதவி)
2. அபுதாபி மன்னர் - 60 வயது - 23 பில்லியன் டொலர் சொத்துரிமை
(ஷேய்க் கலிபா பின் செய்யது அல் நாஹ்யன்)
3. சவூதி மன்னர் - 84 வயது - 21 பில்லியன் சொத்துரிமை
(அப்துல்லா பின் அப்துல் அஸீஸ்)
4. புரூனே சுல்தான் - 62 வயது - 20 பில்லியன் சொத்துரிமை
(ஹாஜி ஹஸனல் போல்கியா)
5. துபாய் பிரதமர் ஷேய்க் முஹமட் பின் ரஷீத் 18 பில்லியன் சொத்துரிமை
6.
7.
8.
9.
10.
11.
12. இங்கிலாந்து மகாராணி எலிஸபெத் 650 மில்லியன் சொத்துரிமை

மாவீரன் பண்டாரவன்னியனின் 205 ஆம் வெற்றி விழா !


வன்னி இராஜ்ஜியத்தின் இறுதிக் குறுநில மன்னனாக இருந்து 1803.08.25 ஆம் நாள் முல்லைதீவில் எம்மை ஆக்கிரமித்த ஆங்கிலேயரையும் அவர்களின் கோட்டையையும் அழித்து அங்கிருந்த மூன்று பீரங்கிகளையும் கைப்பற்றி வீரவாகை சூடிய மாவீரன் பண்டாரவன்னியனின் 205 வது வெற்றி விழா நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.

கற்சிலைமடுவில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் உருவச்சிலை வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பண்டாரவன்னியன் நினைவுக்கல் நடப்பட்டு விழா சிறப்பாக நடந்தேறியது.

(குறிப்பு படத்தில் இருக்கும் கல்வெட்டு கணினியில் வரைந்தது)

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

பொலநறுவையில் பிள்ளையான் குழுவுக்கும் ஆசனம் !

ஸ்ரீலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து வடமத்திய மாகாணத்தின் பொலநறுவை மாவட்டத்தில் போட்டியிட்ட பிள்ளையான் குழுவின் மங்களம் மாஸ்டர் 5480 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.

தெரிவு வாக்குகளின் அடிப்படையில் கடைசி நிலையில் இருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மங்களம் மாஸ்டருக்கு போனஸ் ஆசனமொன்றை வழங்குவதென ஆளும் கட்சி தீர்மானித்துள்ளது.

நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 20 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 12 ஆசனங்களையும் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்று 33 ஆசனங்களைக் கொண்ட வடமத்திய மாகாணசபையில் அதிகப்படியான ஆசனத்தைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு போனஸாக மேலும் இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன, இதில் ஒன்றே மங்களம் மாஸ்டருக்கு கிடைக்கவுள்ளதாகும்.

விடுதலைப் புலிகள் தலைவருக்கு கொழும்பு நீதிமன்றத்தின் அழைப்பாணை !

ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை வழக்குத் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரன் மற்றும் சாள்ஸ் மாஸ்டர் ஆகியோருக்கு முல்லைத்தீவு பிரதேச செயலர் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரச தரப்பு சட்டத்தரணி சுனில் குலரட்ண தெரிவித்தார்.

முன்னர் அனுப்பிய அணைப்பாணை கிடைத்தது பற்றிய தகவல்கள் இல்லாததால் மீண்டும் அழைப்பாணை அனுப்புமாறு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க காவற்துறையினருக்கு உத்தரவிட்டதுடன் விசாரணையை செப்டெம்பர் 18 திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

ஒலிம்பிக் திருவிழா - 2012

ஒலிம்பிக் திருவிழா பீஜிங்க் - 2008 இனிதே முடிவுற்றது.
அடுத்த ஒலிம்பிக் திருவிழா 2012 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் !

ஸ்ரீலங்கா சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் !

சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்:
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ----- 472,789 வாக்குகள் ---- 55.377 வீதம் ----25* ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி ---- 346,321 வாக்குகள் ---- 40.53 வீதம் ---- 17 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி ---- 19,068 வாக்குகள் ---- 2.23 வீதம் ---- 2 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ---- 10,163 வாக்குகள் ---- 1.19 வீதம்
தேசிய ஐக்கிய முன்னணி ---- 1495 வாக்குகள் ---- 0.17வீதம்

மொத்த வாக்குகள் ------ 854,376 ------ 94.75%
நிராகரிப்பு ------ 47,297 ------ 5.25%

ஸ்ரீலங்கா வடமத்திய மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் !

ஸ்ரீலங்காவில் நேற்று இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது.

வடமத்திய மாகாண சபைத் தேர்தல்:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ---------307,457 வாக்குகள்---------56.37 வீதம்----------20 *ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி --------------------205,284 வாக்குகள்---------37.64 வீதம்----------12 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி ------------- 26,738 வாக்குகள்-----------4.90 வீதம்----------1 ஆசனங்கள்
தேசிய காங்கிரஸ் ----------------------- 3,404 வாக்குகள்-----------0.62 வீதம்
சோஷலிஸ ஐக்கிய முன்னணி ------------- 821 வாக்குகள்---------- 0.15 வீதம்
தேசிய ஐக்கிய முன்னணி ----------------- 695 வாக்குகள்-----------0.13 வீதம்
ஜாதிக சங்வர்தன பெரமுன --------------- 252 வாக்குகள்-----------0.05 வீதம்

மொத்த வாக்குகள்--- 545,440--- 95.10%
நிராகரிப்பு----------- 28,082--- 4.90%

சனி, 23 ஆகஸ்ட், 2008

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவன் சுட்டுக் கொலை !

ஸ்ரீலங்காவின் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மூன்றாமாண்டு முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் கல்வி பயின்ற 22 வயதுடைய குருநாகல் புத்துஹரவைச் சேர்ந்த சிங்கள மாணவன் சுச்சரித்த பசன் சமரசிங்க நேற்று இரவு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இப் படுகொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் மூன்றாமாண்டு விவசாய பீட மாணவன் எஸ்.சிசிதரன், அங்கு பணியாற்றும் முரளிதரன் மற்றும் இரு காவலர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிழக்கிலங்கையின் மட்.வந்தாறுமூலை பல்கலைக் கழகத்தின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 180 சிங்கள மாணவர்கள், இக் கொலைச் சம்பவத்தின் பின்னர் தமது சொந்த இடங்களான சிங்களப் பகுதிக்கு திரும்பினர்.

கடந்த வாரம் இடம்பெற்ற பகிடிவதைக்கும் இம்மாணவனின் கொலைக்கும் சம்பந்தம் இருப்பதாக மாணவர்களிடையே ஒத்த கருத்து நிலவுகின்றது.

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

ஸ்ரீலங்காவின் நாளைய மாகாணசபைத் தேர்தல் !

ஸ்ரீலங்காவின் வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் நாளை நடக்கவிருக்கும் வேளையில் எண்ணற்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன, இன்று பலத்த வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் நடக்கவுள்ள இரு மாகாணங்களுக்குமான நான்கு மாவட்டங்களில் 73 உறுப்பினர்களில், வடமத்திய மாகாண சபைக்காக 31 உறுப்பினர்களும், சப்ரகமுவ மாகாண சபைக்காக 42 உறுப்பினர்களும் தெரிவாகவுள்ளனர்.

690 பேர் போட்டியிடும் வடமத்திய மாகாண சபைக்காக அனுராதபுர மாவட்டத்தில் 21 பேரும், பொலநறுவ மாவட்டத்திலிருந்து 10 பேருமாக மொத்தம் 31 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 569 398 வாக்காளர்கள் அனுராதபுர மாவட்டத்தவர்களும், 277 056 வாக்காளர்கள் பொலநறுவை மாவட்டத்தவர்களுமாக மொத்தம் 846 454 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அனுராதபுர மாவட்டத்தின் 12 அரசியல் கட்சிகளில் இருந்து 288 பேரும் மற்றும் 7 சுயேச்சை குழுக்களிலிருந்து 168 பேருமாக மொத்தம் 456 அபேட்சர்களும், பொலநறுவை மாவட்டத்தின் 10 அரசியல் கட்சிகளில் இருந்து 130 பேரும், 8 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 104 பேருமாக 234 அபேட்சகள் களம் இறங்குகின்றனர்.

1008 பேர் போட்டியிடும் சப்ரகமுவ மாகாண சபைக்காக இரத்திரபுரி மாவட்டத்தில் 24 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 18 பேருமாக மொத்தம் 42 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 713 205 வாக்காளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தவர்களும், 605 621 வாக்காளர்கள் கேகாலை மாவட்டத்தவர்களுமாக மொத்தம் 131 826 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தின் 12 அரசியற் கட்சிகளில் இருந்து 324 பேரும் மற்றும் 9 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 243 பேருமாக மொத்தம் 567 அபேட்சகர்களும், கேகாலை மாவட்டத்தின் 11 அரசியற் கட்சிகளில் இருந்து 231 பேரும் மற்றும் 10 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 210 பேருமாக மொத்தம் 441 அபேட்சகர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அனுராதபுர மாவட்டத்தின் 7 தேர்தற் தொகுதிகளில் உள்ள 527 வாக்களிப்பு நிலையங்களிலும், பொலநறுவை மாவட்டத்தின் 7 தேர்தற் தொகுதிகளில் உள்ள 231 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 758 வாக்களிப்பு நிலையங்கள் வடமத்திய மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் 8 தேர்தற் தொகுதிகளில் 541 வாக்களிப்பு நிலையங்களும், கேகாலை மாவட்டத்தின் 9 தேர்தற் தொகுதிகளில் 473 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 1014 வாக்களிப்பு நிலையங்கள் சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1772 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு 1698 பேர் போட்டியிடும் இவ்விரு மாகாணங்களுக்கான நான்கு மாவட்டங்களிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க 2 165 280 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். இத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற 45 அரசியல் கட்சிகளும், 34 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

இத் தேர்தல் வேலைகளில் ஈடுபடும் அதிகாரிகள் 36000 பேரில் 2100 அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பு, ஆலோசனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போது ஏற்படும் வன்முறைகளைக் கண்காணிக்கவென 21 000 பொலிஸாரும் மேலதிக பாதுகாப்புக்கென இராணுவத்தினரும் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

வியாழன், 21 ஆகஸ்ட், 2008

தட்டிக் கேட்கத் திராணியற்ற ஸ்ரீலங்காவின் நீதி நிர்வாகம் !

ஸ்ரீலங்கா அமைச்சரான மேர்வின் டி சில்வா அடாவடித்தனத்துக்குப் பெயர் பெற்ற ஒரு நபராகி விட்டார், இவர் எது செய்தாலும் தட்டிக் கேட்க ஆள் இல்லை எனும் நிலையே உருவாகி விட்டது.

ஊடகவியலாளர்களைத் தாக்கியது முதற்கொண்டு கடையடைப்பு காடைத்தனம் செய்வது வரையான அனைத்து குற்றச் செயல்களுக்கும் மூல கர்த்தாவாக மேர்வின் டி சில்வாவின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரின் குற்றச் செயல்கள் எல்லை மீறிச் சென்றதால் கொழும்பு நீதவான் நீதிமன்று, இவரைக் கைது செய்யுமாறு பணித்தது, உடனே காவற்துறை தனது கடமையைச் செய்யாமல் இழுத்தடிப்புச் செய்தது.

இந் நிலையில் இன்று சட்டத்தரணிகளுடன் நீதிமன்றம் வந்த மேர்வின் டி சில்வாவுக்கு, நீதவான் 50 000 ரூபாய் ரொக்கப் பிணையும், 500 000 ரூபாய் சரீரப் பிணையும் வழங்கி விடுவித்துள்ளது.

எல்லைமீறிச் செயற்படும் அமைச்சர்களை தட்டிக் கேட்க திராணியற்ற நிலையில் ஸ்ரீலங்கா நீதி நிர்வாகம் அமைந்துள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கமிழந்த ஸ்ரீலங்கா !

ஒலிம்பிக் போட்டிக்கென ஸ்ரீலங்காவில் இருந்து சென்ற எண்மரில் எவரும் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகாத நிலையில் நாடு திரும்பவுள்ளனர்.

குத்துச் சண்டை வீரர் அனுருத்த ரத்னாயக்க, பாரம் தூக்கும் வீரர் சிந்தன விதானகே, நீச்சல் வீரர் டானியல் லீ, துப்பாக்கி சுடும் வீரர் செனநாயக்க, பெட்மிண்டன் வீராங்கனை திலினி ஜயசிங்க, ஈட்டி எறியும் வீராங்கனை நதீகா லக்மாலி மற்றும் நீச்சல் வீராங்கனை மயூமி றஹிம் ஆகியோர் முதற் சுற்றுப் போட்டியுடனேயே தோல்வியுற்று வெளியேறினர். ஆனால் குறுந்தூர ஓட்ட வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க 200 மீற்றர் ஓட்டத்தில் அரையிறுதிப் போட்டியில் 22.98 வினாடிகளில் ஓடி ஏழாவது இடத்தைப் பிடித்ததால் தோல்வியுற்றார்.

ஜமைக்காவின் வெரோனிக்கா கம்பல் 200 மீற்றர் தூரத்தை 22.19 வினாடிகளில் ஓடி முதலிடத்தையும், ஜமைக்காவின் ஸ்டுவட் கரோன், அமெரிக்காவின் மூனா லீ ஆகிய இருவரும் 22.29 வினாடிகள் ஓடி இரண்டாம், மூன்றாம் இடங்களையும், பஹாமாசின் பெர்கியூசன் 22.51 வினாடிகள் ஓடி நான்காம் இடத்தையும் பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கின் 200 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் சுசந்திகா ஜயசிங்க மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை ஸ்ரீலங்காவுக்குப் பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 20 ஆகஸ்ட், 2008

வன்னி மக்களுக்கு கிழக்கு மாகாண சபையின் அவசர உதவி !

ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம் பெற்றுவரும் யுத்தத்தில் சிக்கித் தவிக்கும் வன்னிப் பகுதி மக்களுக்கு அநர்த்த நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. இரா. துரைரெத்தினம், அம் மாகாணசபைக்குக் கோரிக்கை விடுத்ததன் பேரில் மனிதாபிமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள கிழக்கு மாகாணசபை முடிவு செய்துள்ளது.

யுத்தத்தால் பாதிப்புற்று இடம்பெயர்ந்துள்ள 150 000 பேருக்கும் மேற்பட்ட வன்னி மக்களுக்குக் தேவையான அவசர உதவிகளையும், அத்தியாவசியப் பொருட்களான உணவு, உடை, குழந்தைகளுக்கான பால்மா மற்றும் இதர பொருட்களையும் அனுப்ப கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் சி. சந்திரகாந்தன் உட்பட மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக இத் தீர்மானத்தை ஆதரித்துள்ளார்கள்.

விரைவில் இம்மக்களுக்கான அவசர உதவிகளும், அத்தியாவசியப் பொருட்களும் போய்ச் சேருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2008

சிங்கையில் அதிக குழந்தைகளைப் பெற்றெடுங்கள் !

சிங்கை வாலிபப் பருவத்தினரை அதிகம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அந் நாட்டுப் பிரதமர் லீ ஹஸியன் லூங் கோரிக்கை விடுத்துள்ளார். சிங்கப்பூர் பெண்ணின் சராசரி இனப்பெருக்க விகிதாசாரம் 1.29 குழந்தைகள் ஆகும், ஆனால் சனத்தொகையின் சமநிலையைப் பேண வேண்டுமாயின் சிங்கப்பூர் பெண்ணின் சராசரி இனப்பெருக்க விகிதாசாரம் 2.1 குழந்தைகள் என்று மாற்றப்பட வேண்டும்.

சிங்கைப் பெண்கள் தொழிலிம் மட்டும் அதிகம் நாட்டம் காட்டாமல் திருமணத்திலும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் சிங்கைப் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சனி, 16 ஆகஸ்ட், 2008

அமிரைத் தமிழர் தலைவராக ஏற்றுக் கொண்ட விடுதலைப்புலிகள் !


விமானக் குண்டு வீச்சில் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட 53 மாணவிகளின் 2 ஆம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் கலந்து சிறப்புரையாற்றினார்.

50 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பயங்கரவாதம் தமிழினப் படுகொலையைத் திட்டமிட்டு நடாத்தி வருகின்றது, அறவழியில் போராடிய தமிழர் தலைவர்கள் இப் பயங்கரவாதத்துக்குப் பலியாகி உள்ளனர், 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்துக்கு எதிராக காலிமுகத் திடலில் அகிம்சை வழியில் போராட்டம் நடத்திய தமிழ் தலைவர்கள், தொண்டர்கள் தாக்கப்பட்டனர் என்றும் திரு.பா.நடேசன் சிறப்புரையில் குறிப்பிட்டிருந்தார்.

1956ஆம் ஆண்டு ஆனி மாதம் 5ஆம்திகதி பதவியேற்ற பிரதமர் பண்டாரநாயக்கா "சிங்களம் மட்டும் மொழி" என்னும் மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போது ஐக்கிய தேசியக் கட்சியும் இம் மசோதாவை ஆதரித்தது.

இம் மசோதாவை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், யோகேஸ்வரன் இன்னோரன்ன 300 பேர் நாடாளுமன்றத்திற்கு முன்பாகவுள்ள காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தனர். அவ்விடத்துக்கு ஊர்வலமாக வந்த பிக்குகள் முன்னணியினர் சத்தியாக்கிரகத்தில் இருந்த தமிழர் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தியதுடன் சிலரைத் தூக்கி அருகில் இருந்த ஏரியில் வீசி தங்களது துவேசத்தை வெளிப்படுத்தினர்.

நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழர்களின் தலைவர்களாக தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் யோகேஸ்வரன் போன்றோரையெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் நினைத்துப் பார்ப்பது ஆரோக்கியமான செய்தியாகவுள்ளது.

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றோர் 1989.ஆடி.13 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளாலே சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, 1956 ஆனி 05 ஆம் திகதி சத்தியாக்கிரகத்தின் போது சிங்களக் காடையர்கள் தாக்குதலுக்கு இலக்கான தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் தலையிலுள்ள காயத்துடனேயே அன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு பிரசன்னமாகி இருந்தார்.

இவர்களை 19 வருடங்களின் பின்னர் தமிழர்களின் தலைவர்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டமையானது வரவேற்கத்தக்கதே!

ஈபிடிபி உறுப்பினரின் கொலை !

கிழக்கிலங்கையின் மட்டு. நாவற்குடா மஞ்சம்தொடுவாய் தொழில் நுட்ப கல்லூரிக்கு அருகாமையில் நேற்று காலை தினமுரசு பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈபிடிபி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான அப்பாஸ் எனப்படும் 28 வயதுடைய ஆறுமுகம் வரதராஜன் துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது கொலை தொடராக பலதரப்பட்ட செய்திகள் வெளிவந்த போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளே இக் கொலையைச் செய்திருப்பதாக ஈபிடிபியினர் அவர்களின் "ஈபிடிபி நியூஸ்" ஊடகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். கிழக்கில் பிள்ளையான் குழுவுக்கும் ஈபிடிபிக்கும் தொடர் முறுகல் நிலை இருப்பதால் அதன் தொடர்ச்சியே இந்தக் கொலையாக இருக்கலாமென "நெருப்பு இணையத்தளம்" உறுதிப்படுத்தப்படாத செய்தியாக குறிப்பிடுள்ளது.

இவை அனைத்தையும் உற்று நோக்கும் போது ஏன் இப்படியான கொலைகள் தொடர்கின்றன, இதற்கு முற்றுப்புள்ளியே இல்லையா?
தமது கட்சி உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத நிலையில் இருக்கும் போது டக்ளஸ் தேவானந்தா தனது அரசியல் இருப்புக்காக உயிரைக் காவு கொள்ளும் அரசியல் வியாபாரம் செய்வத் துணிவது ஏன் என்பது தெரியாமல் உள்ளது.

கிழக்கின் கட்டுப்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்தினதும் பிள்ளையான் குழுவினதும் பொறுப்பில் இருக்கின்றது என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் அல்லது கிழக்கு மாகாண அரசு இக் கொலைதாரியை கைது செய்யாமைக்கான காரணம் என்ன?

இராணுவ சோதனைச் சாவடியில் இருந்து 200 மீற்றர் தூரத்திலே இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால் ஸ்ரீலங்கா படையினருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு குறைவே!

எது எப்படி இருப்பினும், தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்படியான தொடர் கொலைகளினால் எஞ்சப் போவது சுடலைகளும், மண்டையோடுகளுமே!

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008

செஞ்சோலையில் மரிந்த மாணவிகளின் சிரார்த்ததினம்


இரண்டு வருடங்களின் முன்னர் முல்லைத்தீவில் உள்ள வல்லிபுனம் செஞ்சோலை வளாகத்தில் மீது ஸ்ரீலங்காவின் விமானப் படையினரின் 4 விமானங்கள் 16 குண்டுகளை வீசி தாக்குதலை நடாத்தியதில் கொல்லப்பட்ட மாணவிகளின் 2 ஆம் ஆண்டு சிராத்ததினம் நேற்று முல்லைத்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது.

கொல்லப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் இந் நிகழ்வில் ஒன்றாக கலந்து சோகத்தை வெளிப்படுத்திய விதம் எல்லோரினதும் மனதைக் கலங்க வைத்து விட்டது.

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்ற தயாராக இருந்த மாணவிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தகால முதலுதவி பயிற்சிக்கு வருமாறு அழைத்ததுக்கிணங்க, விரும்பியும் விரும்பாமலும் கலந்து கொண்ட மாணவிகளே கொல்லப்பட்டவர்களாவர்.

2008.08.14 ஆம் திகதி அதிகாலை செஞ்சோலை பாசறையில் பயிற்சிக்காகக் காத்திருந்த 53 மாணவிகள் உட்பட 62 பேர் கொல்லப்பட்ட கொடூரம் மனதை உருக்கக் கூடியதாகும்.

செஞ்சோலையில் வாழ்ந்த ஆதரவற்ற குழந்தைகளே இதில் கொல்லப்பட்டதாக முதலில் வந்த தகவல்கள் கூறின, இதனையே தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆமோதித்தனர், மறுநாள் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பத்து நாட்களின் பின் நடக்கவிருக்கும் உயர்தரப் பரீட்சைக்காகக் காத்திருக்கும் மாணவிகள் என்பதும் இவர்களை விடுதலைப் புலிகளே பயிற்சிக்கு வருமாறு அழைத்திருந்தனர் எனும் செய்திகளும் கூடவே கசிந்தன.

யுத்தப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளையே குண்டு வீசி அழித்ததாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்தது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மனித ஜீவன்கள் என்பதை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

புதன், 13 ஆகஸ்ட், 2008

இனச்சுத்திகரிப்பின் நினைவாக நினைவுத் தூபி

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 ஆம் திகதி ஸ்ரீலங்கா படையினராலும், சம்மாந்துறை முஸ்லிம் இனவாதிகளினாலும் 200 பேருக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், இச் செய்தி அரசினால் திட்டமிட்டு ஊடகங்களில் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

விடுதலைப் புலிகளை அழிக்கின்றோம் எனக் காரணம் காட்டி திட்டமிட்டு அம்பாறை மாவட்டத்தில் இனச் சுத்திகரிப்பு ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்பட்டது.

அம்பாறையில் காலம் காலமாக வாழ்ந்த தமிழர்களும், அம்பாறைக்கு அருகில் இருந்த வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, மற்றும் வீரச்சோலை கிராமத்தவர்கள் ஸ்ரீலங்கா படையினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியோர் உடுத்த உடையுடன் அகதிகளாக வீரமுனைக்கு ஓடி வந்து பாடசாலையிலும் ஆலயத்திலும் தங்கினர்.

இங்கு தமிழர்களுக்கான சுத்திகரிப்பை அரங்கேற்ற ஸ்ரீலங்கா படையினரும், சம்மாந்துறை முஸ்லிம் இனவாதிகளும் இணைந்து பாடசாலையிலும் ஆலயத்திலும் தங்கியிருந்த அகதிகளை கண்டபடி கோடரி, வாள் போன்ற கூரிய ஆயுதங்களினால் வெட்டியும், துப்பாக்கிப் பிரயோகமும் செய்து கொலை செய்தனர்.

இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப், திஹாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தயாரட்ண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.திவ்வியநாதன் போன்றோர் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலைவெறித் தாக்குதலுக்குப் பலியான 200 பேருக்கும் மேற்பட்ட குழந்தைகள், தாய்மார்கள்,ஆடவர்கள், பெண்கள் மற்றும் மாணவர்களை நினைவு கூர்ந்து 18 ஆம் சிரார்த்த தினமும், நினைவுத் தூபியும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நினைவுத் தூபியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு. இனியபாரதி திறந்து வைத்தார்.

மீண்டும் இக் கிராமங்களில் இனச்சுத்திகரிப்பின் பேரால் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படாமலும், ஸ்தாபிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமான நினைவுத் தூபி சிதையாமலும் பாதுகாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

கருணா அம்மானிடம் கேளுங்கள் !

ஸ்ரீலங்காவின் ஊடகமான "டெய்லி மிரர்" ஆங்கில பத்திரிகையின் மூலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் வி.முரளிதரனிடம் மக்கள் திறந்த வினாக்களை தொடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வினா தொடுக்க விரும்புவோர்
இச் சுட்டியில் தொடர்பு கொள்ளலாம்.

மனதினுள்ளே கம்பளிப்பூச்சியாய் அரித்துக் கொண்டிருக்கும் பல்லாயிரம் கேள்விகளை, கேணல் கருணாவிடம் கேட்க சந்தற்பம் இல்லையே என்றெல்லாம் சிந்தித்திருப்போருக்கு ஆங்கில ஊடகம் சந்தற்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்மொழியில் இப்படியான ஒரு தளத்தை தமிழ் பத்திரிகைகள் ஆரம்பிக்கவில்லையே எனும் ஆதங்கம் இருந்தாலும் கூட, அண்மையில் அதிரடி.கோம் வினாக்களைக் கேட்டு பதில் தந்திருந்தமை குறிப்பிட வேண்டியதுவே!

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

பிரபாகரனைக் கேலி செய்த கருணா - ஓர் ஆய்வு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய தளபதியும், தற்போதைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான கருணா ஸ்ரீலங்காவின் சிங்களப் பத்திரிகைகளின் ஒன்றான "லக்விம"வுக்கு செவ்வி வழங்கியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிரின் மேல் ஆசையுள்ளவர், சாவுக்குப் பயந்தவரென குறிப்பிட்டதனை எடுத்து நோக்கினால், இந்த உலகில் உயிரின் மேல் ஆசை இல்லாதவர்கள் எவருமிலர், அதற்கு பிரபாகரன் விதிவிலக்கானவரில்லை, ஆனால் அவர் சாவுக்குப் பயந்தவரென குறிப்பிடுவது பொருத்தமானதாக தெரியவில்லை. அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தை முனைப்படையச் செய்வதற்காக பல களங்களைக் கண்டவர், எதிரியை துரத்தித் துரத்திப் போர் புரிந்தவர், இன்றைய அவரது வயதானது வன்முறைப் போராட்ட சிந்தனையில் இருந்து வழுவிக் கொண்டிருக்கின்றது என்பது நிஜம் தான்.

ஆனால் பிரபாகரனைப் பற்றி விமர்சிப்பதற்கு கருணாவுக்கு தகுதி இருக்கின்றதா என்பதனை கவனத்தில் எடுக்க வேண்டும், அத்தோடு கருணாவும் தன்னை சுயவிமர்சனம் செய்து பார்க்க வேண்டும். இன்றைய நிலையில் கருணாவுக்கு உயிரில் ஆசையில்லையா?, சாவுக்குப் பயந்தவரில்லையா? இயக்கத்தவர்களின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளாமல் ஸ்ரீலங்கா படையினரின் பாதுகாப்பை மாத்திரமே நம்பி வாழ்வதன் மர்மம் என்ன? எல்லாவற்றுக்கும் ஒரே பதில் உயிரின் மேலுள்ள ஆசையே ஆகும்.

கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த கடைசி தருணத்தில் பணப் பொதிகளை பிக்கப் வாகனத்தில் ஏற்றும் போது மூலை கிழிந்து அதனுள் இருந்த பணம் வெளியே தெரிந்ததை அவரது வாகன சாரதி கண்டு விட்டார், எனும் காரணத்தினால் அந்த அப்பாவிச் சாரதிக்கு குளிர்பானத்தினுள் விசம் கலந்து குடிக்கக் கொடுத்துக் கொல்லவில்லையா? ஏன்! இச் செய்தி பரவினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமே எனும் பயமே!

இந்திய அமைதி காக்கும் படையினர் ஸ்ரீலங்காவில் தங்கி இருந்த காலத்தில் அவர்களின் எடுபிடிகளாக இருந்த ஈழ விடுதலை இயக்கங்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஏதுமறியாத அப்பாவி இளைஞர்களையும், பாடசாலை மாணவர்களையும் பலோத்காரமாகப் பிடித்து தமிழ் தேசிய இராணுவத்தினை உருவாக்கினார்கள், இந்திய இராணுவமும் அவர்களது எடுபிடி இயக்கங்களும் இந்தியாவுக்குத் திரும்பி ஓடிய போது இந்த தமிழ் தேசிய இராணுவத்தினரை நிர்க்கதியான நிலையில் விட்டுச் சென்றார்கள், கிழக்கில் கருணாவின் தலைமையில் இருந்த தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அவர்களைக் கைது செய்தார்கள், கஞ்சிகுடியாறு காட்டுப் பகுதிக்கு அணி அணியாக கைகள் கட்டப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டவர்கள் அனைவரும் என்னவானார்கள் என்பது அந்தப் பகுதி மக்களுக்கு மாத்திரம் தெரியும், அனைவரும் வரிசையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதுவே உண்மையானது.

அன்று மாற்றுக் கருத்துக் கொண்ட இயக்கத்தினரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய இராணுவம் தேவையற்றதென்றும், அப்பாவி மக்களைக் கடத்திச் சென்று இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு செய்கின்றார்கள் என்றெல்லாம் கூக்குரலிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளும் கருணாவும், இன்று அப்பாவிகளைக் கடத்தி இயக்கத்துக்குச் சேர்த்து ஆயுதப் பயிற்சி செய்வது வேடிக்கையாகத் தெரியவில்லையா?

பல சகோதரக் கொலைகளை நடாத்தி முடித்த கருணா இப்போது எதுவும் தெரியாத அப்பாவி மாதிரி பாசாங்கு செய்வதால் புனிதனாகி விட முடியாது, துரதிஸ்டம் அவரது கட்சியே அவரைத் தூக்கி எறிந்து விட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தாபகர் கருணா இப்போது பிள்ளையானின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சுயமாக எதனையும் செயற்படுத்த முடியாமல் திண்டாடுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது, உயிரின் மேலுள்ள ஆசையே பிரித்தானியாவுக்கு ஓட வைத்தது, ஆனால் அங்கும் நிம்மதியாக இருக்க முடியாமல் சிறைவாசம் அனுபவித்து ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டு ஸ்ரீலங்கா திரும்பி ஸ்ரீலங்கா படைகளின் பாதுகாப்பில் இருந்து கொண்டு மீண்டும் காட்டிக் கொடுப்பையும், தமிழின அழிப்பையும் செய்து வரும் கருணா எப்படி பிரபாகரனை மாத்திரம் குற்றம் சாட்ட முடியும், தயவு செய்து சுய விமர்சனம் செய்து பாருங்கள்.

கருணா கடந்த வாரம் மட்டக்களப்புக்குச் சென்ற போது, அங்கு பொது மக்கள் சந்திப்பு மட்டுப்படுத்தப்பட்டு அதிலும் சுத்திகரிப்பு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது, இந்த சுத்திகரிப்பு எதற்காக ஏன் இவ்வளவு பயம். மக்களுக்குச் சேவை செய்யப் புறப்பட்ட உங்களுக்கு ஏன் பயம், உங்களுக்கும் உயிர் மேல் ஆசை இருக்கின்றது தானே, சாவுக்குப் பயந்து தானே வாழ்கின்றீர்கள்!

லக்விம செய்தியின் தமிழாக்கம்:
பிரபாகரன் உயிரின் மேல் ஆசையுள்ளவர் சாவுக்கு பயந்த கோழை.புலி உறுப்பினர்கள் அரச படையினரிடம் சரணடையவேண்டும்.- கருணா அம்மான் கோரிக்கை


யாராகினும் பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியாது எனக்கூறினால் அது முற்றிலும் தவறானதாகும் அவர் தனது உயிரின் மேல் அபார ஆசை கொண்டவர், சாவுக்கு பயந்த கோழை அதனாலேயே தன்னை சூழ பலரையும் வைத்துக்கொண்டுள்ளார் என தமிழ் மக்கள் விடுதலை முன்னனி தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் ஒருபோதும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை புலிகளால் காப்பாற்றிக்கொள்ள முடியாது எனவும் பிரபாகரன் இந்தோனேசியா அல்லது காம்போடியாவிற்கு பாய்ந்து செல்ல ஏற்பாடுகள் நடப்பதாக தனக்கு செய்திகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது இறுதி போராட்டத்தின் போது புலிகள் இரசாயன ஆயுதங்களை பாவிக்கக் கூடும் எனவும், தான் புலிகளோடு இருந்தபோது இராசயன ஆயுதங்கள் பல இருந்ததாகவும் இதுவரை புலிகள் அவற்றைப் பயன்படுத்தவில்லை எனவும் லக்பிம ஊடகவிலயலாளரை சந்தித்து பேசிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


புலிகளின் இரண்டாம், மூன்றாம் நிலை சிறந்த தலைவர்களை இழந்துள்ளமையால் அரசின் தொடர் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் வடக்கில் பல சமர்களில் தோல்விகண்டு வருகிறது எனவும் இவர்கள் படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

பித்துபிடித்துப் போயுள்ள பிரபாகரனின் அறிவுரைகளை கேளாமல் அரச படையினரிடம் சரணடைந்து விடுமாறு புலி உறுப்பினர்களை தான் கேட்டுக்கொள்வதாக கருணா கூறியுள்ளார்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெற்ற முதல் பத்து நாடுகள்


நன்றி வீரகேசரி

86 மனைவியருடனும் 170 குழந்தைகளுடனும் வாழும் முஸ்லிம் மத போதகர் !

"நைஜீரியாவைச் சேர்ந்த முன்னாள் முஸ்லிம் மதபோதகரான 84 வயதுடைய முகமட் பெல்லோ அபூபக்கர் 86 பெண்களைத் திருமணம் செய்து 170க்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஒருவனுக்கு 10 மனைவிகள் இருந்தாலே அவன் அவர்களை சமாளிக்க முடியாமல் மரணமடைந்து விடுவான். ஆனால் எனக்கு அல்லாவின் துணையின் மூலமே, எனது 86 மனைவிகளையும் கட்டுப்படுத்துவது சாத்தியமானது, நான் எந்தப் பெண்ணையும் நாடிச் செல்லவில்லை. அவர்களாகவே என்னைத் தேடி வந்தனர்" என உபதேசம் செய்கின்றார் முகமட் பெல்லோ.

நீடூழி வாழ்க முகமட் பெல்லோ.

ஊடகவியலாளர் சிவராமின் பிறந்தநாள் !

2005 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா தலைநகரில் வைத்துக் ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சிவராம் அவர்களின் 49 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.

தமிழ் மக்கள் மீதான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் இளைஞர்களில் சிவராமும் ஒருவர், காலத்தின் கோலத்தால் போராட புறப்பட்ட ஈழ விடுதலை இயக்கங்களுக்குள்ளேயே சகோதரப் படுகொலைக் கலாசாரம் துளிர் விடத் தொடங்கியதும், ஈழமெனும் இலட்சியப் போராட்டம் சிதைவுற்றுவிட்டது என்பதை உணர்ந்த சிவராம் ஜனநாயக வழியான போராட்டத்துக்கு ஆதரவு காட்டியதுடன் பத்திரிகையூடாக தமிழ் மக்களின் இன்னல்களை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்ட அரும்பாடுபட்டார்.

சிவராமின் பல கட்டுரைகள் உரத்துப் பேசப்பட்ட சந்தற்பங்கள் ஏராளம், அவரின் கட்டுரைகள் மக்களிடையே ஆட்சிமை செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆயுததாரிகள் கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்தனர்.

பாராளுமன்றமுள்ள பத்தரமுல்ல பகுதியில் கொலை செய்து வீசப்பட்ட தமிழ் மக்களின் குரலாக ஒலித்த தேசிய ஊடகவியலாளன் சிவராமின் குரல் மறக்கக் கூடிய ஒன்றல்ல.


03.10.2004 வீரகேசரி வாரவெளியீட்டுக்காக சிவராம் எழுதிய கட்டுரை :
http://epaper.virakesari.lk/Default.aspx?selpg=655&selDt=08/10/2008&BMode=100

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2008

ஒலிம்பிக் போட்டியில் கிடைத்த பதக்க விபரம்

ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவின் பாரம் தூக்கும் போட்டியில் சீனா வீராங்கனையான சென் சியக்ஸியா 212 கிலோ நிறை தூக்கி தங்கப் பதக்கம் பெற்று ஒலிம்பிக் சாதனை ஏற்படுத்தியுள்ளார்.



துருக்கி வீராங்கனை சிபெல் ஒஸ்கான் 199 கிலோ நிறை தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், சீன தாய்பேயைச் சேர்ந்த வீராங்கனை சென் வீ லிங் 196 கிலோ நிறை தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் பெற்று போட்டியைச் சிறப்பித்தார்கள்.



...



நேற்றைய பதக்க விபரங்கள்:

நாடு-----------தங்கம்--------------வெள்ளி-----------வெண்கலம்--

சீனா-------------2--------------------0-------------------0------
செக்.குடியரசு---1--------------------0-------------------0------
உருஷ்யா--------0---------------------1-------------------0------
தென்கொரியா---0--------------------1-------------------0------
துருக்கி-----------0--------------------1-------------------0------
தாய்பே-----------0--------------------0-------------------1------
குரோஷியா-------0--------------------0-------------------1------
வடகொரியா------0--------------------0-------------------1------
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----