வியாழன், 31 மே, 2007

அமெரிக்கா வரலாறு காணாத அழிவுகளைக் காண நேரிடும்

"திருந்த மாட்டீர்கள், இது பேச்சுவார்த்தைக்கான அழைப்பல்ல, குழந்தைகளைக் கொல்லும் போர்க் குற்றவாளிகளான உங்களைப் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த நாம் தயாரில்லை,அனைத்து இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் உங்கள் அனைத்துப் படையினரும் வாபஸ் பெற வேண்டும், இதன் பிற்பாடும் இஸ்லாமிய மண்ணில் ஒரு அமெரிக்க படை உறுப்பினரோ அல்லது உளவாளியோ தொடர்ந்து இருப்பாராயின் உங்களுக்கும் உங்களது மக்களுக்கும் எதிராக நாம் கடும் நடவடிக்கை எடுப்போம்".

நாம் எடுக்கவிருக்கும் தாக்குதலானது 2001 செப்டம்பர் 11 ஆம் திகதி அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலை விடவும் மோசமானதாக அமையும்.


அல்-கைதாவின் கோரிக்கைகளை ஏற்று முஸ்லிம் நாடுகளை கட்டுப்படுத்த எம்மை அனுமதிக்காவிடின் விழைவு மோசமாகுமென அமெரிக்க இஸ்லாமிய போராளிக் குழுவொன்று அறிவித்துள்ளது.

கலிபோர்னியாவில் பிறந்து இஸ்லாமியராக மாறிய ஆதம் கடாஹ்ன் அனுப்பிய வீடியோக் காட்சியில் நேரடியாகத் தோன்றியே மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கிரிகெட் ஒரு நாள் தரவரிசைப் பட்டியல்

உலகக் கிண்ண கிரிகெட் தொடரில் முதலாமிடத்தை அவுஸ்திரேலியா அணி பெற்றதனால் அவுஸ்திரேலியா முதலாமிடத்திலும், இரண்டாமிடத்தை இலங்கை அணியும், மூன்றாமிடத்தை தென்னாபிரிக்கா அணி பெற்றதனால் தென்னாபிரிக்கா அணி மூன்றாமிடத்திலும் சர்வதேச ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

சர்வதேச கிரிக்கெட்சபை வெளியிட்டுள்ள புள்ளிகளுடனான தரவரிசைப் பட்டியல்:
1. அவுஸ்திரேலியா - 99,
2. இலங்கை - 92
3. தென்னாபிரிக்கா - 81
4. நியூஸிலாந்து - 73
5. இந்தியா - 65
6. இங்கிலாந்து - 59
7. பாகிஸ்தான் - 45
8. பங்களாதேஷ் - 42
9. மேற்கிந்தியத் தீவுகள் - 40
10. கென்யா - 14

துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியல்:
1. மத்யூ ஹைடன் - 190
2. ரிக்கிபொண்டிங் - 183
3. ஜக்ஸ் கலிஸ் - 177
4. கெவின் பீற்றர்சன் - 173
5. அடம் கில்கிறிஸ்ட் - 170
6. மைக்கல் கிளார்க் - 166
7. மஹேல ஜயவர்தன - 163
8. சிவநாராயண் சந்தர்போல் - 160
9. ஸ்கொட் ஸ்டைரிஸ் - 158
10.சனத் ஜயசூரிய - 155

பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல்:
1. முத்தையா முரளிதரன் - 196
2. நதன் பிராக்கென் - 186
3. ஷேன்பொண்ட் - 180
4. ஷோன் ரையிட் - 176
5. அண்ட்ரூ ஹோல் - 169
6. டேனியல் வெட்டோரி - 164
7. பிராட்ஹொக் - 160
8. லசித்த மலிங்க - 156
9. சகீர் கான் - 153
10.சமிந்த வாஸ் - 150

புதன், 30 மே, 2007

நைஜீரியாவில் புதிய அதிபர் பதவியேற்பு

நைஜீரியாவின் புதிய அதிபராக உமாரு யார் அடுவா நேற்று (29.05.2007) நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் தங்களின் கலாசார உடையான வெள்ளை நிற நீள அங்கி அணிந்து பதவி ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீலங்காவில் தமிழர்கள் எனும் ஒரு இனம் இல்லை - ஜாதிக ஹெல உறுமய

தமிழ் மக்கள் இந்த நாட்டின் தேசிய இனமல்ல, தமிழர்கள் என்பது ஒரு மக்கள் பிரிவினர் மட்டுமேயாகும். சுயநிர்ணய உரிமையையும் தாயகக் கோட்பாட்டையும் கோருவதற்கு தமிழர்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை, ஸ்ரீலங்காவில் சிங்கள மக்களுக்கே அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு காணும் முகமாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு வழங்குவதற்காக ஜாதிக ஹெல உறுமய தீர்வு யோசனையை தயாரித்துள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வுயோசனையை வெளியிடும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியாளர் மாநாடு நேற்று நுகேகொடையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது, ஹெலஉறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இனப்பிரச்சனை தீர்வு யோசனை சார்பாக கருத்துத் தெரிவித்தார்.

இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு தனிநாடொன்றை கோரும் வரலாற்று உரிமை இருக்கின்றது. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அவ்வாறான உரிமை இல்லை. வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை தமிழ் மக்கள் சான்றுகளுடன் நிரூபித்தால் ஈழத்தை அனுமதிக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் அதற்கு முன்னர் புலிகள் தோற்கடிக்கப்படவேண்டும் என்றும் ஹெலஉறுமயவின் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சனை இல்லையென்று இனவாதிகளும், மதவாதிகளும் கட்டியம் கூறுவது சிங்கள மக்களை இன்னும் அழிவுப் பாதைக்கு நகர்த்தும் நடவடிக்கையாகும்.
வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பது இன்னும் ஜாதிக ஹெல உறுமயவுக்கு தெரியாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகமென்று சான்றுடன் நிரூபித்தால் ஈழத்தை தாங்களும் அனுமதிப்போமென்று ஹெல உறுமய கூறுவதில் ஒரு விடயம் தொக்கி நிற்கின்றது, அதாவது விரைவில் மலரவிருக்கும் ஈழத்தை ஹெல உறுமய அங்கீகரிக்கும் என்பதாகும்.

செவ்வாய், 29 மே, 2007

தென்னிலங்கையின் தீர்வு யோசனை ?

தென்னிலங்கை உறுதியான தீர்வை முன்வைக்கும் வரை புலிகளிடம் எதனையும் கோரமுடியாது - வாசுதேவ நாணயக்கார

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் படும் இன்னல்களுக்கு தீர்வு காணும் வகையில் சர்வகட்சிகளும் தமது தீர்வு யோசனைகளை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பித்து வருகின்றன, இந்த நிலையில் பொருத்தமான அரசியல் தீர்வை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு விரைவில் முன் வைக்கவுள்ளது.

இத் தீர்வு யோசனைபற்றி ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான வாசுதேவ நாணயக்கார கருத்துத் தெரிவிக்கையில், அனைத்து இன மக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கின்ற தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொதுவான இறுதித் தீர்வு யோசனையை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தென்னிலங்கையினால் உறுதியான தீர்வு யோசனை முன்வைக்கப்படும் வரை எவ்விதமான கோரிக்கையையும் விடுதலைப் புலிகளிடம் விடுக்க முடியாது.

நாட்டில் கடத்தல்கள், காணாமற் போதல், படுகொலைகள் மற்றும் கொள்ளை போன்றன தற்போது அதிகரித்துள்ளன, மக்கள் பயத்தில் வாழுகின்றனர், மனித உரிமை மீறல்களைத் தடுக்க அரசாங்கம் ஆக்கபூர்வ முயற்சி எடுத்துள்ளதாக கூறுகின்றது, ஆனால் இதில் இன்னும் கூடிய கவனம் செலுத்த வேண்டிய தேவை மக்களைப் பாதுகாக்கின்ற அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

இனப்பிரச்சனை தீர்வு செயற்பாட்டில் தற்போது புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ளது, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் அதிகமானவை தங்களின் தீர்வு யோசனைகளை சமர்ப்பித்துள்ளன, இன்னும் சில கட்சிகள் தீர்வு யோசனைகளை இன்னும் முன்வைக்கவில்லை, அவை சமர்ப்பித்ததும் விரைவில் தீர்வு யோசனையைக் கொண்ட கூட்டத்தை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு நடாத்த முடியுமென அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

திங்கள், 28 மே, 2007

ஹொட் நியூஸ் - இரத்மலானையில் குண்டுத் தாக்குதல்

ஸ்ரீலங்கா இரத்மலானையை அண்டிய பகுதியில் இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து தற்போது பாரிய குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பெல்லக்கடச் சந்திக்கு அருகில் உள்ள துசிதா புத்தகக் கடைக்கு அருகில் சென்று கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் பயணித்த பேரூந்து மீதே குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதில் இருந்த 4 விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதாகவும், 15 விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாகவும் அத்துடன் அவ்வண்டியில் இருந்த ஆறு பொது மக்களும் காயமடைந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

ஊடகவியலாளர்கள் இப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படாததால் மேலதிக விபரங்கள் பெறப்படவில்லை.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் தீர்வு யோசனைகள்

சர்வகட்சிக் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்(ரி.எம்.வி.பி) மும்மொழிகளில் அமைந்த தமது கட்சியின் அரசியல் தீர்வு யோசனைகளை இன்று சமர்ப்பித்துள்ளனர்.

இலக்கம் 408, காலிவீதி, கொழும்பு-03 இல் அமைந்துள்ள சர்வகட்சிக்குழுவின் தலைவர் காரியாலயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சிச் செயலாளர் திருமதி.எஸ்.பத்மினி, கட்சியின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் திரு.க.மகேஷ் இருவரும் சேர்ந்து இன்று 11.30 மணியளவில் சமர்ப்பித்துள்ளனர்.

..

..

..

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட (ரி.எம்.வி.பி) அரசியல் தீர்வு யோசனைகள் பின்வருமாறு:

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி)

இனப்பிரச்சினை தொடர்பில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நிரந்தரமான தீர்வொன்றினைக் காண்பதற்கான விதந்துரைப்புக்கள்.

1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து அன்றிலிருந்து எழுகின்ற அரசியல் யதார்த்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கென மேலதிக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் ஊடாக அரசியல் அமைப்பிற்கு கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்தின் மூலம் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டவாறான மாகாண சபைகள் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தினை ரி.எம்.வி.பி சிபாரிசு செய்கின்றது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மத்திய அரசாங்கத்திடமிருந்து மாகாண சபைகளுக்கான அரசியல் அதிகாரப் பகிர்வானது இலங்கையில் நிலவுகின்ற தற்போதைய பிரச்சினை தொடர்பில் தீர்வுத்திட்டமொன்றினை வகுப்பதற்கான முக்கியமான காரணியாகவும் அடிப்படையாகவும் அமைதல் வேண்டும் என ரி.எம்.வி.பி உறுதியாக நம்புகின்றது.

அறிமுகவுரை

மூன்று தசாப்தமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சிவில் யுத்தமும் அதன் விளைவான முட்டாள் தனமானதும் கொடூரமானதுமான வன்முறை, இன்றுவரை எண்பதாயிரம் பெறுமதியான உயிர்களை கொன்றுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்களை பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றி இருப்பதுடன் அதே தொகையான மக்களை உள்ளக இடம்பெயர்விற்குள்ளாக்கியிருக்கின்றது. இதன் விளைவாக எமது நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி, ஸ்திரத்தன்மை மற்றும் சட்டம் என்பன கடுமையான பாதகமான விளைவுகளுக்கு உள்ளாகி இருப்பதுடன் இவ்விளைவுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றன. சிறுபான்மை மக்களின் விN~டமாக தமிழர்களினதும் தமிழ் பேசும் ஏனைய மக்களினதும் பிரச்சினைகள் தொடர்பில் நிரந்தரமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வொன்றினைக் காண்பதற்கான எமது இயலாமையானது எமது நாட்டை ஆட்டிப்படைக்கும் பிரச்சினைகளுக்கான அடிப்படையான ஓரே மூலகாரணமாக அமைகின்றது.

வரலாற்று ரீதியில் உற்றுநோக்கும்போது சில பல்லின, பல்தேசிய பல்மத மற்றும் பல்கலாசார நாடுகளில் சிறுபான்மையினர் எண்ணிக்கை அடிப்படையில் பிரதான பெரும்பான்மையினரின் அடக்கு முறைக்குள்ளாக்கப்படும் போது அது சிறுபான்மை மக்களின் எதிர்ப்பினை தோற்றுவிப்பதுடன் அவ்வெதிர்ப்பு கவனியாதுவிடப்படுமிடத்து அது வன்முறைசார் கிளர்ச்சிகளைத் தோற்றுவிக்கின்றது. சிறுபான்மை உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு, சட்டத்தில் சமத்துவம் மற்றும் அவர்களது கௌரவம் பாதுகாக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் அதே பல்லினத்தன்மை காணப்படும் சில நாடுகளில் தேசிய ஸ்திரத்தன்மை, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்கள் வீழ்ச்சியடையாது வளர்ச்சியடைந்து வருகின்றன. இன்று உலகத்தில் காணப்படும் மிகவும் முக்கியமான நாடுகள் இரண்டாவது வகையான நாடுகள் தொடர்பிலான உதாரணங்களாகும்.

ஓப்பீட்டளவில் ஒரு சிறிய நாடான நவீன இலங்கை, வரலாற்றிலும் கலாசாரத்திலும் வளமடைந்துள்ள போதிலும் துரதி~;டவசமாக அதற்கு அங்கு வாழும் பல்லின மக்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் மற்றும் ஏனைய இனத்தவர்களை ஒருமித்தவர்களாக ஒன்றிணைக்க முடியாமல் போயிருப்பதுடன் ஆறு தசாப்தங்களுக்கும் மேலதிகமாக தேசிய பிரிவு எனும் விதைகளை விதைத்திருக்கின்றது. பிரபலமான பௌத்த மதம் கற்பிக்கின்ற சகிப்புத்தன்மை, கருணை மற்றும் அனுதாபம் போன்ற நற்குணங்களைக் கொண்ட உதாரணபுருசராக விளங்குவதற்குப் பதிலாக இலங்கை இன்று உலகநாடுகளால் காட்டுமிராண்டி மற்றும் மிகவும் வன்முறையான நாடுகளின் பட்டியலுடன் இனங்காணப்பட வேண்டியுள்ளது.

ஆறு தசாப்பதங்களுக்கு முன்னர் காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற இலங்கை, விN~டமாக நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சுதந்திரத்தின் பலனை சமமான அடிப்படையில் அனுபவிப்பதற்கான வழிகளை செய்யத்தவறியுள்ளது. காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முன்னனியிலிருந்து போராடிய தமிழர்களுக்கு புதிதாக சுதந்திரம் அடைந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் சமாதானமும், மரியாதையும், கௌரவமும், பாதுகாப்பும் மற்றும் சமஉரிமையுடன் வாழ்வதற்கு சுதந்திரம் தேவைப்பட்டது. இருப்பினும் யதார்தம் அவ்வாறு இருக்கவில்லை. சுதந்திர இலங்கைக்குள் இடம்பெற்ற அரசியல் செயற்பாடானது, சிறுபான்மை மக்களின் விN~டமாக தமிழ் மக்களின்; உரிமைகள், பாதுகாப்பு மற்றும் மரியாதை போன்றன பரிதாபகரமாக நசுக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை மக்களை ஓரங்கட்டும் நடவடிக்கையினை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இலங்கைக்கான சுதந்திரத்தின் விடிவானது உயிரோட்டத்துடன்கூடிய தமிழ் மக்களை ஓரங்கட்டி வலுவிழக்கச்செய்யும் முற்போக்கு குணவியல்புகளினால் அவர்களின் வரலாற்று ஏட்டில் இருள்சூழ்ந்த அத்தியாயம் ஒன்றினை தோற்றுவித்தது.

தமிழ் மக்கள் நிரந்தர தடைகளின் கீழ், அவர்களின் எண்ணிக்கை, மொழி, கலாசாரம், வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையினை நிர்ணயிக்கும் அவர்கள் வாழும் பிரதேசங்களின் அடிப்படையில் தனிப்பட்ட மக்கள் என்ற வகையில்; அழிவின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களாக ஆகியுள்ளார்கள். சுதந்திர இலங்கைக்குள் காணப்படும் பெரும்பான்மைசார் மற்றும் வெகுவாக மையப்படுத்தப்பட்ட ஆட்சிமுறைமை சிறுபான்மை மக்களின் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றத்தவறியமையின் காரணமான அது அடக்குமுறையினையும் ஒடுக்குமுறையினையும் தோற்றுவித்துள்ளது. இவ்வாக்கிரமிப்பின் மிகமோசமான பலனை தமிழ் மக்கள் அனுபவித்திருக்கின்றார்கள்.

நாட்டில் தமிழர்கள் ஓரங்கட்டப்படுவதனை தடுப்பதற்கு மாறி மாறி வந்த இலங்கை அரசாங்கங்களுடன் தமிழ் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தது. பின்னர் அந்நடவடிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. அவர்களது முயற்சிகள் குறைத்து மதிப்பிடப்பட்டதுடன் அம்முயற்சிகள் பல அரசாங்கங்களினது ஜனநாயகமற்ற அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டன. படிப்படியாக வளர்ந்துகொண்டு வந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகக் கலந்துரையாடப்பட்ட 1956 ஆம் ஆண்டின் பண்டா-செல்வா ஒப்பந்தமும் 1965 ஆம் ஆண்டின் டட்லி–செல்வா ஒப்பந்தமும் அவ்வொப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட மறுவினாடியே இலங்கை அரசாங்கங்களினால் தட்டிக்;கழிக்கப்பட்டன.

மாறி மாறிவந்த சிங்கள ஆதிக்க இலங்கை அரசாங்கங்கள் பெரும்பான்மையினரான சிங்கள மக்களின் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றுவதில் அதிக அக்கறை காட்டியதுடன் சிறுபான்மையினரின் விN~டமாக தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புக்கள் தொடர்பில் அக்கறை காட்டுவதற்கு அவர்களுக்கு ஞானமோ தூரநோக்கு சிந்தனையோ இருக்கவில்லை. இக்குறுகிய எண்ணத்துடனான, ஆதிக்க மற்றும் குறுகிய அணுகுமுறை ஆட்சியானது மிகவும் மோசமான சிவில் யுத்தத்திற்கு வழிகோரியதுடன் இலங்கை ஓரே தனிநாடாகவிருப்பதற்கும் சவாலாக அமைந்தது.

இலங்கையில் காணப்படும் அரசியல் முறைமையினால் எந்தவொரு நாகரீகமான வழிமுறைக்குமான உபாயங்கள் மறுக்கப்பட்டமையினால் தமது சொந்த உரிமைகளுக்காக தமிழ் மக்கள் போராடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஏகாதிபத்திய சிங்கள பெரும்பான்மையினரின் ஆட்சியினைக் கவிழ்ப்பதன் மூலம் மட்டுமே தமிழர்கள் முழுப் பிரஜா உரிமை, கௌரவம் மற்றும் மரியாதையுடன் வாழமுடியும் எனும் யதார்த்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 1970 களின் இறுதியாகும்போது சிங்கள ஆட்சியிலிருந்தான விடுதலையும் சுயாட்சியுமே தமது உரிமைகள் என தமிழர்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.

இலங்கை அரசாங்கத்தின் இராணுவப் பலத்தினைக்கொண்டு தமிழ் எதிர்ப்பின் ஜனநாயக மற்றும் சமாதான வெளிப்பாடு அடக்கி ஒடுக்கப்பட்டபோது 1980 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திலிருந்து தமிழ் எதிர்ப்பானது அதிகரிக்கப்பட்ட அளவிலான வன்முறையினை நாடிச்சென்றது. அவ்வெதிர்ப்பினை அடக்கி ஒடுக்குவதற்காக இலங்கை அரசாங்கம் இராணுவம், பொலீஸ் மற்றும் குண்டர்களைப் பயன்படுத்தி பாரிய அளவிலான வன்முறையினைப் பயன்படுத்தியது. இலங்கை அரசாங்கத்தின் இச்சிறுபிள்ளைத்தனமானதும் விவேகமற்றதுமான செயற்பாடானது அரசாங்க மற்றும் தமிழ் வன்முறைச் சுழற்சியினை அதிகரிக்கச்செய்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தினை மேலும் இராணுவரீதியில் பலப்படுத்தியது.

தமிழர் தனித்துவத்தினையும் தமிழர் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் மட்டும் ஆரம்பித்த ஆயுதப்போராட்டமானது சுயநல மற்றும் செயல்நோக்கற்ற குழுவொன்றினால் படிப்படியாக மாற்றப்பட்டதுடன் அக்குழு வன்முறையினை தனது அடிப்படைத்தத்துவமாக்கிக் கொண்டிருப்பதுடன் போராட்டத்தினை பலவீனப்படுத்தி மதிப்பிழக்கச் செய்துள்ளது. தமிழ் மக்கள் மீது தமக்கு பாரிய அக்கறை இருப்பதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தூரநோக்கற்ற சிந்தனையானது போராட்டத்தின் பின்னால் காணப்படும் முக்கியமான பலமாகக்காணப்படுவதனால் தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள். தமிழ்களின் தமது உரிமைக்கான புனிதப்போராட்டமானது, சகல விழுமிய எல்லைகளும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளினால் தாண்டிச்செல்லப்பட்டு பயங்கரவாதமாக மாறியிருப்பதுடன் அது தமிழ் மக்களுக்கே பாரிய க~;டங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் போராட்டத்;தில் விடுதலைப் புலிகளின் தலைமையின் முக்கியத்துவத்தினை உணர்த்தியிருக்கின்ற வன்முறைத்தத்துவத்தின் மூலம் தமிழ் மக்களின் தனித்துவம் தொடர்பில் பங்களிப்புச்செய்த அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கின்றது.

தற்காலிக இராணுவ அடைவுகள்; நிரந்தர அரசியல் வெற்றிகள் என கௌரவிக்கப்ட்டன. அதர்ம பயங்கரவாத நடவடிக்கைகள் தமிழ் உரிமைகளை வென்றுதரும் போராட்டம் எனக் காட்டப்பட்டன. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினதும் அதன் தலைவரினதும் அணுகுமுறையானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை மேலும் வலுவடையச்செய்துள்ளதுடன் தமிழர்களை இலங்கைக்குள் மேலும் ஒதுக்கப்பட்ட இனமாக்குவதற்கு துணைபுரிந்துள்ளது.

இலங்கையின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு அத்தியாவசியமான ஸ்திரத்தன்மையினையும் சமாதானத்தினையும் ஏற்படுத்தல் தொடர்பில் மோசமடைந்து கொண்டுசெல்லும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றிற்கான அவசர முயற்றியுடன் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தினை தோற்கடிக்கும் செயற்பாடானது இணைக்கப்படுதல் வேண்டும். இவ்விருமுனை அணுகுமுறையானது அத்தியாவசியமானதும் தவிர்க்கமுடியாததுமாகும். யுத்தத்தினால் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை தோல்வியடையச் செய்வதன்மூலம் தற்காலிக ஓய்வொன்று கிடைக்குமே தவிர ஒரு நிரந்தரத் தீர்வொன்றினை வழங்காது. தமிழர்களுக்கும் மற்றும் ஏனைய சிறுபான்மையினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்று இலங்கை அரசாங்கத்தினால் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இது புலிப் பயங்கரவாதிகளின் அரசியல் தோல்வியினையும் உறுதிப்படுத்தும்.

நாட்டின் ஜனநாயக அரசியல் வாதிகளுக்கிடையே நோக்கடிப்படையிலானதும் நேர்மையானதுமான கலந்துரையாடல்களை நடாத்துவதன் ஊடாக தமி;ழ் மக்களும் ஏனைய சிறுபான்மையினரும் முகம்கொடுக்கும் பிரச்சினைகளின் அடிப்படைக்காரணங்கள் இனங்காணப்படுதல் வேண்டும். சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் அமைப்புக்களினால் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத்திலிருந்து வேறுபடுத்தி நோக்கப்படுதல் வேண்டும். தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டு அவர்களின் உண்மையான பிரச்சினைகள் தீர்க்கப்படாதவிடத்து அதன் விளைவுகள் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மற்றும் அதனைத் தொடர்ந்துவரும் அமைப்புக்கள் போன்ற அமைப்புக்களுக்கு சாதகமாக அமைந்துவிடும். தற்போது அரசியல் மேடையில் இருக்கும் முக்கிய பங்கினை வகிக்கும் சில அரசியல் அங்கத்தவர்கள் அவ்வாறான அழிவுகள் தொடர்பில் வருந்துவதற்கு வாழலாம். இலங்கை அரசாங்கமும் சிங்களவர்களும் எமது வரலாற்றின் மிகவும் பாரதூரமான சந்தர்ப்பத்தில் அத்தவறு தொடர்பில் குறைகூறப்படுவார்கள்.

சிங்கள மக்களும், அவர்களுடைய அரசியல் தலைவர்களும் திறந்த மனதுடன் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வொன்றினைக் காண்பதற்காக அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். இது புத்த பெருமானின் இலங்கை வருகையை போலவே முக்கியத்துவம் பெறுவதோடு தீயனவற்றை தோழ்வியுறச் செய்து என்றுமே அகிம்சையினை போதிக்கக் கூடியதாக இருப்பதுடன், இலங்கையில் சமூக அரசியல் வாழ்க்கையினை உண்மையாக ஏற்படுத்துவது தொடர்பில் பௌத்த மதத்தின் கொள்கைகளை அங்கீகரிக்கும்.

எமது தேசிய பிரச்சினை தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறையினை நாம் வரவேற்கின்றோம். முன்னைய அரசாங்கங்களைப் போலல்லாது ‘தமிழ் பிரச்சினை’ என அழைக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தற்போதைய அரசாங்கம் தெளிவானதும், தெளிவுடன் கூடியதுமான செயல்நோக்கொன்றைக் கொண்ட அணுகுமுறையொன்றினை நாடியிருக்கின்றது. இவ்வரசாங்கம் அரசியல் தீர்வுகளைக் காண்பதற்காக சர்வகட்சி மாநாட்டு செயன்முறையொன்றினை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் அதேவேளை எமது நாட்டின் இறைமையினையும், ஒருமைப்பாட்டினையும் உறுதிசெய்வதற்காக பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதற்கான தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாங்கள் சுமார் 30 வருடங்களாக தமிழ் ஆயுதப் போராட்டத்தின் முன்னனியிலிருந்தோம். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் யுத்த நடவடிக்கைகளைப் போன்று நாங்கள் மேற்கொண்டிருக்கின்ற ஆயுதப் போராட்டத்தினால் மட்டும் அரசாங்கம் எமது மக்களின் பிரச்சினையை தீர்க்க மாட்டாது என நாங்கள் புரிந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் ஆயுதப் போராட்டத்திலிருந்து விலகி எமது மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் அவற்றிற்கு தீர்வு காணும் பொருட்டு ஐனநாயக வழியில் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானித்திருக்கிறோம். இன்நோக்கில் நாம் எமது விதந்துரைப்புக்களை சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கின்றோம்.

விதந்துரைப்புக்கள் :

மத்திய அரசாங்கத்திலிருந்து ஆட்சியின் ஏனைய பிரிவுகளுக்கு அரசியல், நிருவாக மற்றும் நிதி அதிகாரங்களை வெகுவாகப் பகிர்ந்தளிப்பதன் மூலம் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் ‘தமிழ் பிரச்சினை’ என்றழைக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்பதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு நம்பிக்கை இருக்கிறது. சர்வகட்சி மாநாட்டின் போது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படை பிரச்சினைகளுக்கு எமது விதந்துரைப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

1. ‘தமிழ் பிரச்சினை’ என்றழைக்கப்படும் பிரச்சினைக்கான மூல காரணங்கள் இனங்காணப்பட்டு வரலாற்று யதார்த்தங்களைக் கருத்திற் கொண்டு அப்பிரச்சினைகள் தொடர்பில் பொருத்தமான தீர்வுகளைக் காணுதல் வேண்டும். தீர்வுகளைக் காணும் போது தமிழ் தனி நபர்களுக்கும், அரசியலமைப்புக்களுக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்று தொடர்பில் ஆராயப்பட வேண்டியதுடன் அவர்களது கருத்துக்களும் கவனத்திற் கொள்ளப்படுதல் வேண்டும். சிங்கள மக்களும் அவர்களது அரசியல் வாதிகளும் தமிழ் மக்கள் முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்காக திறந்த மனதுடனும், சிறந்த ஞானத்துடனும் முன்வர வேண்டும். அத்துடன் அவர்களுடன் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளவும் வேண்டும். 2. தமிழர்களுக்கும் ஏனைய சிறு பான்மையினருக்கும் பொருத்தமான வகையிலும், போதுமான அளவிலும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான புதிய அரசியல் அமைப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். இந்நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு தேவையான (தெற்கு) சிங்கள மக்களின் இணக்கப்பாட்டினை அரசாங்கம் நாடவேண்டும். இதனை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் தெற்கில் வாழும் குறுகிய மனமுடைய சுயநல மற்றும் மிதவாதிகளாகிய ஒரு சிறு தொகையினரின் எதிர்ப்பினை வெற்றி கொள்வதற்கான ஞானமும் பலமும் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். இலங்கையின் சிறந்த நலன் கருதி சகல அரசியல் கட்சிகளும் தமது குறுகிய எண்ணத்தினையும், குறுகிய அக்கறைகளையும் கைவிட்டு நடந்து கொண்டிருக்கும் யுத்தத்திற்கு நிரந்தர தீர்வொன்றினைக் காண்பதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது மிகவும் முக்கியமானதாகும். 3. இத் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகளைக் காண்பதற்காக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முக்கியமாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினை சமாதானப்படுத்தும் முயற்சிகளாக இருந்ததுடன் அதன் தலைவரின் அதிகாரத்தினை பலப்படுத்தும் முயற்சிகளாக அமைந்ததனால் அம்முயற்சிகள் தோழ்வியடைந்தன. ஆகவே தமிழ் மக்களினதும், ஏனைய சிறுபான்மையினரதும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய தீர்வுகளைக் காண்பது அத்தியாவசியமானதாகும். அவ்வாறான தீர்வொன்றைக் காணும் நடவடிக்கையில் இலங்கையின் சகல சமூகங்களும் உயிரோட்டத்துடன் பங்கு பற்றல் வேண்டும். 4. ஏனைய மொழிகளைப் பேசும் குழுக்களைச் சேர்ந்தவர்களை ஆக்கிரமிப்பதற்கான அக்கறை சிங்கள பிரிவுகளிடம் மட்டும் காணப்படும் ஒரு மனோநிலையல்ல. அது தமிழ் பிரிவுகளிடையேயும் புரையோடிக் காணப்படும் ஒரு மனோநிலையாகும். சிங்களவர்களும் தமிழர்களும் அவ்வாறான குழுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும். அவ்வாறான மக்கள் மற்றும் குழுக்களின் நடவடிக்கைகள் காரணமாக இலங்கையினை பயங்கரவாதம் ஆக்கிரமித்துள்ளது. 5. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதற்காக தேவைப்படுகின்ற தெற்கு சிங்கள மக்களின் ஒற்றுமையானது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளை முன்வைப்பதிலும், வழங்குவதிலும் சாதகமான போக்காக மாற்றப்படுதல் வேண்டும். இலங்கையின் பயங்கரவாதத்திற்கு நிரந்தரமான தீர்வொன்றினைக் மேற்கொள்வதற்கு இவ்விருமுனை அனுகுமுறையால் மட்டுமே முடியுமென்பது தொடர்பில் சகல மக்களுக்கும் விளழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 6. இராணுவ ரீதியில் பலமிழக்கச் செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மீதான தமது பிடியினை பலாத்காரத்தினூடாகவும், மரண அச்சுறுத்தலினூடாகவும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பதற்கான விருப்பத்தை தற்போது கொண்டிருப்பதில்லை. ‘தமிழ் பிரச்சினை’ தொடர்பில் நியாயமானதும், ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான தீர்வொன்றைக் காண்பதில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தடையாக இருந்தால் தமிழ் மக்கள் உற்பட அனைத்து சமூகங்களும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும். 7. நாட்டு மக்களின் அரசியல் வாழ்க்கையில் இன மற்றும் மதத்தின் பங்களிப்பானது குறைக்கப்பட வேண்டியதுடன் தனி மனிதனுக்கும், மனித உரிமைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும். இலங்கையின் பிரஜா உரிமையானது சகல பிரஜைகளும் அவர்கள் நாட்டில் எப்பகுதியில் வாழ்கின்றார்கள் மற்றும் அவர்களது எண்ணிக்கை போன்ற விடயங்கள் கருத்திற் கொள்ளப்படாது அவர்களுக்கு சம உரிமைகளையும், சம சிறப்புரிமைகளையும் வழங்குதல் வேண்டும். 8. அரசியல் அமைப்பில் தமிழ் ஒரு தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இவ்வரசியல் அமைப்பின் அங்கீகாரமானது இன்னும் நிருவாக யதார்த்தமாகவில்லை. அரசாங்கத்துடனான நடவடிக்கைகளின் போதும் அதன் நிறுவனங்களுடனான நடவடிக்கைகளின் போதும் தமிழ் பேசும் மக்கள் தமிழை உபயோகிக்கக் கூடிய யதார்த்தநிலை உருவாக வேண்டும். 9. திறமை அடிப்படையில் தமிழர்கள் அரசாங்கத்தில் சேவை செய்வதற்காகவும் அதன் பலதரப்பட்ட சேவைகள் தொடர்பிலும் தெரிவு செய்யப்படுதல் வேண்டும். திறமை அடிப்படையில் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கிணங்க அவர்களுடைய சேவைகளுக்காக அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுதலும் வேண்டும். ஒருவர் தமிழன் என்ற அடிப்படையில் அவர் அரசாங்கத்தின் எச்சேவையிலிருந்தும் நீக்கப்படலாகாது. 10. இலங்கையின் எப்பகுதியிலும் சுதந்திரமாகவும் தடையின்றியும் மக்கள் நடமாடுவதற்கான சுதந்திரத்தினை வழங்கும் அதே வேளை வடக்கு கிழக்கில் அரச உதவியுடன் மேற்கொள்ளப்படும் குடியேற்றத்திட்டங்களுக்கு முடிவுகட்டப்படுதல் வேண்டும். 11. அரசியல் அமைப்பின்மீதான மாற்றங்களை தொடர்ந்து வடக்கையும் கிழக்கையும் மீள் கட்டமைப்பு செய்வதற்குத் தேவையான நிதி மற்றும் நிருவாக வளங்களையும் வழங்குவதற்கும் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பில் இழந்த நேரத்தினை ஈடுசெய்வதற்கும் விN~ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 12. அரசியல் அமைப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள விN~ட நீதித்துறைசார் வரம்புகளின் கீழ் அன்றி மாகாண அரசாங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டிய அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தினால் தெளிவாகவும் வரம்புகள் இன்றியும் வரைவிலக்கணப்படுத்தப் படவேண்டும். 13. தத்தமது மாகாணங்களை சுயாதீனமாக அபிவிருத்தி செய்துகொள்வதற்கும் நிருவகிப்பதற்கும் மாகாண அரசாங்கங்களுக்கு இயலுமை இருக்க வேண்டும். ஆனால் இது மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படுதல் வேண்;டும். 14. ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுகள் தொடர்பில் அரசாங்கம் பொது மக்களின் அபிப்பிராயத்தினைத் தூண்டுவதற்கும் நாடுவதற்கும் அக்கறை காட்டாதவிடத்து அது பயங்கரவாதத்திற்கு புத்துயிரினை வழங்கும் என அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். 15. பிரேரிக்கப்படும் ஏதேனும் தீர்வுகள் அரசியல் அமைப்பினால் பாதுகாக்கப்படுதல் வேண்டும். அதனை அடைந்து கொள்வதற்கு பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் ஆதரவு அரசாங்கத்திற்குத் தேவையாகவுள்ளது. அவ்வாறான அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்களை சகல அரசியல் கட்சிகளும் நாட்டின் நலன் கருதி முழுமனதுடன் ஆதரிக்க வேண்டும் என்பது அவசியமானதாகும். 16. ‘தமிழ் பிரச்சினைக்கு’ தீர்வு காண்பதற்குத் தேவையான அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பங்கேற்பதுடன் இங்கு குறித்துரைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு கலந்துரையாடப்பட்டு ஏற்புடைய வகையில் கவனம் செலுத்தப்படுகின்றதாவென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கண்காணிக்கும்.

 வடக்கு கிழக்கிற்கு கையளிக்கப்பட வேண்டிய விசேட அதிகாரங்கள்.

1. கல்வி

கல்வி முறைமைகளையும் நடபடிமுறைகளையும் ஆரம்பமட்டக் கல்வியிருந்து உயர்மட்டக் கல்வி வரைத்திட்டமிடுவதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் அதனை அமுல்படுத்துவதற்கும் பரந்தளவிலான அதிகாரங்கள் கையளிக்கப்படுதல் வேண்டும்.

2. பொருளாதார அபிவிருத்தி

பொருளாதார மேம்பாடு தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படும் பொருளாதார வளங்களின் பயன்பாட்டினை தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களுடனும் முடியுமான மிகச்சிறந்த முறையில் முழுமையான அமுலாக்கல் அதிகாரங்களுடனும்; மேம்படுத்துவதற்கு போதுமான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டும்.

பின்வரும் விடயங்கள் தொடர்பில் அதிகாரங்கள் கையளிக்கப்படவேண்டும்

அ. விவசாயம், மிருகவளர்ப்பு, மீன்பிடி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுளாத்துறை போன்றனவற்றை சுயாதீனமாக அபிவிருத்தி செய்வதல் ஆ. சுயதொழில் மற்றும் கிராமியக் கைத்தொழிலினை மேம்படுத்;தல்

3. பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் சுயாதீனமாக நிதியினைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரங்கள்

மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு புறம்பாக மேலதிக நிதிகளை தேசிய மற்றும் சர்வதேச அடிப்படையில் சுயாதீனமாகப் பெற்றுக்கொள்ளும் அதிகாரங்கள் சபைகளுக்கு வழங்கப்படுதல் வேண்டும். தேசிய அதிகார சபைகளிடமிருந்தும் மாகாண சபைகளின் கீழ் வரும் அதிகார சபைகளிடமிருந்தும் நிதியினை சேகரித்துக்கொள்ளுதல் தொடர்பில் சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும்.

4. சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி

அ. போக்குவரத்து, பாதை வலையமைப்பு, மின்சாரம் போன்றனவற்றை அபிவிருத்தி செய்வதற்கான விசேட அதிகாரங்களை வழங்குதல். ஆ. புனர்நிர்மான, மீளமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்கு போதுமான அதிகாரங்களை வழங்குதல். இ. காணி மற்றும் காணி அபிவிருத்தியினை முகாமை செய்வதற்காக பரந்தளவிலான அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும். ஈ. மத்திய அரசாங்கத்தினால், அதன் முகவர்களால் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அதன் அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட வகையிலும் பலாத்காரமாகவும் மேற்கொள்ளப்படும் குடியேற்றத்திட்டங்களை நிறுத்துவதற்கான அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும். உ. சுகாதாரம் மற்றும் சுகாதாரத்துடன் தொடர்புற்ற நலன்புரி செயற்றிட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கும் முகாமை செய்வதற்கும் சமூக மாநகர சேவைகளை மேம்படுத்துவதற்கும் போதுமானதும் பரந்தளவிலானதுமான அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும்.

ஊ. பெண்கள் மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தல் தொடர்பில் போதுமான அதிகாரங்களைக் கையளித்தல்.

5. அ. தமிழ் இளைஞர்கள் விரும்பும் பட்சத்தில் பொலிஸ், முப்படைகளில் அவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப உரிய இடமும் முக்கியத்துவமும் வழங்கப்படுதல் வேண்டும்.

i. வடக்கிலும் கிழக்கிலும் வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் தொடர்பானது.

1. நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்திற்கான தீர்வுகள் முஸ்லிம் மக்களின் அரசியில் அபிலாசைகளையும் அவர்களின் உரிமைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும். ஏற்புடைய தீர்வுகளைக் மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்களின் போது முஸ்லிம் தலைமைத்துவமும் சம்பந்தப்படுதல் வேண்டும். 2. வடக்கு கிழக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவர்களுடைய வீடுகளுக்கும் காணிகளுக்கும் திரும்புவதற்கான இயலுமையினை ஏற்படுத்தல் வேண்டும். இந்த வெட்கக்கேடான செயலுக்கு பொறுப்பானவர்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும். 3. வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டு மதிப்பளிக்கின்றது. யுத்தத்திற்கான தீர்வுகளைக் காண்பதில் அவர்களும் பங்காளிகளாக இருக்கவேண்டும். மதம், மொழி அல்லது இனம் இவற்றின் அடிப்படையில் வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கான எவையேனும் முயற்சிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எதிர்க்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் வாழும் சகல மக்களினதும் சமாதான சகவாழ்வினை இயலச்செய்து அவர்களை முன்னேற்ற வேண்டும். 4. ஏனைய குழுக்களின் அரசியல் மற்றும் பிரஜா உரிமைகள் தொடர்பில் ஏதேனும் ஒரு இன அல்லது மதக்குழுவினர் தலையிடுவதற்கு அனுமதித்தல் ஆகாது. இலங்கையில் வாழும் சகல வௌ;வேறான மக்களுக்கும் சுய நிர்ணய உரிமை இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுதியாகக் கூறுகின்றது. 5. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் காணிகள் தொடர்பான சச்சரவுகள் விரைவாகவும் சிநேகபூர்வமாகவும் தீர்த்துவைக்கப்படுதல் வேண்டும். அவ்வாறான சச்சரவுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக வடக்கிலும் கிழக்கிலும் காணப்படும் பலதரப்பட்ட பிரதேசங்களின் சம்பந்தப்பட்ட சமூகங்களை சம்பந்தப்படுத்தி ஏற்புடையதோர் முறைமையினை ஏற்படுத்த வேண்டும். 6. நாட்டின் சமூகங்களுக்கிடையேயான உறவைப் பலப்படுத்துவதற்காக பல்லினச் சங்கங்கள் ஸ்தாபிக்கப்படுதல் வேண்டும். இச்சங்கங்களில் மாவட்டத்தில் வாழும் சகல சமூகங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியதுடன் அவைகளுக்கு சட்ட அந்தஸ்தும் தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்களும் இருக்க வேண்டும். இனங்களுக்கிடையேயான உறவுகள் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான விடயங்களின் போது முதலமைச்சர் இச்சங்கங்களின்; ஆலோசனையினைப் பெற்றுக்கொள்தல் வேண்டும்.

ii. வடக்கு கிழக்கு மகாணசபைத் தேர்தல் மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பானது.

1. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்கின்றது. அரசியல் அமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தின் மூலம் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டவாறான இவ்விணக்கப்பாடானது மேலும் செய்யப்பட வேண்டிய அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கான ஆரம்பமாக இருக்க வேண்டும். 2. தற்போதைய சூழ்நிலையின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய யதார்தமாக இந்த பிரிவினை ஏற்றுக்கொண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின் வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பாக கிழக்கு மாகாண மக்களிடம் சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கோருகின்றது. 3. வடக்கின் அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்தளவு விரைவில் நடாத்தப்பட்டு சபை ஏதேனும் தடையோ தடங்கலோ இன்றி செயற்படுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும். 4. அகதிகளாக இந்தியாவிலும் உள்ளக அகதிகளாகவும் வாழும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் வந்து தமது வழமையான வாழ்க்கையினை நடாத்தக்கூடிய சூழல் வடக்கிலும் கிழக்கிலும் உருவாக்கப்படுதல் வேண்டும். அவ்வாறான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்ட பின்னரே மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தப்படுதல் வேண்டும்.

iii. மலையக தமிழர்கள் தொடர்பானது.

1. பல தலைமுறைகளாக ‘மலைநாட்டு தமிழர்கள்’ என்றழைக்கப்படுபவர்கள் செய்திருக்கும் சேவைக்காக அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுடன் சம பிரஜா உரிமை தொடர்பில் அவர்களின் உரிமைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனால் ஏற்படக்கூடிய சிறப்புரிமைகளும் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.

iஎ. வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழும் சிறுபான்மை இன மக்கள் தொடர்பானது

1. வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழும் சிறுபான்மை இன மக்கள் தமது பிரஜா உரிமை தொடர்பான உரிமைகளை ஏதேனும் வரையறைகள் இன்றிப் பிரயோகிப்பதற்கும் ஏதேனும் தலையீடுகள் இன்றி தமது கலாசார மத வாழ்க்கையினை பின்பற்றுவதற்கும் அனுமதிக்கப்படுதல் வேண்டும்.

எ. மத்திய அரசாங்கம் தொடர்பானது

1. மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் அரசியல் அமைப்பில் குறித்தொதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையினை விஞ்ஞக்கூடாது. 2. ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் பாராளுமன்றத்திற்கு வகை சொல்லக்கூடியவர்களாவர். 3. ஜனாதிபதி பொலீஸ், இராணுவம், கடற்படை, மற்றும் விமானப் படைகளின் தலைவராக இருப்பார். அத்துடன் விதந்துரைப்புக்களை மேற்கொள்ளல் அதிகாரிகளை நியமித்தல், நடவடிக்கைகளைக் கண்காணித்தல் மற்றும்; முறைப்பாடுகளை விசாரித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சுயாதீன முறைப்படுத்தல் அமைப்புக்கள் ஸ்தாபிக்கப்படுதல் வேண்டும். 4. அரசாங்க அதிகாரிகளும் அரச படைகளும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வகை சொல்லக்கூடியவர்களாக்க வேண்டும்.சிபாரிசகளையும் அறிக்கைகளையும் பிரசுரித்தல். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தல், அவர்களை விசாரிப்பதற்கான பரந்தகன்ற அதிகாரகாரங்களுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினை நியமித்தலானது அரசியலமைப்பின் ஏற்பாடொன்றாக அமைதல் வேண்டும்;. 5. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் ஜனாதிபதி மாகாண சபைகளின் முதலமைச்சர்களுடன் செயலாற்ற வேண்டும். 6. மத்திய அரசாங்கத்தின் அதிகாரிகளை மாகாணங்களுக்கு நியமித்தலானது சம்பந்தப்பட்ட மாகாண சபை அரசாங்களைக் கலந்தாலோசித்த பின்னரே அமுல்படுத்தப்படுதல் வேண்டும். 7. தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட இரண்டாவது சபை போன்றனவற்றை கூட்டிணைப்பு செய்வதற்கு தற்போதைய பாராளுமன்ற முறைமை மாற்றப்படுதல் வேண்டும். இரண்டாவது சபைக்கு நியமிக்கப்பட்ட அங்கத்தவர்கள் மாகாண சபைகளினால் பெயர் குறிப்பீடு செய்யப்பட்ட அங்கத்தவர்களாக இருத்தல் வேண்டும். 8. சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்ச்சித்திட்டங்களில் பெண்களின் பரந்தளவிலான பங்கேற்பினை அரசியல் அமைப்பு ஊக்குவிக்க வேண்டும். தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையின் போது பெண்களின் பரந்தளவிலான பங்கேற்பினை ஊக்குவிப்பதற்கு மாகாண சபை அரசாங்கங்களினதும் பாராளுமன்றத்தினதும் தெரிவு செய்யப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட அங்கத்துவத்திலிருந்து 35 சதவீதத்தினை ஒதுக்கீடு செய்வதற்கு இடைக்கால ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

இலங்கையின் இன்றைய சமூகவியல் உண்மைகள்

சிங்களத்துவ அரசியலின் சமூகவியல் அடிப்படைகளும் அரசியற் தீர்வுக்காண தேவைகளும்
கட்டுரையாளர் - பீஷ்மர்

சென்ற வார நடுப்பகுதியில் `லங்காதீப' சிங்கள நாளிதழில் வந்த ஒரு கட்டுரை தென்னிலங்கை அரசியல் நோக்கிலும் போக்கிலும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோருடைய படங்களுடன் பிரசுரிக்கப்பட்ட அக் கட்டுரையில் சிங்கள அரசியல் தலைவர்களின் குழப்ப நிலை அதிகார மையங்கள் பற்றி மிக விரிவாக பேசப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்தையும் ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்கு மருமகனாகவிருந்து அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதையும் அவரது சகோதரரின் ரி.என்.எல். வானொலி ஒலிபரப்புப் பற்றியும் தகவல்களைத் தந்துள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷ பற்றிய தகவல்கள் மிக சுவாரஷ்யமானவை. இவரது தகப்பனார் டி.ஏ.ராஜபக்‌ஷ. அவர் முன்னர் ஸ்ரீமா அரசாங்கத்தில் உதவி அமைச்சராக இருந்தவர். அவரது சகோதரர் டி.எம்.ராஜபக்‌ஷ இவர் முன்னர் உப அமைச்சராகவிருந்து முக்கிய இடம் வகித்த ஜோர்ஜ் ராஜபக்‌ஷவின் தகப்பனார். ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு அம்பாந்தோட்டையில் நில புலங்களின் அடிப்படையில் மிகுந்த செல்வாக்கு உண்டு.

டி.ஏ.ராஜபக்‌ஷவின் மறைவின் பின்னரே மகிந்த ராஜபக்‌ஷ அரசியலுக்கு வருகிறார். பஷில் ராஜபக்‌ஷவும் சமல் ராஜபக்‌ஷவும் இவரது சகோதரர்கள். சமல் ராஜபக்‌ஷ தமயன், பஷில் ராஜபக்‌ஷ தம்பி. சந்திரிகா குமாரதுங்கவினுடைய முதலாவது அமைச்சுக் காலத்திலிருந்து இவர் அமைச்சராகவிருந்து வருகின்றார். முதலில் இவர் மீன்பிடித் துறை அமைச்சராகவிருந்தவர். இதன் காரணமாக கடலோர சிங்களக் கிராமங்களில் தனது செல்வாக்கைப் பதித்துக்கொண்டவர்.

குறித்த அந்தக் கட்டுரையில் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் தனது தளமான அம்பாந்தோட்டையையே தனது அரசியல் மையமாகக் கொண்டுள்ளனர் என்றும் நாட்டின் ஜனாதிபதி என்கின்ற முறையிலும் அம்பாந்தோட்டையில் அபிவிருத்திக்கு தனித்த விசேட இடம் கொடுக்கின்றார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போன்று பல்வேறு தென்னிலங்கை அரசாங்கங்கள் எல்லாக் காலத்திலும் எப்படியோ தமது குடும்பச் சுற்றை அரசியல் மையமாகக் கொண்டுள்ளனர் என்பது அது நன்றாக விளங்குகிறது. அந்தப் பின்புலத்திலேயே இப்போதைய ஜனாதிபதி தனது சகோதரர்களை நம்பியிருக்கின்றார் என்று கருத்துத் தொனிக்கும் படியாக எழுதப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளருடனான உறவு தெளிவாக எடுத்துக்கூறப்படவில்லையெனினும் அவரும் இந்தப் பெருங் குடும்பத்தின் அங்கத்தவரே. அவர் இலங்கை இராணுவத்தில் இருந்தவர் என்பதும் பின்னரே அமெரிக்கா சென்றார் என்ற கதையும் பலருக்குத் தெரிந்ததே.

இவரைப் பற்றி பேசும்பொழுது இவர் லலித் அத்துலத் முதலியின் வடமராட்சி ஒப்பிரேஷனின் பொழுது முக்கிய இடம் வகித்த இராணுவ வீரர். மேற்குறிப்பிட்ட கட்டுரை தென்னிலங்கை அரசியல் அதிகார மையங்களின் சமூகவியல் உண்மைகள் பலவற்றை வெளிக்கொண்டு வருகின்றது. அவற்றுள் பிரதானமானது அதிகாரத்துள்ளவர் எப்பொழுதும் இரத்த உறவினருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளமையை அறிந்துகொள்ளலாம்.

அது மாத்திரமல்ல ஏதோவொரு வகையில் இவற்றில் பெரும்பாலானவை தமக்குள் தாமே குடும்பப் பிரக்ஞையையையும் கொண்டிருந்தன.

இந்தப் பொது விதிக்குள் பிரேமதாச வரார். சிங்கள அரசியலில் குலத்துவேசங்கள் முற்றாக அழிக்கப்படாமலேயே இருந்தன என்பதற்கு அவருடைய அரசியல் வாழ்க்கை வரலாறு ஒரு நல்ல உதாரணமாகும். மேற்குறிப்பிட்ட கட்டுரையில் குறிப்பிடப்படவில்லையெனினும் தென்னிலங்கை அரசியலிலே சாதி (குலம்) அடிப்படை மிக முக்கியமானதொரு இடத்தைப் பெறுகின்றது.

சமகாலத்தை எடுத்துக்கொண்டால் இலங்கைத் தமிழரின் அரசியலில் காணப்படாத சாதிப் பிரக்ஞை சிங்கள அரசியலில் இன்னும் முக்கியமாகவுண்டு. மங்கள சமரவீரவை ஜனாதிபதி கைகழுவி விட்டு விடாமைக்கான காரணம் அவருடைய சாதியே ஆகும். அவரது தகப்பனார் மகாநாம சமரவீர பொதுவுடைமைக் கட்சியினூடாக அரசியலை ஆரம்பித்திருந்தாலும் அந்தக் குலத் தளத்தையே முக்கியமாகக் கொண்டிருந்தார். காலி மாத்தறைப் பகுதியிலும் ரம்புக்கனைப் பகுதியிலும் இச் சாதியினருக்கும் அரசியல் பலம் உண்டு.

தென்னிலங்கையின் அரசியலில் குறிப்பாக கடலோரப் பகுதியின் அரசியலில் முக்கியம் வகிக்கின்றது சாதிக்குழப்பம் `சலாகம' என்போர் ஆவர். டொக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா, சி.பி.டி.சில்வா ஆகியோர் இந்தப் பின்புலத்தையுடையவர்களே. கொல்வின் அதற்குள்ளிருந்து வெளியேவர விரும்பியபொழுது கொழும்பு தெற்குத் தமிழர் வாக்குகள் மிக முக்கியமாகின்றன. சலாகமவிலும் பார்க்க முக்கியமுடைய சாதிக் குழுமம் `கறாவ' எனப்படும் மீன்பிடிக் குலமாகும்.

தமிழிலுள்ள கரையார் என்ற சொல்லே சிங்களத்தில் கறாவ என்று நிற்கின் றது. விவசாயிகளான `கொய்கமவினரே மேலிடத்தைத் பெறுவர். கண்டியச் சிங்களவர்கள் உடரட் ட சிங்களவர்கள் என்ற வகைப்பாட்டுக்குள் வந்து விடுவர்.

சிங்கள அரசியலைப் புரிந்து கொள்வதற்கு இச் சமூகவியல் உண்மைகளை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஆனால், அதிலும் பார்க்க முக்கியம் இந்த அடித்தள குல நிலைப்பாடுகள் தமிழர் பிரச்சினை விடயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதாகும்.

இவற்றை மனங்கொண்டு சிந்திக்கும் பொழுது ஒரு முக்கிய சமூகவியல் வரலாற்று உண்மை தெட்டத்தெளிவாகின்றது. அதாவது சிங்கள- பௌத்தவாதம் சாதியடிப்படையிலிருந்து இன்னும் விடுபடவில்லை யென்பதாகும். உண்மையில் தங்களிடையே நிலவும் குல முரண்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ள அவர்கள் சிங்களத்துவத்தை முதன் நிலைப்படுத்துகின்றனர் என்பதை பல அரசியல் அறிஞர்களும் சமூகவியலாளர்களும் தவறாது எடுத்துக் கூறுகின்றனர்.

இலங்கையில் தமிழ்ப் பிரக்ஞை வந்த வழி சாதிக்குழும அடிப்படைகளை ஊடறுத்துச் செல்வதாகவும் அவ் அடிப்படையை புறக்கணிப்பதனை அவதானிக்க வேண்டும். அதற்கான பிரதானமான காரணம் தென்னிலங்கையின் சிங்கள எழுச்சி சகல தமிழர்களினதும் மொழியுரிமைகளுக்கும் பெரும் சவாலாக அமைந்ததே. இதனால், இலங்கைத் தமிழர்கள் அரசியல் ரீதியாக முகங்கொடுப்பதற்கு இரண்டு முக்கிய நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியது அவசியமாயிற்று. ஒன்று சாதியடிப்படைக்கு அப்பாலே செல்லுதல், இரண்டு பிரதேச அடிப்படைக்கு அப்பாலே செல்லுதல் .

தமிழ்- சிங்கள மொழிகள் மூலம் கல்வி முதல் உத்தியோகத்துக்கான தெரிவுகள் செய்யப்பட்டமையால் தமிழை மையமாகக் கொண்டு தமிழர்கள் ஒன்றிணைய வேண்டிய ஓர் அரசியல் வரலாற்றுத் தேவை இங்கு உருவாயிற்று.

தமிழகத்தில் நிலைமை வேறு. அங்கு கல்வி, உத்தியோகம் என்பன ஏதோவொரு வகையில் சாதியடிப்படையிலேயே இன்னும் இயங்குகின்றது.

இவ்விடயம் ஆழமானதொன்றாகும். ஆனால் இங்கு இப்பொழுது எமக்கு முக்கியமாவது மொழியுரிமை. சமூக ஒற்றுமையில் தளமாகவும் அரசியற் தேவையாகவும் அமைந்துள்ளமையாகும். இதனுள்ளும் ஒரு சிக்கலுள்ளது. இந்த மொழியுரிமையே முக்கியமானது என்பதன் காரணமாகவே சமஷ்டிக் கட்சியினர் தமிழ் பேசும் மக்கள் என்ற கரத்தினை முன்வைத்தார். ஆனால் முஸ்லிம்கள் அதனை ஏற்கவில்லை. இதனால் மொழியுரிமையும் இன உணர்வும் சிங்கள, தமிழர் உறவில் குறிப்பாக தமிழர் பிரக்ஞையில் முக்கியமாகின்றது. இலங்கைத் தமிழருடைய அடித்தள நிலைப்பாடு அவர்கள் ஒரே வேளையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவுமிருக்க விரும்புகின்றனர். இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு என்பது இந்த உண்மையை மனங்கொள்வதாக இருத்தல் வேண்டும்.

ஆனால் மேலே கூறிய சிங்கள அரசியல் பிரக்ஞையின் சமூகவியல் அதற்கு இடம் தருவதாக அமையவில்லை. தங்களின் சிங்கள தன்மையை வலியுறுத்த வேண்டும் என்பதற்காக இவர்கள் இலங்கை என்பது சிங்களமே என்று கொள்கின்றார்கள். இந்த பலவீனத்திலிருந்து சிங்கள அரசியல் விடுபடும் வரை இலங்கைக்கு விமோசனம் இருப்பதாக தெரியவில்லை.

மகிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் வேர்களும் இதற்கு உதவுவனவாக தெரியவில்லை.

ஞாயிறு, 27 மே, 2007

72 மணித்தியாலத்தில் 40 புலிகள் பலி


வடக்கு கிழக்கின் பல பாகங்களில் ஸ்ரீலங்கா படையணிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் நேரடித் தாக்குதல்களில் 40 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் 18 விசேட அதிரடிப் படையினரும் கடந்த 72 மணித்தியாலத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த ஆறு பெண்பிள்ளைகள் தொப்பிகல பிரதேசத்தில் இருந்து தப்பி வந்து சித்தாண்டி இராணுவ முகாமில் சரணடைந்திருப்பதாக 232 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி லெப்டினண்ட் கேணல் பிரியந்த நாபாகொட தெரிவித்துள்ளார்.

போராளிகளின் வீரச்சாவு பற்றிய தகவல்கள் எதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைக்கவில்லை.

இலங்கையின் முதற் பெண் பத்திரிகையாசிரியர்

இலங்கை பத்திரிகைத்துறை வரலாற்றில் சிறிய பராயமான 31 வயதிலேயே முதற் பெண் பத்திரிகையாசிரியராக பிய சம்பிக லியனாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கள சமூகத்தைச் சேர்ந்த பிய சம்பிக இலங்கையின் தேசிய ஆங்கிலப் பத்திரிகையான டெயிலி மிரருக்கு 2007.01.01 முதல் பத்திரிகையாசிரியராக பதவி வகிக்கின்றார்.

1996 ஆம் ஆண்டில் பயிற்சிப் பத்திரிகையாளராக தெரிவாகி மூன்றாண்டுகளின் பின் பத்தி எழுத்தாளராக "மிரர் பொலிடிக்ஸ்" எனும் பத்தியை எழுதத் தொடங்கியது தொடக்கம் இன்று வரை அப் பத்தியின் ஆசிரியராக சம்பிகவே இருந்து வருகின்றார்.

2000 ஆம் ஆண்டில் கட்டுரைகள் உதவியாசிரியராக நியமனம் பெற்று 2003 ஆம் ஆண்டில் பிரதியாசிரியராகவும், 2006 ஆம் ஆண்டில் இணையாசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டார்.

தொடர்ச்சியாக ஒரே பத்திரிகையில் சிறப்பாகப் பணி புரிந்து முன்னிலைக்கு வந்து இலங்கை வரலாற்றிலே முதற் பெண் பத்திரிகையாளராக சிறிய வயதிலேயே தெரிவாகியுள்ள பிய சம்பிக லியனாராச்சியை களத்துமேடு பாராட்டி வாழ்த்துகின்றது.

சனி, 26 மே, 2007

பெண்ணாக மாறிய ஆண் கேம்பிறிஜ் நகர மேயரானார்

பால் நிலை மாற்றம் பெற்ற இங்கிலாந்தின் முதல் மேயர் எனும் பெருமையை பெற்றுக் கொள்கின்றார் சுதந்திர ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ஜென்னி பெய்லி.

பிறப்பில் ஆணாக இருந்து 15 வருடங்களுக்கு முன்னர் சத்திரசிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய பெய்லிக்கு இப்போது 45 வயதாகின்றது.

இவருடைய பெண் வாழ்க்கைக் துணைவரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான ஜெனிபர் லில்டிலும் பால் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து ஆணாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெய்லி ஆணாக இருந்த போது செய்த திருமணத்தில் 20 வயது மற்றும் 18 வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

உடற் பருமனால் ஏற்படும் சிக்கல்

உடற் பருமனானவர்களால் உலகில் பல நிறுவனங்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன.

பொது வாகனத்தினுள் பிரவேசிக்க முடியாத நிலை, விமான கதவினூடாக செல்ல முடியாமை, நோயாளர் காவு வண்டிக்குள் ஏற்ற முடியாமை, வைத்திய பரிசோதனையின் போது ஸ்கேன் இயந்திரத்தினுள் போக இயலாமை இப்படிப்பட்ட பல பிரச்சனைகளுக்கு உடற் பருமனானவர்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள்.

..

..

..

..

இப்படிப்பட்டவர்கள் இறந்த பின்னரும் கூட பருமனின் தேவைகேற்ப பிரேதப் பெட்டிகளை பெற முடியாமை, வாங்கிய பெட்டியினுள் பிரேதத்தை உட் செலுத்தலில் இருக்கும் கடினம், பிரேதம் தகனம் செய்யும் இயந்திரத்தினுள் புக வைப்பதில் இருக்கும் சிக்கல் இவ்வாறாக உடற் பருமனுற்றோர் சிக்கியுள்ளார்கள்.

நீங்களும் உடற் பருமனானவர்களா சற்று சிந்தியுங்கள்.

சிறுபான்மையினர் குரலை நசுக்கிவிட காய் நகர்த்தல்?

இனநெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை அரசாங்கம் நியமித்து அரசியலமைப்பு ரீதியாக மாற்றங்களை மேற்கொள்வது குறித்து அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்றுவரும் நடவடிக்கைகள் தொடர்வதாக அவ்வப்போது அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் இடைக்கால அறிக்கையின் பிரகாரம் தேர்தல் மறுசீரமைப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆளும் கட்சி மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. விடமிருந்தும் சிறுபான்மை இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 கட்சிகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உத்தேச தேர்தல் சீர்திருத்தத்துக்குப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளிடமிருந்தும் ஏகோபித்த உடன்பாடு பெறப்படாமல் தேர்தல் முறையில் மறுசீரமைப்பு வேண்டாமென்று ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

ஆனால் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் வெவ்வேறானவையாகும்.

உத்தேச தேர்தல் மறுசீரமைப்பை சடுதியாக மேற்கொள்வதற்கான காரணம் சிறுபான்மைக் கட்சிகளின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைத்துவிடுவதற்கான மறைமுகமான காய் நகர்த்தலென்ற சந்தேகத்தை ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் எழுப்பியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா அறிமுகப்படுத்திய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையினால் சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மையினர் கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் கணிசமான அளவு பிரதிநிதித்துவம் கிடைத்தது. ஆனால் பழைய தொகுதிவாரி முறையும் விகிதாசார முறையையும், நியமன முறையையும் கொண்டதாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளால் சிறுபான்மைக் கட்சிகளின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மிகச் சொற்ப அளவினதாக வீழ்ச்சி காணும் நிலைமையை முன்கூட்டியே உணர்ந்தே உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு யோசனைகளை சிறுபான்மைக் கட்சிகள் எதிர்க்கின்றன.

வட, கிழக்கை பாரம்பரிய தாயகமாகக் கொண்ட தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் புதிய முறைமை அறிமுகத்தினால் பாரிய அளவில் குறைவடையப்போவதில்லை. என்றாலும் பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தமது வரலாற்று ரீதியான தாயகத்தில் சுயாட்சி நிர்வாகக் கோரிக்கையை தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து நீண்டு செல்லும் இன மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதே உடனடித் தேவையாகும். ஆயினும் இதற்கு மாறாக அதாவது இனநெருக்கடிக்கு தீர்வாக அரசியலமைப்பில் மாற்றத்தை மேற்கொள்வதற்கு முன்பாக தேர்தல் முறைமையில் மாற்றத்தை மேற்கொள்வதற்கு ஆளும்தரப்பு முயற்சிகளை முடுக்கி விட்டிருப்பது சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் சதி முயற்சியே தவிர வேறொன்றுமில்லையென அந்த மக்களின் பிரதிநிதிகள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.

உத்தேச சீர்திருத்தத்தின் மூலம் ஆட்சி நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மையை பெற்றுக் கொள்வதிலேயே அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக தென்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யும் சிரேஷ்ட தமிழ்த் தலைவருமான இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் விதத்தில் அரசியலமைப்பில் அடிப்படையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்ளும் முயற்சியில் வட, கிழக்குத் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்துள்ள சம்பந்தன், அதேசமயம் முஸ்லிம்களினதும் மலையகத் தமிழர்களினதும் உரிமைகள் இந்த நடவடிக்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

உத்தேச தேர்தல் முறை மறுசீரமைப்பினூடாக உறுப்பினர்களின் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்திலேயே அரசாங்கம் இருப்பதாக தென்படுவதாக தெரிவித்துள்ள சம்பந்தன் `வேற்றுமையில் ஒற்றுமை' என்பதற்குப் பதிலாக வெறும் `இலக்கங்களை' நோக்கமாகக் கொண்ட முயற்சியே இதுவெனவும் சாடியிருக்கிறார்.

பாராளுமன்றத்தில் சிறுபான்மைக் கட்சிகளின் `பேரம் பேசும்' சக்தியை இல்லாமல் செய்வதற்கான முயற்சி இதுவென இதர தமிழ், முஸ்லிம் கட்சிகளும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளன.

பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றுபவையாகவும் குறைந்தளவிலேனும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்பவையாகவுமே சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து நிராகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை நியாய சிந்தை படைத்த எவருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறும் நடவடிக்கைகளினால் ஆட்சிக் கதிரையை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பது நாட்டிற்கு ஒரு போதுமே நிரந்தர சமாதானத்தை தேடித் தராது.

நாட்டின் எந்தவொரு சமூகக் குழுமத்தினரிடத்தும் எதிரான கருத்துகள் உள்வாங்கப்பட்டால் அதாவது நமக்கு அநீதி இழைக்கப்படுகின்றதென்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு அவர்கள் மத்தியில் சகிப்புணர்வின்மையை ஏற்படுத்தி வன்முறைகளுக்கு தூண்டி மோதலுக்கு வழி வகுத்துவிடும் என்ற பாடத்தை ஆட்சியதிகாரத்தில் இருப்போர் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகும்.

கடந்த காலத்தில் பெற்ற கசப்பான அனுபவங்களிலிருந்தாவது பட்டறிவு பெற்று இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் வலியுறுத்தலுமாகும்.

வெள்ளி, 25 மே, 2007

நெடுந்தீவு கடற்படைத் தளம் புலிகளால் தாக்கியழிப்பு (படங்களுடன்)

யாழ் தீவகம் நெடுந்தீவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா கடற்படைத் தளம் மீது நேற்று அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 34 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர், அத்துடன் அங்கிருந்து 50 ரக கலிபர் துப்பாக்கி- 2, பிகே எல்எம்ஜி-2, ஆர்பிஜி- 1, ரி56 துப்பாக்கிகள்- 2 மற்றும் போராயுதங்களைக் கைப்பற்றி கடற்படைத் தளத்தை அழித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளார்கள்.

ஸ்ரீலங்கா படையணியால் தமிழீழ விடுதலைப் புலிகளின் 18 கடற்புலிகள் கொல்லப்பட்டதாகவும் அவர்களின் 4 படகுகள் அழிக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா இராணுவ பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிய ஆயுத தளபாடங்கள்








கருணா பிள்ளையான் பகை - திவயின

பிரபாகரன், கருணா பகை போன்றே கருணா, பிள்ளையான் பகையும்

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கருணா குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று விட்டதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. இவ்வாறு குறித்த போட்டிக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் பிள்ளையானும் மற்றும் அவருடைய சகாவான சீலன் எனப்படுபவருமே ஆகும். பிள்ளையான் கருணா குழுவில் மிகவும் பலம்வாய்ந்த படையணியின் தலைவராக இருந்தவர். கருணாவின் நிழல்போல அவருடனேயே கூட இருந்து செயற்பட்டவர்.

கடந்த 2004 ஏப்ரல் 9 ஆம் திகதி விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் விசேட படையணியினர் வெருகல் ஆற்றங்கரைப் பிரதேசங்களில் வைத்து கருணாவின் குழுவினர் மீது தீவிர தாக்குதல்களைத் தொடுத்த வேளையில், அதனை எதிர்கொள்ள முடியாத நிலையில் பின்வாங்கிய கருணா தனது குழுவினரைக் கலைந்து செல்லும்படி கூறிவிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பியோடிய சந்தர்ப்பத்தில் கருணாவின் குழுவினருக்குத் தலைமைதாங்கி அவர்களை வழிநடத்தியவர் பிள்ளையான்தான்.

..

..

..

இத்தகைய பிள்ளையான் தற்போது கருணா குழுவிலிருந்து பிரிந்து தனிக்குழுவாக இயங்குவதற்கு காரணம் கருணா குழுவினரால் செய்யப்பட்ட கொள்ளையடித்தல், கப்பம் வாங்குதல் மற்றும் மோசடிகள், ஒழுக்கச் சீர்கேடுகள் என்றே கூறப்படுகிறது. கருணா குழுவினரின் இந்த நடவடிக்கைகளை விரும்பாது அதிருப்தியடைந்த பிள்ளையான் இதுபற்றி பல தடவைகள் கருணாவிடம் தெரிவித்தபோதும் கருணா அதுபற்றி அக்கறை எடுக்கவில்லை. தொடர்ந்து இந்தப் பிரச்சினை சம்பந்த மாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட வாய்ச் சண்டை பாரதூரமாகிவிட்ட நிலையிலேயே பிள்ளையானும் அவருடைய சகா சீலனும் தமக்குச் சார்பான படையணியினருடன் தனியான குழுவாகப் பிரிந்து சென்றனர். கருணாவும் இவர்கள் இருவரையும் மறுபடியும் தனது குழுவில் சேர்த்துக்கொள்வதற்கான எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன், பிள்ளையானுக்குப் பணிந்துபோக கருணா சிறிதும் விரும்பவில்லை என்றும் தெரியவருகிறது.

இவ்வாறான பயங்கரவாத இயக்கங்களைப் பொறுத்தவரை ஒரு குழுவிலிருந்து அதன் உறுப்பினர்கள் பகைத்துக்கொண்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில் குறித்த குழுவின் தலைவருக்கு தனது உயிர் பாதுகாப்பு பற்றிய அச்சம் ஏற்படுகிறது. குறித்த குழுவின் உயர் மட்டத் தலைவர் பிள்ளையான் போன்று பிரிந்து செல்லும் உயர்மட்ட உறுப்பினருக்கு "மரண தண்டனை" வழங்குவதுபோன்ற நிலைப்பாட்டை எடுப்பார். இதுவே பயங்கரவாத இயக்கங்களின் நடைமுறையாக இருந்துவருகிறது. இவ்வாறான ஒரு நிலைப்பாட்டுடனேயே கருணா செயற்படுவதாகத் தெரிய வருகிறது. பிரபாகரன் கருணாவைக் கொலை செய்ய மேற்கொண்ட முயற்சிகளும் இவ்வாறு கருணா பிரிந்து சென்றதால் இயக்கத்தின் பலம் பிளவுபட்டுப்போனதாலேயே. சட்டவிரோதமான ஆயுதப் படையணிகளின் போக்கு இவ்வாறுதான். தற்போது கருணாவுக்கும் பிள்ளையானுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுக்கும் பகைக்கும் இது பொருந்தும்.

நன்றி தினக்குரல்

வியாழன், 24 மே, 2007

கொழும்பில் குண்டுத் தாக்குதல் (படங்களுடன்)

ஸ்ரீலங்கா கொழும்புத்துறைமுகத்தின் ஐந்தாவது நுழைவாயிலுக்கருகில் உள்ள ரெக்லமேசன் வீதியில் இன்று காலை 8.55 மணிக்கு துறைமுக பாதுகாப்புக் கடமைக்குரிய இராவத்தினரை ஏற்றிச்சேன்ற பேரூந்து மீது தூரத்தில் இருந்து இயக்கும் கருவி மூலம் மோட்டார் சைக்கிளில் பொருத்தி வைக்கப்பட்ட வெடி குண்டு இயக்கப்பட்டதால் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஸ்ரீலங்கா படையணியின் கோப்ரல் நாணயக்கார கொல்லப்பட்டார், நான்கு படையினர் காயமடைந்துள்ளனர்.

அப்பாதையால் சென்ற மூன்று பொது மக்களும் காயத்துக்கு இலக்காகியதால் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.





ஓமந்தைப் பாதை மீண்டும் அடைப்பு

ஸ்ரீலங்கா படையணியால் பயணிகளின் பாவனைக்கென திறக்கப்பட்ட ஓமந்தை ஊடான பாதை மீண்டும் அடைக்கப்பட்டுள்ளது. இப் பாதை செயலிழந்து இருந்த போது நாளாந்த கடமைக்காகச் செல்லும் தமிழர்களும் மற்றும் ஏனையோரும் துயருற்றிருந்தனர்.

இவ்வாரம் அப்பாதையினை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் திறந்து விட்டதைத் தொடர்ந்து பொது மக்கள் பயணிக்கத் தொடங்கினர், திடீரென ஓமந்தை உயிலங்குளம் சூனியப் பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின்(ICRC) வாகனத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கித் தாக்குதல் நடாத்தியதைத் தொடர்ந்து் அப்பகுதியில் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதால் அங்கு பணிபுரிந்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளை உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அவ்விடத்திலிந்து விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் பாதை மீண்டும் அடைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளும் ஸ்ரீலங்கா படை தரப்பினரும் உத்தரவாதம் தரும் வரை மறு அறிவித்தலின்றி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் விலகிக் கொள்வதாக பேச்சாளர் டவிடி விக்னட்டி தெரிவித்தார்.

புதன், 23 மே, 2007

பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்குக்கு புதிய கொடிகள் அறிமுகம்

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன - ராஜீவ்காந்தி இருவரும் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்து கைச்சாத்திட்டுக் கொண்ட பின்னர் இணைந்த வடகிழக்கு மாகாண சபை உருவானது. இம் மாகாண சபையானது ஸ்ரீலங்காவின் நிர்வாக அலகில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது, 1988ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணத்தை நிர்வகிக்க நடத்தப்பட்ட பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாகாணசபையைக் கைப்பற்றிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் (EPRLF) வடக்கு கிழக்கு நிர்வாகம் நடத்தப்பட்டது, அவ் வடக்கு கிழக்கு மாகாணசபை நிர்வாகத்துக்கென யாழும் மீனும் பொறிக்கப்பட்ட சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சையுடனான மூவர்ணக் கொடி உருவானது.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையானது சட்டரீதியானதல்லவென்று தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்க ஆளுமைக்கு உட்பட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து திருகோணமலையில் அமைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணசபை செயலகம் கலைக்கப்பட்டு தனித் தனி நிர்வாக சபை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு உருவாக்கப்பட்டன, அதனால் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு தனித் தனியான மாகாணக் கொடிகள் இப்போது உருவாக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்காவின் 35வது குடியரசு தினமான நேற்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான கொடிகள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற வைபவத்தில் தனித் தனியாக இரு கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டன. சிவப்பு, வெள்ளை, பச்சை வர்ணமுடைய வடமாகாணத்திற்கான கொடியில் சூரியன் பொறிக்கப்பட்டுள்ளது. பழுப்பு (Brown) வர்ணமுடைய கிழக்கு மாகாணக் கொடியில் கழுகு, மீன் மற்றும் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 22 மே, 2007

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் துண்டுப்பிரசுரம்


அன்பிற்கினிய தமிழ் பேசும் மக்களே!

எமது தலைவர் கருணா அம்மான் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் கிழக்கு மாகாண மக்களின் உரிமைகளையும், அபிலாசைகளையும் ஜனநாயக முறையில் வென்று எடுப்பதற்கும், பெற்றுக்கொடுப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஓர் அமைப்பே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளாகும். ஆகவே இவ்வாறான உயர்ந்த குறிக்கோளுக்காய் அர்ப்பணிப்புடன் செயற்படும் எமது இயக்க உறுப்பினர்கள் உயர் ஒழுக்கத்தை உடையவர்களாய் இருக்கவேண்டும் என்பதில் எமது தலைமைத்துவம் உறுதியாகவுள்ளது. எமது இயக்கத்தில் உள்ள உறுப்பினர்கள் குறிப்பாக புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல், சட்டவிரோத நடடிவடிக்கைகளில் ஈடுபடுதல், தகாத வார்த்தைகளை பிரயோகித்தல், காரணம் இல்லாமல் பொதுமக்களை தாக்குதல், பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் பிள்ளைகளை பலவந்தமாகப்பிடித்தல் போன்ற ஒழுக்க சீர்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதில் எமது தலைமைத்துவம் உறுதியாகவும் விழிப்பாகவும் உள்ளது.

ஆகவே இவ்வாறான ஒழுக்கசீர்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடும் எமது உறுப்பினர்களை இனம் காண்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் பொதுமக்களாகிய உங்களின் ஒத்தாசைகள் எங்களுக்கு மிகவும் அவசியமாகவுள்ளது. ஆகவே எமது உறுப்பினர்கள் இவ்வாறான ஒழுக்கசீர்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களேயானால் உங்களுக்கு அருகில் உள்ள எமது அரசியல் பணிமனைக்கு அல்லது கீழ்காணும் தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல்களை தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மட்டக்களப்பு: 065-2222102ஃ065-2225794 திருகோணமலை: 026-2223535 அம்பாறை:060-2658611 கல்முனை:060-2676825

நன்றி

அரசியல் துறை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (ரிஎம்விபி)

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் கூறப்பட்டவை செவ்வனே நடைபெறுமா தமிழ் மக்களை நிம்மதியாக வாழ வழி வகுப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரதான உரிமை சிங்களவருக்கே - ஹெல உறுமய

ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மீதான இனப்பிரச்சனைக்கு முடிவு காணும் நோக்கில் தீர்வு யோசனைகளை சர்வ கட்சிகளும் சமர்ப்பித்து வருகின்றன, இந்த வரிசையில் நாட்டின் பிரதான அனைத்து உரிமைகளும் சிங்கள மக்களுக்கே உரித்தானது எனும் அடிப்படையிலான தீர்வு யோசனையை ஜாதிக ஹெல உறுமய தயாரித்துள்ளதாகவும் அடுத்த வாரம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அதன் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனப்பிரச்சனை இருப்பதெனவும் அதனை தீர்க்க சகல கட்சிகளும் முன்வர வேண்டுமென சர்வதேசமே கூறி வரும் இந் நிலையில் ஜாதிக ஹெல உறுமயவின் தீர்வு யோசனை சிரிப்புக்கிடமாகத் தெரிகின்றது.

உணவுக்காக ஏங்கும் படுவான்கரை அப்பாவி ஜீவன்கள்


மட்டக்களப்பின் படுவான்கரைப் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவ, தமிழீழ விடுதலைப் புலிகள் மோதல் மற்றும் செல்லடியில் இருந்து இடம்பெயர்ந்து அகதிகள் முகாமில் வாழும் ஏதுமறியாத அப்பாவி ஜீவன்கள் வெளிநாட்டு நிறுவனம் வழங்கிய உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக வரிசை கட்டி நிற்பதைக் காணலாம்.

திங்கள், 21 மே, 2007

உலகவங்கியின் புதிய தலைவராக பிளயர் வருவாரா?


உலக வங்கியின் அடுத்த தலைவராக பிரித்தானியப் பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போகும் ரொனி பிளயர் நியமிக்கப்படலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதலிக்கு பதவி உயர்வும் அதிக சம்பளமும் வழங்கிய சர்ச்சையில் சிக்கி உலக வங்கியின் தலைவர் பதவியிலிருந்து அமெரிக்காவின் முன்னாள் பிரதி பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய போல் வூல்வோவிட்ஸ் தற்பொழுது இராஜிநாமாச் செய்ய வைக்கப் பட்டுள்ள நிலையிலேயே ரொனி பிளயரின் பெயர் வங்கியின் புதிய தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியப் பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை அண்மையில் வெளியிட்ட ரொனி பிளயர் எதிர்வரும் ஜூன் மாதம் தனது பதவியில் இருந்து விலகுகின்றார். ஆகவே, பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலகும் இவரை உலக வங்கிக்கு தலைவராக நியமிக்க சிபாரிசுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலக வங்கியின் அதிகளவு தொகை பங்குகளை அமெரிக்காவே வைத்திருப்பதனால் உலக வங்கியின் தலைவராக அமெரிக்கர்களையே நியமிப்பது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு விடயமாக உள்ளது.

ஞாயிறு, 20 மே, 2007

பிபிசி தமிழோசை அன்பரசன்

பிபிசி தமிழோசையில் தயாரிப்பாளராக பணியாற்றி வந்த அன்பரசன் அவர்கள் பிபிசியின் ஆங்கிலப் பிரிவிற்கு மாற்றலாகிச் செல்கின்றார். தமிழோசையில் கடந்த ஆறு ஆண்டு காலமாக அன்பரசன் துணிச்சலுடன் தயாரித்தளித்த நிகழ்ச்சிகள் அபாரம்.

அன்றாட தயாரிப்பு பணிகளை திறமையாகச் செய்தததோடு, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் துணிச்சலுடன் தயாரித்து வழங்கியுள்ளார் என்றே கூற வேண்டும். செவ்வி காணும் நிகழ்ச்சிகளில் முகஸ்துதி பாராமல் நேரடியாக அவர் தொடுக்கும் வினாக்கள் சம்பந்தப்பட்டோரை திக்குமுக்காட வைத்தது என்றால் அதில் மிகையில்லை.

2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள், தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் எதிர்காலம் குறித்த பெட்டக நிகழ்ச்சி, 2004 டிசம்பர் 26 சுனாமியால் அந்தமான் தீவில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த பெட்டக நிகழ்ச்சி, இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் குறித்த பெட்டக நிகழ்ச்சி, ஜெனிவாவில் 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகள் போன்ற முக்கிய நிகழ்வுகளை தமிழோசைக்கு தயாரித்து வழங்கிய பெருமைக்குரியவர் அன்பரசன்.

இவர் தமிழோசையை விட்டுச் செல்வது எல்லோருக்கும் வருத்தமளித்தாலும் பிபிசியின் ஆங்கில சேவையில் இவரின் நிகழ்ச்சிகளைக் இனிமேல் கேட்க காண வாய்ப்புக்கள் ஏற்படுமெனும் எண்ணத்தால் மனம் அமைதியடைகின்றது, அன்பரசனைப் போன்ற இன்னும் பலர் உருவாக வேண்டும், உண்மைச் செய்திகளை உலகுக்குக் கூற முன்வர வேண்டும்.

கையை வெட்டி எடுங்கள்

பிரித்தானியாவின் எர்ஸ்டான் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண்டி பாவெல் என்பவரின் இடது கரம் சாதாரண வளர்ச்சியுடன் இருக்கும் போது வலது கரம் பெரிதாகிக் கொண்டே வருகின்றது, வைத்தியர்களாலும் காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை.

தற்போது அவரின் வலது கையின் நிறை 17 கிலோ கிராமாகக் காணப்படுகின்றது, சில ஆண்டுகளுக்கு முன்னர் வலது கையிலுள்ள தசைகளை வெட்டிக் குறைக்க மருத்துவர்களின் ஆலோசனை பெறப்பட்டது, ஆனால் நரம்புகள், எலும்புகள் பாதிப்படையலாம் எனும் காரணத்தினால் அம்முயற்சி கைவிடப்பட்டது.

இவ் அசாதாரண தசைப் பெருக்கத்தினால் உளத் தாக்கமடைந்துள்ள பாவெல் தனது வலது கரத்தினை வெட்டி எடுத்து விடுங்கள் என டாக்டரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐந்து வயது சிறுவனை தனது வலது கரத்தில் தொடர்ச்சியாக தூக்கி வைத்திருப்பதற்கு ஒத்ததாக பாவெலின் நிலை உள்ளது.

ஒரே குடும்பத்தினர் ஐவர் கோரக்கொலை

ஸ்ரீலங்கா பியகம மீகஹவத்த பொலிஸ் பிரிவின் தெல்கொட மஹவத்த எனும் சிங்கள கிராமத்தில் நேற்று அதிகாலை கோரத்தனமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் கூரிய ஆயுதங்களினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர், இச் சம்மவத்தில் படுகாயமடைந்த 11 வயதுடைய சிறுமி கே.டபிள்யூ.எம். தினூஷா மதுரங்கி ஆபத்தான நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கே.எம்.திலகரெட்ண - 36 வயது
எஸ்.டி.ரம்யலதா - 34 வயது
எஸ்.ஏ.டி.அமலவதி - 80 வயது
கே.டபிள்யூ.எம்.தில்ஷான் மதுவந்த - 8 வயது
கே.டபிள்யூ.எம்.சச்சிந்த லக்ஷான் - 4 வயது
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----